Published:Updated:

சாய்பாபா உடலுக்கு சச்சின் இறுதி அஞ்சலி

Vikatan Correspondent

புட்டபர்த்தி, ஏப்.25,2011

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடலுக்கு அவரது பக்தரான இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். ##~~##

சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரசாந்தி நிலையத்துக்கு சச்சின் டெண்டுல்கர் இன்று காலை தனது மனைவி அஞ்சலியுடன் வந்தார்.

சாய்பாபாவின் உடல் இருக்கும் அறைக்கு கண்ணீருடன் சென்ற இருவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு சிறிது நேரம் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.