Published:Updated:

வலையோசை : தேடித் திரிவோம் வா!

வலையோசை : தேடித் திரிவோம் வா!

வலையோசை : தேடித் திரிவோம் வா!

ஆழ்வாரும் அப்துல் கலாமும்!

வலையோசை : தேடித் திரிவோம் வா!

ரு நூலகம் செய்ய வேண்டியப் பணியைக் கால் நூற்றாண்டு காலமாகச் செய்துவருகிறார் மயிலாப்பூர் ஆழ்வார் தாத்தா. இவர், மயிலையின் அடையாளங்களில் ஒன்று. இந்த 78 வயதான தாத்தாவைச் சந்திக்கச் சென்றபோது, லேசான மழை. புத்தகங்கள் நனைந்துவிடாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாயால் மூடிய ஆழ்வாரின் மனைவி மேரி, ''எங்களுக்கு மூணு பொம்பளைப் புள்ளைங்க. இந்தக் கடையை நடத்தித்தான் அவங்களைக் கரையேத்தினோம். முன்னமாதிரி இவரால் நடமாட முடியலை. ஒரு வருஷமா ஆஸ்பத்திரியும் வீடுமாத்தான் இருக்கோம். போலீஸ்காரவங்க பண்ற தொல்லை, மழைனு புத்தகங்களைப் பாதுகாக்குறது பெரியப் போராட்டமா இருக்கு. இவர்கிட்ட புத்தகம் வாங்கிப் படிச்ச எத்தனையோ பேர் இன்னைக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.னு பெரிய பதவிகள்ல இருக்காங்க. அவங்கள்ல யாராவது, இந்தப் புத்தகங்களைப் பாதுகாக்க பக்கத்துல எங்கேயாவது ஒரு கொட்டகை போட்டுக்க அனுமதி வாங்கித் தந்தாங்கனாப் புண்ணியமாப் போகும்'' என்று கண்ணீர்விட்டார். 'ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?'' என்றதும் தன் மனைவியை அழைத்து, கலாமின் சுயசரிதையான 'அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தை எடுத்து வரச்சொல்லி அதை தன் நெஞ்சில்வைத்த ஆழ்வார், 'இப்ப எடுங்க’ என்பதுபோல் சைகை செய்தார். அப்போது எனக்கு ஆழ்வாரும் அப்துல் கலாமாகத்தான் தெரிந்தார். என்னைப் போல் ஆழ்வாரிடம் புத்தகங்களை வாங்கிப் படித்தவர்கள் அவருக்கு உதவினாலே போதும், இங்கு இன்னும் பல கலாம்கள் உருவாகுவார்கள்!

வயலும் வாழ்வும்!

வலையோசை : தேடித் திரிவோம் வா!

'தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்...’ 1980-களின் தொடக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் இந்தப் பாடல் ஏகப் பிரபலம். இது, சென்னை தொலைக்காட்சியில் வரும் 'வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியின் டைட்டில் சாங். சென்னை தொலைக்காட்சி நிலையப் பயிற்சிக்குச் சென்ற நாட்களில், 'இந்த வயலும் வாழ்வு நிகழ்ச்சியை எப்படி தயாரிக்கிறாங்கன்னு பாத்தேபுடணும்’ எனப் பயங்கர ஆவல். இன்னும் ஓரிரு வாரங்களில் பணி ஓய்வுபெற இருப்பவர்தான் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். மெதுவாகப் பேச்சுக் கொடுத்ததும், 'மவனெ மாட்னியா நீ’ என நினைத்துக்கொண்டவரைப் போல, 'லொடலொட’வென பேசத் தொடங்கினார். பேரன் வயதிருந்தாலும் 'தம்பி’ என என்னை உரிமையோடு விளித்துப் பேசியது என்னைவிட அவருக்குப் பிடித்து இருந்தது. ''தம்பி அந்த நிகழ்ச்சி இப்ப 'வயலும் வாழ்வும்’கிற பேர்ல வர்றது இல்லை. 'பொன்விளையும் பூமி’ங்கிற பேர்லதான் வருது'' என்றார். ''உங்க நிகழ்ச்சிகள்ல ஆங்கில வார்த்தைகளை அதிகமாகக் கலந்து பேசுறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கே'' என்றதும் கடுமையாகக் கோபப்பட்டவர், ''படிச்சவங்க, படிக்காதவங்கனு எல்லாரும்தான் இங்கிலீஷ் பேசுறாங்க. எல்லாத்தையும் தமிழ்ப் படுத்தினால் விவசாயம் படுத்துடும் தம்பி'' எனச் சிரித்து பயமுறுத்தினார். இருந்தாலும் பயம்கொள்ளாமல் என் அடுத்த டார்கெட்டான 'ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என விசாரிக்க ஆரம்பித்தேன்!

