##~##

மிகச் சிறிய அளவில், குறைந்த விலையில் கடந்த அக்டோபரில் 'ஆகாஷ்’ கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை

'சிக்'னு ஒரு சி-பேடு!

3,000; மத்திய அரசின் மானியத்தில்

'சிக்'னு ஒரு சி-பேடு!

1,500-க்கு மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 'ஆகாஷ்’ கம்ப்யூட்டர் அளவிலேயே தற்போது அதிவேக கம்ப்யூட்டரை வடிவமைத்து அசத்தியுள்ளது கிருஷ்ணகிரியில் செயல்படும் 'விஷ§வல் மீடியா டெக்னாலஜிஸ்’ என்ற இணையதள சேவை நிறுவனம். இதற்கு 'சி-பேடு’ கம்ப்யூட்டர் என்று பெயரிட்டுள்ளார் இதை வடிவமைத்த முரளி.

 'வியாபார நோக்கம் இன்றி பள்ளிக் குழந்தைகளுக்காகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த கம்ப்யூட்டரை 'என் விகடன்’ மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துங்களேன்’ என்று ளீஷீஸ்ணீவீ@ஸ்வீளீணீtணீஸீ.நீஷீனீக்கு மெயில் அனுப்பி இருந்தார் முரளி. அவரை நேரில் சந்தித்தேன். முரளி வடிவமைத்திருந்த மினி கம்ப்யூட்டர் பெரிய சைஸ் செல்போன் அளவில்

'சிக்'னு ஒரு சி-பேடு!

இருக்கிறது. டெஸ்க்-டாப் மற்றும் லேப்-டாப் கம்ப்யூட்டர்களில் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் இதில் செய்ய முடிகிறது.

''செல்போனை போலவே இன்று கம்ப்யூட்டரும் அத்தியாவசிய சாதனம் ஆகிவிட்டது. பெரிய சைஸ் லேப்-டாப் கம்ப்யூட்டரை பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்வது சிரமம். அதனாலதான், 'ஆகாஷ்’ என்ற சிறிய கம்ப்யூட்டர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் ப்ராஸஸர் ஸ்பீடு 300 மெகா ஹெர்ட்ஸ் மட்டும்தான். அவசர பயன்பாடுகளுக்கு அந்த கம்ப்யூட்டர் சரியாகச் செயல்படாது.

எனவே, அதே சைஸில் அதிகப்படியான வேகத்துடன் ஒரு கம்ப்யூட்டரை வடிவமைக்கத் திட்டமிட்டோம். சாஃப்ட்வேர் உருவாக்கம், வெப் டிசைனிங், வெப் ஹோஸ்டிங் உள்ளிட்ட பணிகளை எங்கள் நிறுவனம் கடந்த ரெண்டு வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கு. எனக்கும் ரெண்டு ஆண்டுகள் இந்தத் துறையில் அனுபவம் உண்டு. அதை எல்லாம் கொண்டு தீவிர முயற்சி செஞ்சு இந்த சி-பேடு கம்ப்யூட்டரை உருவாக்கி இருக்கோம். இதன் ப்ராஸஸர் ஸ்பீடு 800 மெகா ஹெர்ட்ஸ். இதில் இரண்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 4.0 என்ற மேம்படுத்தப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்த முடியும். தினசரி வளரும் தொழில்நுட்பப் புரட்சிகளுக்கு ஏற்ப, இந்தியாவிலேயே நவீனத் தொழில் நுட்பங்களோடு குறைந்த விலையில் இதை வடிவமைச்சு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கோம். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் இது செயல்படும்.

'சிக்'னு ஒரு சி-பேடு!

மாணவர்கள் தங்கள் கற்றல் தேவைகளுக்கும், வியாபாரிகள் தகவல் தேடலுக்கும், மின் அஞ்சல் அனுப்பவும், மீடியா துறையினர் தகவல், போட்டோ, வீடியோ பரிமாற்றம் செய்யவும் இந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். போட்டோ எடிட்டிங், வீடியோ, ஆடியோ ரிக்கார்டர், தமிழ் டைப்பிங் போன்ற வசதிகளும் இருக்கு. மொத்தத்துல பெரிய கம்ப்யூட்டர்களுக்கு நிகராக இந்த சி-பேடு செயல்படும். மாற்றுத் திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களைச் சேர்த்திருக்கோம்.

'சிக்'னு ஒரு சி-பேடு!

மாணவ, மாணவியர்களுக்கு இந்த கம்ப்யூட்டரைத் தரும்போது, ஆபாசத் தளங்கள் திறக்காத வகையில் தடைகளையும் உருவாக்கிக் கொடுக்கிறோம். இணையத் தகவல் தொழில் நுட்பத் துறையில் வளர்ந்துட்டு இருக்கும்  இந்தியாவின் தொழில்நுட்பச் சந்தையை, மேம்பாடு அடையவைப்பதற்கான எங்களுடைய சிறிய பங்களிப்பா இந்த கம்ப்யூட்டரை நினைக்கிறோம். எங்க 'சி-பேடு’-ன் தற்போதைய விலை

'சிக்'னு ஒரு சி-பேடு!

5,000. எங்கள் நிறுவனத்துக்கு அரசு உதவி கிடைச்சா மானிய விலையில் சுமார்

'சிக்'னு ஒரு சி-பேடு!

3,000-த்துக்கு சி-பேடு கொடுக்க முடியும்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

அரசாங்கத்தின் கவனத்துக்கு!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு