Published:Updated:

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

தயான் சந்த் : மறக்கப்பட்ட ஹாக்கி வீரன்!

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றவுடன் சச்சினுக்குப் 'பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்த நேரத்தில் பல்பீர் சிங் என்ற முன் னாள்  ஹாக்கி வீரர், 'சச்சினுக்கு வழங்குவதற்கு முன் தயான் சந்துக்குப் 'பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும்’ எனச் சொல்லி இருக்கிறார். யார் அந்த தயான் சந்த்?

'ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி’ என அந்தக் காலத்துப் பத்திரிகைகள் இவரை வர்ணித்தன. இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்றுவரை ஹாக்கி விளையாடியது இல்லை. 1928, 1932, 1936 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணி தங்கம் வெல்ல இவர் முக்கியக் காரணம். இந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ஒரு தங்கத்தைத் தவிர வேறு எந்தப் பதக்கமும் நாம் வாங்கவில்லை. 1936-ல் பெர்லினில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது, 'இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மாயா ஜாலங்களைக் காண அரங்கத்துக்கு வாருங்கள்’ என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்தியா ஜெர்மனியை  எட்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கி தங்கம் வென்றது. இதில், தயான் சந்த் அடித்த கோல்கள் மூன்று. தயான் சந்தின் திறமையைப் பார்த்த ஹிட்லர், ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கர்னல் பதவியும் தருவதாகச் சொல்லி இருக்கிறார். அந்தச் சலுகையை தயான் சந்த் மறுத்துவிட்டார்!

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

துரையைத் தலைநகராகக்கொண்டு தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்ட திருமலை நாயக்கரின் மகால் மதுரையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திருமலை நாயக்கர் எங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் தெற்கு ரத வீதியில் ஒரு சிறிய அரண்மனையைக் கட்டி இருந்தார் என்பது பிரபலமாகாதத் தகவல். கடந்த 2005-ம் ஆண்டு வரை நீதிமன்றமாக இயங்கிக்கொண்டு இருந்த இந்த அரண்மனை, சீர் செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள், மதுரை மண்டலம், திருநெல்வேலி மண்டலம், நடு மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் நடு மண்டலத்தின் தலைநகர்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர். ஆண்டாளைத் தரிசிக்க வரும் திருமலை நாயக்கர் தங்குவதற்கு வசதியாகத்தான் இந்த அரண்மனை கட்டப்பட்டதாம். திருமலை நாயக்கர் பற்றிய சுவாரஸ்யமான மற்றொரு தகவல்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சி கால பூஜை முடிந்ததும்தான் மதுரையில் இருக்கும் நாயக்கர் மதிய உணவு உண்பார். பூஜை முடிந்த தகவலைச் சொல்வதற்காக  ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை கல்லால் ஆன மணி மண்டபங்கள் பலவற்றைக் கட்டினார்.  பூஜை முடிந்ததும் கோயிலில் மணி ஒலிக்கப்படும். அந்த ஒலி முதல் மணி மண்டபத்தில் இருக்கும் ஆளின் காதில் விழுந்ததும் அங்கு உள்ள மணி மூலம் ஓசை எழுப்பப்படும். இப்படியே இந்தத் தகவல் அடுத்தடுத்த மணி மண்டபங்கள் மூலம் மதுரைக்குச் சென்றுவிடும். இந்த மணி மண்டபங்களை  இப்போதும் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மதுரை நெடுஞ்சாலையில் காணலாம்!

காதலையும் நகைச்சுவையையும் கலந்து சொன்ன சில திரைப்படங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்

'ரோமன் ஹாலிடே’ (1953): வீட்டைவிட்டு ஓடிவரும் ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெண்ணும், பத்திரிகை நிருபரும் ஒருநாள் முழுவதும் ஒன்றாகக் கழிக்கின்றனர். அப்போது நடக்கும் கூத்துகளும்  அவர்களுக்கிடையே மலரும் காதலும்தான் படம். ஷங்கரின் 'காதலனு’க்கு இந்தத் திரைப்படம்தான் தூண்டுகோல்!

'வென் ஹாரி மெட் சாலி’ (1989): ஆண், பெண் பழகும்போது ஏற்படும் சிக்கல்களைப் பற்றி படம் விவாதிக்கிறது. 'ஆணும் பெண்ணும் நண்பர்களாகப் பழக முடியாது’ என்பது போன்ற  விவாதங்களிலேயே படம் நகர்கிறது. நடிகை மெக் ரையன் நடித்த சிறந்த படங்களில் ஒன்று!

'ஸ்லீப்லெஸ் இன் ஷெட்டில்’ (1993): இதுவும் மெக் ரையன் நடித்த திரைப்படம்தான். நிச்சயிக்கப்பட்ட பெண், மனைவியை இழந்த ஒருவனுடைய பேச்சை வானொலியில் கேட்டுவிட்டு அவன் மேல் காதல்கொள்ளும் கதை. பெண்களுடைய உலகத்தை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது என்கிறது இந்தப் படம்!

'அமெரிக்கா’ஸ் ஸ்வீட் ஹார்ட்ஸ்’ (2001): ஜூலியா ராபர்ட்ஸ் நடித்தது. இவருடைய தங்கையும் கதாநாயகனும் ஹாலிவுட்டின் காதல் பறவைகள். அந்தக் காதல் முறிந்து கதாநாயகன் இவர் பக்கம் வருவதுதான் கதை!

வலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்
அடுத்த கட்டுரைக்கு