என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

வலையோசை : சமுத்ரா

வலையோசை : சமுத்ரா

வலையோசை : சமுத்ரா

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

வலையோசை : சமுத்ரா

வாழ்க்கை போரடிக்கிறது, செய்ததையே செய்துகொண்டு, பார்த்ததையே பார்த்துக்கொண்டு! நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் காணும் எக்ஸ்ட்ரா - ஆர்டினரி விஷயங்கள் ஒரு விதத்தில் இந்த சலிப்பின் வெளிப்பாடுகள்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பஸ்ஸில் ஏறி உலக மகா சலிப்போடு ஆபீஸுக்கு வந்துகொண்டு இருக்கும்போது, ஒரு வானளாவிய மிருகம் ஹாயாக ரோட்டில் நடந்து வந்துகொண்டு இருந்தால், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி நம்மை கடிப்பதற்குத் துரத்தினால் எப்படி இருக்கும்? ஒரு ஞாயிறு மாலை வீட்டின் பின்புறத்தில் ஒரு வட்ட வடிவ வாகனத்தில் நீல நிறக் குள்ள உருவம் வந்து இறங்கி, நம்மைப் பார்த்து கை அசைத்தால் எப்படி இருக்கும்? இப்படி எல்லாம் எதுவுமே நடக்காமல் வாழ்க்கை ரொம்பவே சலிப்பாக நகர்கிறது போங்கள்!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

வலையோசை : சமுத்ரா

சில பேர் பஸ்ஸில் ஏறி ஒரு (ஜன்னல்) சீட் கிடைத்துவிட்டால்போதும், டிக்கெட் கூட வாங்காமல் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். டெர்மினல் வந்தபோதும் சீட்டில் குறட்டைவிட்டு ஜொள் ஒழுக நித்திரா தேவியை அணைத்துக்கொண்டு இருக்கும் ஒரு பயணி, கண்டிப்பாக ஒவ்வொரு பஸ்ஸிலும் இருப்பார். அது ஏனோ தெரியவில்லை சில பேருக்கு சலூனில் போய் அமர்ந்த உடனேயே வராத தூக்கம் எல்லாம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. தலையில் கத்திரியைவைத்ததும் தாலாட்டுப் பாடுவதுபோல இருக்குமோ என்னவோ. சரி, என்னதான் சொன்னாலும் காலை 11 மணி அளவில் ஒரு விதமான பசி கலந்த கண் மயக்கம் வருமே? அதற்கு இணையாக எதையும் சொல்லவே முடியாது போங்கள். ஆபீஸில் உட்கார்ந்து கொண்டு என்ன எழுதிக்கொண்டு இருக்கிறேன் பாருங்கள்?!

மரண தேவனின் தூக்கம்!

வலையோசை : சமுத்ரா

ருநாள் ஓர் இளைஞனை மரணம் நெருங்கி, 'இன்று உன் நாள்’ என்றது. அவன் மிகவும் பயந்துபோய், 'எனக்கு வயதே ஆகவில்லையே?’ என்றான். மரணம், 'அதெல்லாம் தெரியாது; இன்று உன் நாள். என் பட்டியலில் உன் பெயர்தான் அடுத்து உள்ளது’ என்றது. அவன், 'சரி, நான் உன்னுடன் வருகிறேன். நீ மிகவும் களைத்து இருக்கிறாய். கொஞ்சம் ஏதாவது குடித்துவிட்டு ஓய்வெடு’ என்றான். மரணம் ஒப்புக்கொண்டது. அவன் மரணத்துக்குப் பழ ரசம் வாங்கிவந்தான். அதில் தூக்க மாத்திரையைக் கலந்துவிட்டான். மரணம் சில மணி நேரம் தூங்கிவிட்டது. அதற்குள் அந்த ஆள் அதன் பட்டியலை எடுத்து அதில் முதலில் இருந்த தன் பெயரைக் கடைசியில் எழுதிவிட்டான். கடைசிப் பெயர் வர ரொம்ப வருடம் ஆகும் என்று நினைத்துக்கொண்டு.

மரணம் விழித்துக்கொண்டு, 'மிக்க நன்றி. புத்துணர்வாக உணர்கிறேன். என்னை யாருமே இப்படி உபசரித்தது இல்லை. எல்லாரும் திட்டவே செய்தார்கள். எனவே, உனக்கு ஒரு உதவி செய்ய நினைக்கிறேன். என் வேட்டையைப் பட்டியலின் கடைசி பெயரில் இருந்து ஆரம்பிக்கிறேன்’ என்றது!

வஸ்து வாஸ்து!

வலையோசை : சமுத்ரா

ம் வீட்டை எப்போதாவது சுத்தம் செய்யும்போது, சில வஸ்துக்கள் வாஸ்து பார்த்துவைத்ததுபோல, ஓர் இடத்தில் அகப்படும். அவற்றை இருக்கட்டும் என்று வைத்துக்கொள்ளவும் முடியாது. வேண்டாம் என்று வீசி விடவும் முடியாது. உதாரணமாக, அரதப் பழசான டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன், மொபைல் வாங்கிய அட்டைப் பெட்டி, கல்யாணப் பத்திரிகை... சில வீடுகள் இப்படி தேவை இல்லாத, அதே சமயம் தேவையும் உள்ள பொருட்களாலேயே பாதி அடைக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கு நம் உறவுகளில் பெரும்பாலானவை இந்த நிலைமையில்தான் உள்ளன. 'உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று ஒதுங்கி இருக்கவும் முடியாது. அதேசமயம், 'நீதான் எல்லாம்’ என்று போய் அப்பிக்கொள்ளவும் முடியாது!

அஜய் அலம்பல்ஸ்!

வலையோசை : சமுத்ரா

டாக்டர் அஜய் ஒரு பேக்கரிக்குச் சென்று மினரல் வாட்டர்    வாங்குகிறார்.

அஜய்: டேய், யார ஏமாத்தப் பார்க்கற? இந்த மினரல் வாட்டருக்கு  ஃப்ரீ அயிட்டம் எங்கே?

கடைக்காரர்: மினரல் வாட்டருக்கு எல்லாம் ஃப்ரீ கிடையாதுங்க.

அஜய்: இதுல போட்டிருக்கே.

கடைக்காரர்: எங்கே காட்டுங்க.

(பாட்டிலின் மீது '100% பாக்டீரியா ஃப்ரீ’ என்று எழுதியிருப்பதைக்    காட்டுகிறார்)

----------------------------------

அஜய்: என்ன டிராஃபிக் ரோட்ல?

ஒருவர்: பிரைம் மினிஸ்டர் வர்றாருங்க.

அஜய்: ங்கொய்யால! அதுக்கு நாம ஏன் வெயிட் பண்ணணும்?  அவரு என்ன பெரிய கலெக்டரா?!

--------------------------------

வலையோசை : சமுத்ரா

அஜய்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்:

அஜய்: நான் தமிழ்நாட்டுல பெரிய ஆக்டர்.

ரெய்னா: ஜோக் அடிச்சது போதும். போய் டீ சொல்லு.

அஜய்: நிஜமாலுமே நான் பெரிய ஹீரோதான்.

மார்கல்: எனக்கு ஷூகர் கம்மியா...

அஜய்: டேய், மெய்யாலுமே நான் ஹீரோதான்டா.

தோனி: தம்பி, டீ இன்னும் வரலை!