Published:Updated:

'பெத்தாங்!'

##~##

பெத்தாங் - இது ஏதாவது டான்ஸ் ஸ்டைலா அல்லது இத்தாலிய உணவு வகையா என்று மண்டையைப் போட்டு உருட்டிக்கொள்ள வேண்டாம். புதுவையில் விளையாடப்படும் பிரெஞ்சு விளையாட்டுதான் இது. 1907-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூலெஸ் லீனோர் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் 'பெத்தாங்’. பழங்காலத்தில் மரப் பந்துகளைவைத்து கிரேக்கர்கள் விளையாடிய ஒரு விளையாட்டுதான் பெத்தாங்குக்கு முன்னோடி என்று சொல்லலாம். கிரேக்கர்களுடைய இந்த விளையாட்டு, ரோம் வழியாகத் தெற்கு பிரான்ஸுக்குச் சென்று, அங்கு பெத்தாங்காக மாறியது. பிரான்ஸில் மரப் பந்துகளுக்குப் பதில் இரும்புப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

 இரு அணிகளாக இரண்டு பேர், நான்கு பேர், ஆறு பேர் வரை இதில் விளையாட முடியும். முதலில் 'பூவா, தலையா’ போட்டு யார் வெல்கிறார்களோ அவர்கள் சிறிய பிளாஸ்டிக் பந்தை உருட்டிவிட வேண்டும். (படத்தில் பச்சை நிறத்தில் இருப்பது). பின் போட்டியாளர்கள் தங்களிடம் இருக்கும் இரும்புக் குண்டுகளை உருட்டிவிடுவர். எந்த அணியினருடைய குண்டுகள் சிறிய பிளாஸ்டிக் பந்துக்கு மிக அருகில் இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். புதுச்சேரியை விட்டு வெளியேறிய பிரெஞ்சுக்காரர்கள் புதுவை மண்ணில்விட்டுச் சென்ற பல கலாசார விஷயங்களில் 'பெத்தாங்’கும் ஒன்று. புதுச்சேரி கடற்கரை சாலையில் மாலை நேரங்களில் பெரிய சைஸ் பந்துகளுடன் பெத்தாங் விளையாடுபவர்களைப் பார்க்க லாம்.    

'பெத்தாங்!'

பெத்தாங் விளையாட்டைப் பற்றி மேலும் அறிய, புதுவை மாநில பெத்தாங் விளையாட்டுச் சங்கத் தலைவர் மைக்கேல் பாலிகேவிடம் பேசினேன். ''புதுவையில இருந்து பிரான்ஸ் ராணுவத்துல போய்ச் சேர்ந்தவங்க மூலமாத்தான் இந்த விளையாட்டு புதுவைக்கு வந்து சேர்ந்துச்சு. இன்னமும் பிரான்ஸ்ல

'பெத்தாங்!'

பெத்தாங் புகழ்பெற்ற விளையாட்டு. நம்ம ஊர் ஐ.பி.எல். போல பிரான்ஸ்ல பெத்தாங் போட்டி வருஷா வருஷம் திருவிழாபோல நடக்கும். எங்க சங்கத்துல இருந்தும் நிறையப் பேர் பிரான்ஸ் போய் விளையாடி இருக்கோம். பிரான்ஸுக்கு அடுத்தபடியா புதுவையிலதான் பெத்தாங் விளையாடுறோம். இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் இந்த விளையாட் டைப் பார்க்க முடியாது. பெத்தாங் குண்டு களும் இங்கே தயாரிக்கப்படறது கிடையாது. எல்லாம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு இங்கே இறக்குமதி ஆகுது.

ஆறு முதல் 10 மீட்டர் இடைவெளியில், முதலில் கிஷ்னி எனப் படும் பிளாஸ்டிக் குண்டை எறிவோம். அதன் பிறகு இரும்புக் குண்டை பிளாஸ்டிக் குண்டுக்கு ரொம்பப் பக்கத்துல யார் எறியுறாங் களோ அவங்களுக்கு பாயின்ட். 13 பாயின்ட் எடுத்தவர் வின்னர். எந்த அணி அதிக பாயின்ட் எடுக்குதோ அதுதான் வெற்றி பெற்ற அணி. ஒவ்வொரு குண்டும் 650-ல இருந்து 800 கிராம் வரை எடை இருக்கும். தினமும் மாலையில் ஐம்பது பேர் இங்கே விளையாடுவோம். அதிக எடையுள்ள இரும்புப் பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடறதால இது நல்ல உடற்பயிற்சியும் கூட'' என்கிறார்.

- நா.இள.அறவாழி, ஆ.நந்தகுமார்  
படங்கள்: ஆ.நந்தகுமார்