''ரஜினி ஜப்பான் வருவார்!''

வலையோசை : தேடித் திரிவோம் வா!

பேராசிரியர் ஹிரோசி யமாஷிடோ. சென்னை பல்கலைக்கழகத்தில் 1987-ம் ஆண்டு இந்தியத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஜப்பான் டோஹகு பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர். ஆரம்பத்தில் சம்ஸ்கிருதம் கற்றவர், திராவிட மொழிகளில் ஒன்றையாவது கற்க வேண்டும் என்ற ஆசையில் 1981-ல் சென்னை பல்கலையில் சேர்ந்து தமிழைக் கற்று இருக்கிறார். சென்னை வந்திருந்த இவரை, தி.நகர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். இவருடன் தமிழிலேயே உரையாடியது அங்கு இருந்த பலருக்கும் விநோதச் செயலாகவே பட்டது. இரண்டரை மணிநேரம் நீடித்த எங்களுடைய உரையாடலில், தமிழ் இலக்கியம், சினிமா, ஜப்பான், சுனாமி, புகுஷிமா என, ஏகப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அன்றைய சென்னை பல்கலைக்கழகத் தத்துவத் துறையில் டி.எம்.பி.மகாதேவன், பி.கே.சுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் பாடம் கற்ற நாட்களை நினைவுகூர்ந்தவர், பல்கலைக்கழகத்தில் பயிலும்போது மதுரை தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் பேச அழைத்ததையும் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு மாலை போட்டு மரியாதை செய்தததையும் சிகப்பு நிற ஆடை அணிந்து மெரினா கடற்கரை ஆதிபராசக்தி கூட்டங்களில் பங்கேற்றதையும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் போல், ஜப்பானின் ஹைக்கூ வடிவமும் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார். ரஜினியின் 'முத்து’ படம் 'டான்சிங் மகாராஜா’ என்ற பெயரில் ஜப்பானில் வெளியிட்டபோது, அந்தப் படத்துக்கு ஜப்பான் மொழியில் சப்-டைட்டில் எழுதியது இவர்தான். ஜப்பானில் 'எந்திரன்’ வெளியாகும்போது, ரஜினி ஜப்பான் வருவார் என்று ஜப்பானியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்!

அது ஒரு தட்டச்சுக் காலம்!

வலையோசை : தேடித் திரிவோம் வா!

கோதரிகள் இருவருக்கும் துணையாக இருக்கட்டுமே என்று என்னை என் சித்தப்பா தட்டச்சு வகுப்பில் சேர்த்துவிட்டார். சகோதரிகள் இருவரும் ஆங்கிலம் லோயர். அடியேனுக்கு ஆங்கிலம் அலர்‑ஜி என்பதால் தமிழ் லோயர் சேர்ந்தேன். ய..ள..ன..க..ப..க ..ட்..ம..த..தா..த என, என் குச்சி விரல்கள் வலிக்க டொக்கு... டொக்கென தட்டச்சு கற்றது நினைவில் உள்ளது. சரியாகப் பத்தாண்டுகள் கழித்து இன்று பிராட்வேயில் அரை நூற்றாண்டுப் பழமையான டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஒன்றுக்குச் சென்றேன். இன்ஸ்டிட்யூட்டில் 50-க்கும் மேற்பட்ட தட்டச்சு இயந்திரங்கள் உறங்கிக்கொண்டு இருந்தன. அங்கு கடந்த 40 ஆண்டுகளாகத் தட்டச்சுக் கற்றுத்தரும் 73 வயது பெரியவர் நம்மாழ்வாரிடம் பேசிக்கொண்டு இருந்த ஒன்றரை மணி நேரத்தில், ஒரே ஒரு யுவனும் யுவதியும் மூலைக்கு ஒருவராக அமர்ந்து தூக்கத்தில் இருந்த தட்டச்சு இயந்திரங்களைத் துயில் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ''ஒரு காலத்துல இந்த இன்ஸ்டிட்யூட்ல ஜேஜேனு கூட்டம் அப்பும். ஆனால், கம்ப்யூட்டர் வந்தபிறகு எல்லாம் கனவாப் போயிடுச்சு தம்பி'' என்றார் நம்மாழ்வார். கோத்ரேஜ் நிறுவனம், டைப்ரைட்டர் தயாரிப்பைக் கடந்த ஆண்டோடு நிறுத்திவிட்டது என்பதும், கோத்ரேஜ்தான் டைப்ரைட்டரைத் தயாரித்த உலகின் கடைசி நிறுவனம் என்பதும் கொசுறுத் தகவல்!

வலையோசை : தேடித் திரிவோம் வா!
அடுத்த கட்டுரைக்கு