Published:Updated:

மே 14ல் பிளஸ்-2, மே 25ல் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

சென்னை, ஏப்.23,2011

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ##~~##

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று கூறுகையில், "பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படும்.

பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டன. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

தேர்வு முடிவுகள் அரசு சார்பில் பள்ளிக்கல்வி இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவை பார்க்க முயற்சிக்கும் போது, அது முடங்கி விடுகிறது. இதனால், தேர்வு முடிவை உடனே அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மாணவர்கள்-பெற்றோரின் சிரமத்தை தவிர்க்க கூடுதலாக மேலும் சில இணையதளங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலனை செய்து வருகிறோம்," என்றார் சபீதா.