என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

மனைவி கேட்டாள்...

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

''இன்றென்ன வேலை உங்களுக்கு?'
''ஒன்றுமில்லை' என்றேன் நான்.
''நேற்று செய்ததும் அதுதானே' அவள் சொன்னாள்.
'இன்னும் முடியவில்லையே' என்றேன் நான்.
இளைஞனாக இருப்பது இனிமையானது.
முதியவனாக இருப்பது வசதியானது!

வயசானா இப்படித்தான்!

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

ஒரு வயதான தம்பதி படுக்கையில் படுத்திருந்தனர். கணவருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஆனால், மனைவியோ பழங்கதைகள் பேச ஆரம்பித்தாள். ''நாம் காதலித்த காலத்தில், தனிமையில் இருக்கும்போது நீங்கள் என் கைகளைப் பிடிப்பீர்கள்' என்றாள். கணவர் சரியென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டார். அடுத்து அவள் சொன்னாள், ''பின் என்னை முத்தமிடுவீர்கள்.' அவர் எரிச்சலுடன் அவள் கன்னத்தில் உதட்டை ஒற்றியெடுத்தார். அவள் சொன்னாள், ''என் கழுத்தில் செல்லமாகக் கடிப்பீர்கள்'. அவர் படுக்கையில் இருந்து எழுந்து புறப்பட்டார். ''எங்கே போகிறீர்கள்?' என்று அவள் கேட்டாள். அவர் சொன்னார், ''போய் என் பல்செட்டை மாட்டிக்கொண்டு வருகிறேன்!''

குழந்தை பீர் தெரியுமா?

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, 'பீர்’ தெரியும். ஆனால், 'குழந்தை பீர்’ தெரியுமா? குடித்துப் பார்க்க வேண்டுமா? பஞ்சாபுக்குத்தான் போக வேண்டும். அருகே உள்ள விளம்பரப் பலகையைப் பாருங்கள்!

இதைப் பார்க்கும்போது, ஜோக் ஒன்று நினைவுக்குவருகிறது.  அமர்சிங் ஒரு புதிய ஊரில் பாருக்குச் சென்றார். அந்த ஊர் பாரில், புதியவர்கள் யாரும் வந்தால் அங்கிருப்பவர்கள் ஏதாவது தொல்லைகொடுப்பது வழக்கம். அமர்சிங் குடித்து முடித்த பின் வெளியே சென்றார். அவருடைய மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. மீண்டும் உள்ளே வந்தார். சத்தமாகக் கடுமையாகச் சொன்னார், ''நான் இன்னும் ஒரு கோப்பை மது அருந்தப் போகிறேன். அதற்குள் என் பைக் வர வேண்டும். இல்லையெனில், நான் பாட்டியாலாவில் என்ன செய்தேனோ அதைச் செய்துவிடுவேன்.'

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அமர்சிங் குடித்து முடித்து வெளியே சென்று பார்த்தார். பைக் நிறுத்தப்பட்டு இருந்தது. அதை உயிர்ப்பித்துப் புறப்படத் தயாரானார். அவர் பின்னாலேயே வெளியே வந்த பார், மேலாளர் கேட்டார், ''சார், பாட்டியாலாவில் என்ன செய்தீர்கள்?' அமர்சிங் சொன்னார் ''நடந்தே வீடு திரும்பினேன்!''

காலத்துக்குக் காலம் கொடுங்கள்!

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

 காலம் எல்லாக் காயங்களையும் ஆற்ற வல்லது. காலத்துக்குக் கொஞ்சம் காலம் கொடுங்கள், செயலாற்றுவதற்கு!

எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பது இல்லை. உடன்பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்துகொள்ளுங்கள்!

 மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைப்பது உங்கள் வேலையல்ல!

நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/ மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும் மாறும்!

 வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் அதில் பயில வந்திருக்கிறீர்கள். தேர்வுகளில் வெற்றி பெறுங்கள். பிரச்னைகள் பாடத்திட்டத்தின் பகுதியே. அவை வகுப்புகள்போல் வந்து போகும். ஆனால், கற்றுக்கொண்டவை உங்களுடன் நிற்கும்!

 உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது!

வாழும் நாள் கொஞ்சமே. அதில் பிறரை வெறுப்பதற்குச் செலவிட நேரமேது?

 அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது... நம்புங்கள்!

சிங்கமா? குரங்கா?

வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

கென்யாவில் ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது. மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம் அது. சிங்கத்துக்கு ஆட்டுக் கறி அளிக்கப்பட்டாலும், அது போதவில்லை. தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது. ஒருநாள் துபாயின் மிக வசதியான மிருகக் காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர், அந்தச் சிங்கத்தைத் துபாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அந்தச் சிங்கத்துக்கு மிக மகிழ்ச்சி. வசதியாக வயிறு நிறைய நல்ல ஆட்டுக் கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது. துபாய்க்குச் சென்றதும் முதல்நாள் சிங்கத்துக்கு உணவு வழங்கப்பட்டது. அதற்கு ஏமாற்றம். 10 வாழைப்பழங்கள். இட மாற்றத்தினால் ஜீரணம் ஆவது பிரச்னையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்பார்கள் என நினைத்தது. ஆனால், தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது. மறுநாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது, ''நான் சிங்கம். எனக்கு இப்படியா உணவளிப்பது?' அவன் சொன்னான் 'நீ சிங்கம்தான் தெரியும். ஆனால், நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் 'விசா’வில்!''

நீதி : வெளிநாட்டில் குரங்காக வாழ்வதைவிடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!