என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

வலையோசை : மயிலிறகு

வலையோசை : மயிலிறகு

வலையோசை : மயிலிறகு

உறவுகள் தொலைத்தோம்!

வலையோசை : மயிலிறகு

எதிர் வீட்டில் இருந்த ஒரு மன நோயாளித் தாத்தாவைக் காணவில்லையாம். 'எங்கேனும் பார்த்தால் சொல்லுங்கள்’ என்று வேண்டுகோள் வந்தது. வேதனை என்னவென்றால் அப்படி ஒருத்தர் இருந்தார் என்பதே கேபிள்காரர் சொல்லித்தான் தெரியும். அப்புறம் எங்கே அடையாளம் பார்க்கறது? இணையம் வந்துவிட்டபின் கண்ணுக்குத் தெரியாத உலகம் சுருங்கிடுச்சு. கண் முன்னால் இருப்பவை யாவும் வெகு தூரத்தில் விலகிச்சென்றுவிட்டன!

மரண பயம்!

ஒரு மனிதனுக்கு மரண பயம் வந்துட்டா எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடும் என்று ஓர் உறவினர் மூலம் காண்கிறேன். வாழ்ந்த காலத்தில் எல்லாம் சுயநலமே பெரிதாகக் கருதி அத்தனை பேரையும் துச்சமென அவமதித்தவர். அவருடைய நடவடிக்கை பிடிக்காமல், உடன்பிறப்புகள், சொந்தங்கள் அத்தனையும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது தேடிச் சென்று ஒவ்வொருவரிடமு

வலையோசை : மயிலிறகு

ம் வலியப் பேசுகிறார். சண்டை போட்ட உடன்பிறப்புகளிடம் கண்ணீருடன் உரையாடுகிறார். ஆனால், அவர் செய்த அநியாயங்கள் மனதைச் சுட, அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார்கள் உடன்பிறப்புகள். என் அம்மாவிடம் வந்து, ''சித்தி, உங்களைப் பார்க்கணும்போல இருந்தது'' என்று வெகு நேரம் பேசிவிட்டுச் சென்றபோதுகூட, 'ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்குபோல அதான் வந்திருக்கிறார்’ என்று ஒதுங்கிக்கொண்டேன் நானும். அவர் சென்ற பின்பு அம்மா வருத்தத்துடன் சொல்லியே தெரியும். அம்மா சட்டென்று நம்புபவர் என்பதால் அப்போதும் நான் நம்பலை. ஆனா, தொடர்ச்சியான அவர் நடவடிக்கைகளால் அவர் நிஜமாகவே உள்ளூர வருத்தம்கொண்டு அலைகிறார் என்றே புரிந்தது. ஆனாலும் அம்மாவைப் போல உருகாமல் தள்ளி நின்று அனுதாபப்படுவது தவிர எங்களால் வேறு எதுவும் செய்ய முடியலை. இப்பவும் அவரை உறவுமுறை சொல்லி அழைக்கக்கூட மனம் வரலை. ஹ்ம்ம்... வாழ்க்கையில் எவ்வளவு இருக்கு என்பதற்கும் இவ்வளவுதான் வாழ்க்கை என்பதற்கும் இடைப்பட்டது அந்த நபருடைய வாழ்க்கை. முடிந்தவரை இனி செல்கின்ற நாட்களில் பிரியமானவர்களை பத்திரப்படுத்திவைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது!

நான் குழந்தையா இருக்கறச்ச.... அரும்பு(ம்) நினைவுகள்:

•  பொய்க்

வலையோசை : மயிலிறகு

கால் குதிரை ஆடுறவங்களுக்கு நிஜமாவே மனுஷ முகம், குதிரை உடம்புனு பயந்து பார்த்திருக்கேன்.

•  சினிமாக்காரங்க எல்லாரும் மெட்ராஸ்ல ஒரே வீட்ல இருப்பாங்கனு நினைச்சிருக்கேன்.

•  'ஐ லவ் யூ’ ரொம்பக் கெட்ட வார்த்தைனு நினைச்சிருக்கேன்.

•  அரைத் தூக்கத்தில் எழுந்து தீபாவளி முதல்நாள் இரவு 'எனக்கு என்ன டிரெஸ்?’னு பார்ப்பேன்

•  'சொர்க்கம் மதுவிலே சொறி நாய் தெருவிலே’, 'நானொரு சிந்து சாக்கட பொந்து’னு என் அண்ணா பாடுறதுதான் சரியான பாட்டு வரினு நம்பியிருக்கேன்!

சரிதானே!

புது மண்டபத்தில் வளையல் பாசி வாங்க ஒவ்வோர் இடமாக விலை கேட்டோம்.  ஒரு இடத்துல விலையை அதிகமா சொல்லவும், 'என்ன இங்கே கூட சொல்றீங்க. அங்கே கம்மியா சொல்றாங்களே?'னு கேட்டதுக்கு, சட்டென்று கடைக்காரர் 'ஏம்மா அப்போ ஒவ்வொரு இடத்துலயும் விலை கேட்டுக்கிட்டேதான் வர்றீங்க. ரொம்ப நேரமா ஒண்ணுகூட எங்கேயும் இதுவரைக்கும் வாங்கலை. அப்படித்தானே..?' என்றார். நிஜமாகவே சிரித்துவிட்டேன். ஏனென்றால் உண்மை அதுதான். ஒரு நாலு இடத்துல விலை விசாரிச்சு வாங்கறது தப்பாங்க?

•  இயலாமையால் தீர்த்துக்கொள்ள முடியாத பழிகள், பெரும்பாலும் 'கடவுள் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று ஆற்றாமையில் விடப்படுகின்றன.

•  மேஜர் சுந்தர்ராஜன் ''ஸ்டைல்லதான் குழந்தைங்களுக்குத் தமிழ் சொல்லித் தர வேண்டியதா இருக்கு. இது வாழைப்பழம்- பனானா!''

•  நாலு தடவை சொல்லிவிட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத்தான் இருக்க முடியும்.

அண்ணா நூலக மாற்றம்!

என் தந்தை புத்தகம் வாங்கக்கூட வழியில்லாமல் நூலகத்தில் படித்து வந்தவர்தான். அவருக்குப் பிறகு

வலையோசை : மயிலிறகு

அவருடைய சந்ததிகள் படித்திருக்கிறோம். இதைவிட அதன் பயன்பாட்டுக்கு என்ன சான்று வேண்டும்? ஒவ்வோர் ஆட்சி மாற்றமும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களுடைய தவறுகளுக்கான தண்டனை என்பதை வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் வசதியாக மறந்துவிடுகிறது. ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் தாண்டி, நம்மைப் போன்ற பொது  ஜனமே அதிகம் என்பதையும் மறந்துவிடுகின்றன கழகங்கள்!