Published:Updated:

தாகூர் 150.. புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியீடு

Vikatan Correspondent

ஏப்.25, 2011

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் புதிய 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ##~~##

இந்த நாணயத்தின் முன்புறத்தில் அசோகா தூணின் சிங்க முகம் இடம் பெறுகிறது. மையப் பகுதியில் சிங்க முகத்தின் கீழே மதிப்பு இலக்கம் ஐந்து என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் பின்புறம் ரவீந்திரநாத் தாகூர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்குக் கீழே 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் 1861 - 2011 பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்திய நாணயச் சட்டம் 1906-ன் படி இதுவும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 5 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.