Published:Updated:

வலையோசை : பொன்னியின் செல்வன்

வலையோசை : பொன்னியின் செல்வன்

வலையோசை : பொன்னியின் செல்வன்
##~##
சொ
ந்த ஊரைப் பற்றிப் பேசும்போது யாராக இருந்தாலும் ஒரு இன்ச் கூடுதலாக பேசுவது இயல்புதான். ஆனால், மதுரைக்கார மக்களுக்கு அது கொஞ்சம் அதிகம். சினிமாக்களில் சொல்வது போல எந்நேரமும் சண்டைக்கு அலையும் மனிதர்கள் இங்கே கிடையாது. வெள்ளந்தியான ஆட்கள். ஆனால், வம்பென்று வந்தால் ஒருகை பார்த்துவிடக்கூடியவர்கள்.

 வண்டி ஓட்ட வேண்டுமென்றால் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது ஆரம்பம் என்பதுபோல, பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்றால் ..க்காலி, ..த்தாளி என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் எனத் தீவிரமாக நம்பக்கூடிய நிறைய மக்கள் இங்கே உண்டு. அதே மாதிரியான இன்னொரு விஷயம் போஸ்டர் கலாசாரம். காதுகுத்து, மொட்டை, சாவு, கல்யாணம், கருமாதி எனப் பாகுபாடு இல்லாமல் எல்லா விஷயத்துக்கும் சகட்டுமேனிக்கு போஸ்டர்கள் தூள் கிளப்பும். ஆனால், பலமுறை அந்த போஸ்டர்களுக்கு எனத் தனியாக ஒரு ப்ரூஃப் ரீடர் இல்லையே என்று பார்ப்பவர்கள் மனம் கலங்க

வலையோசை : பொன்னியின் செல்வன்

நேர்வதும் உண்டு. 'அம்மாதான் ஆலனும் தமிள்நாடு நாலா வாலனும்’ என்கிற ரீதியில் ஆன போஸ்டர்களைப் பார்க்கும்போது தமிழ்ச் சங்கம்வைத்த மதுரை பற்றித் தெரிந்த மக்களுக்கு ரத்தக்கண்ணீர்கூட வந்துவிடும் வாய்ப்பு உண்டு.

ஆடி மாதம் வந்துவிட்டால் கோயில் திருவிழாக்களில் கட்டாயமாக நடன நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெறும். ராத்திரி 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அறிவிப்பு செய்பவர் பேசுவது மாதிரியான தமிழை நீங்கள் வேறெங்கும் கேட்க முடியாது. ''அடுத்ததாதாதாதாக வர்ர்ரர்ர்ர்ர்ர இருக்கும் பாஆஆஆஆடல் எங்கள் நடனக் குழுவின் சூஊப்பர் ஸ்தாஆஆர் ரஜினிகாந்தின் பாபா படப்பாடல்.'' விளக்குகள் எல்லாம் அணைத்துவிடுவார்கள். தாடிவைத்து தலைப்பாக் கட்டின ரஜினி, கெத்தாக மேடைக்கு நடுவே வந்து, முத்திரை காண்பித்தபடி நிற்பார். அவரைச் சுற்றி சீமெண்ணெய் ஊற்றி தீயைப் பொருத்திவிடுவார்கள். இனி பாபா எனப் பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும். ஒருமுறை இதுமாதிரி செய்யப் போய் ரஜினியின் காலில் தீப்பிடித்துக்கொள்ள அவர் பரதநாட்டியம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி. டூப்ளிகேட் கமல்கள், விஜய்கள், அஜித்கள் எனத் திருவிழா களைகட்டும். எந்த நாள் எந்தக் கோயிலில் திருவிழா நடனம் எனப் பட்டியல் போட்டுக்கொண்டு போய் பார்த்த காலமும் உண்டு!

ழுத்தாளர் ஆக 'நமக்கு நாமே' திட்டம்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா, எங்க இருந்து ஆரம்பிக்கிறது?

முதல்ல எழுதுறதுக்கான சூழலை உருவாக்கணும். அடுக்கிவெச்சு இருந்த துணிகள், சாமான் எல்லாத்தையும் கலைச்சுப்போட்டு வீடு முழுக்கப் பரப்பி விட்டாச்சு. பப்பரக்கான்னு கிடந்தாத்தானே கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், பின்னாத நவீனத்துவம் எல்லாமே.. அடுத்தது, எழுத்தாளனுடைய உடமைகள்.

வலையோசை : பொன்னியின் செல்வன்

அழுக்கு ஜிப்பா, இத்துப் போன ஜோல்னா பை, நல்ல தடியான கண்ணாடி, காந்தி காலத்து பேனா, கிலோ கணக்குல பேப்பர்.. செட் பிராப்பர்டி எல்லாத்தையும் எறக்கியாச்சு. அத்தோட கைல பேனாவோட வானத்த வெறிக்கிற மாதிரி, ஜிப்பாவோட சைக்கிள் ஓட்டிக்கிட்டு வர மாதிரி, ஆளே இல்லாத ரோட்டுல அலப்பறையா நடந்து வர்ற மாதிரி போட்டோவும் எடுத்தாச்சு. நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பு அனுபவம் முக்கியம். அதனால மைய நூலகத்துல யாருமே படிக்காத புத்தகங்கள் எங்க இருக்குனு தேடிப் பிடிச்சு படிக்க ஆரம்பிச்ச போதுதான் அவர் எனக்கு அறிமுகமானாரு. புரட்சிக் கவிஞர் இடிமுட்டி. ஆகா.. நமக்குப் புரட்சிக் கலைஞர் தெரியும்.. அது யாருடா இந்தப் புரட்சிக் கவிஞர்?

புத்தகத்த எடுத்துப் பார்த்தவன் அப்படியே மிரண்டுட்டேன்.30, 40 பேரு முன்னுரை எழுதி இருக்காங்க. 'இடிமுட்டியின் இடிமுழக்கம்’னு ஒருத்தர் ஆய்வு நூல் எழுதி இருக்காராம். 'என் புத்தகங்களின் மீதான ஆய்வுகள் பற்றிய கருத்துத் தெறிப்புகள்’னு இடிமுட்டியே ஒரு புத்தகம் போட்டிருக்காரு. அடேங்கப்பா.. ரொம்பப் பெரிய ஆள்தான் போலனு படிக்க ஆரம்பிச்சேன்.

முதல் கவிதையே டெரர்தான்.

ஓ உலக இளைஞனே,
பார்க்க எடுப்பாக
இருப்பதைவிட,
நாலு பேருக்கு
எடுத்துக்காட்டாக நீ
இருந்தால் நாடு செழிக்கும்!

காதல் கவிதைகள்ல எப்படி பட்டையைக் கௌப்புறாரு பாருங்க..

பூவும் பொண்ணும் ஒண்ணு
அறியாதவன் வாயில மண்ணு
வானில் இருப்பது வெண்மதி
என் காதலே எனக்கு வெகுமதி

எனக்குப் படிக்கப் படிக்கச் சந்தோஷமா இருக்கு. கவிதை எழுதுறது இம்புட்டு ஈசியா? வெளில வானத்துல ஒரு காக்கா கத்திக்கிட்டே பறந்து போகுது. உடனே எழுதுனேன் ஒரு கவிதை.

ஏ காகமே,
இந்தக் கேடு கெட்ட மனிதர்களோடு
பேச மாட்டேன் என
சொல்வதற்காகத்தான்
(டூ)கா (டூ)கா
என்று கரைகிறாயோ?

அடுத்த கட்டுரைக்கு