Published:Updated:

இந்தியர்கள் சுவிஸ் கணக்கு விரைவில் அம்பலம்:அசாஞ்ச்

புதுடெல்லி, ஏப்.26,2011

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை விரைவில் விக்கிலீக்ஸ் வலைத்தளம் மூலம் அம்பலப்படுத்தவுள்ளதாக, அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்தார். ##~~##

இதுகுறித்து டைம்ஸ் நவ் சேனலுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில்,  "நாங்கள் விரைவில் வெளியிடவுள்ள சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்குகள் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியர்களின் பெயரும் உள்ளன. 

கறுப்புப் பணம் விஷயத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. இதில் இன்னும் அதிக தீவிரம் காட்ட வேண்டியது அவசியம்," என்றார் அசாஞ்ச்.

மேலும், அமெரிக்க தூதரகங்களின் கேபிள்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு வாசித்த அறிக்கை குறித்து அசாஞ்ச் கூறுகையில், "உலக அரங்கில் எங்களைப் பற்றி கூறப்பட்ட மோசமான கருத்து அது," என்றார்.

கறுப்பு பண விவகாரத்தில் அரசின் மெத்தனப்போக்கை அசாஞ்ச் சுட்டிக்காட்டியது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் கேட்டதற்கு, ஒரு தனிப்பட்ட நபர் வெளியிட்ட வதந்திக்கு காங்கிரஸ் பதிலளிக்காது என்று கூறினார்.