என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

கிராமம் முதல் கிரேக்கம் வரை...

புதுச்சேரியில் கலக்கல், அசத்தல், கலர்ஃபுல் திருவிழாநா.இளஅறவாழி படங்கள்: ஆ.நந்தகுமார்

##~##

புதுச்சேரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில், சொல்லி அடிக்கும் கில்லி கல்லூரிகளைப் பட்டியல் போட்டால் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு மகத்தான இடம் உண்டு. 'ஸ்டெதெஸ்கோப், மருந்து வாசம், புரியாத கிறுக்கல் கையெழுத்து... இவ்வளவுதாம்பா மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்’ என்று நீங்கள் நினைத்தால், பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள். இந்த கலர்ஃபுல் கலக்கல் எங்கே என்று கேட்கிறீர்களா? நடனம், ஃபேஷன் ஷோ, லைட் மியூஸிக் என்று, நிசப்தமான ராத்திரிக்கு வண்ணமயமாய் வானவில் பூசிய எம்.ஜி.எம். கல்லூரியின் 'டேலன்டியா 2012’ நிகழ்ச்சியில்தான்!

மருத்துவ மாணவர்களின் இசைக் குழுவான ரிச்சி ட்ரூப்ஸின் கலக்கல் ரீ-மிக்ஸ் பாடலோடு தொடங்கியது டேலன்டியா. 'தளபதி’ படப் பாடல் 'காட்டுக் குயிலு மனசுக்குள்ள’ கொஞ்சம் சொதப்பல்தான். ஆனால், அடுத்தடுத்து 'ஒருநாள் அழுதேன்’, 'தூது வருமா’, 'மாயம் செய்தாயோ’ என்று உச்சத்துக்குப் போய் உற்சாக மழை பொழிந்தனர். தொடர்ந்து, மாணவர் அரவிந்தின் சோலோ டிரம்ஸ் ஃபெர்பாமென்ஸ். ஒற்றை வார்த்தையில்... சூப்பர்! சாந்த்ரோன்ஸ் டீமின் லைட் மியூஸிக், மாணவர்களை மயக்கிப் போட்டது. '3’ படத்தில் இருந்து 'கண்ணழகா... பெண்ணழகா’ பாடலைப் பாடியதற்கு கைதட்டல் வரவேற்பு ஏராளம். என்ன ஒன்று 'ழ’வுக்குப் பதிலாக 'ல’ போட்டுப் பாடியதுதான் உறுத்தல். 'அட, கொலவெறிப் பாட்டிலேயே தமிழைக் கொத்துபரோட்டா போட்டவங்க தானே நாம’ங்கிறீங்களா? ரைட்டு!

கிராமம் முதல் கிரேக்கம் வரை...

கடந்த நான்கு வருடங்களாக எதிலும் கலந்துகொள்ளாத ஃப்ரீ ரேடிக்கல்ஸ் டீம், இந்த முறை எல்லாவற்றையும் சேர்த்துவைத்து ஒருபிடி பிடித்தது. குறிப்பாக, கோபதனின் புல்லாங்குழல் இசை, மனசுக்குள் சாரல் சேர்த்தது.

போட்டியாகக் களம் இறங்கிய லியோனைட்ஸ் டீம் 'கண்ணோடு காண்பதெல்லாம்’, 'முக்காலா முக்காபுலா’, 'குட்டி பிசாசே’, ’கொல வெறி’ எனக் கலந்துகட்டி அடித்து, கைதட்டலை அறுவடை செய்தது. லைட் மியூஸிக்கில் சிறந்த பாடலுக்கான வெற்றி லியோனைட்ஸ் டீம்-க்குதான். சிறந்த டிரம்ஸ் இசைக்குப் பிரதாப் பரிசு பெற, நிர்மல், அபிஷேக், மிருதுளா, பானுபிரியா ஆகியோர் சிறந்த பாடகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

கிராமம் முதல் கிரேக்கம் வரை...

அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃபேஷன் ஷோ. 'நாடுகளின் பாரம்பரிய ஆடைகள்’ என்பதுதான் கான்செப்ட். முதலில் தமிழகத்தின் பாரம்பரிய உடைகள். வயலில் உழும் விவசாயி முதல் நாற்று நடும் பெண், நாட்டாமை என்று கிராமத்து மண் வாசனை கிறங்கடித்தது. ஒரு மாணவி கண்டாங்கிச் சேலை கட்டி சரோஜாதேவி நடை (அதாங்க அன்ன நடை) நடந்து வர, அரங்கம் முழுவதும் உற்சாக 'ஓ’ குரல்கள்!

கிராமம் முதல் கிரேக்கம் வரை...

அடுத்ததாக கிரேக்கம், எகிப்து, பெர்ஷியா மற்றும் ரோமின் பழங்கால நாகரிகத்தை நினைவுபடுத்தும், விதவிதமான நாகரிக உடை களை அணிந்துவந்து மாணவ, மாணவிகள் அனைவரையும் அசத்தினர். முதல் நாள் இரவு லைட் மியூஸிக் மற்றும் ஃபேஷன் ஷோவோடு முடிந்தது. அடுத்த நாள் இரவு நடனப் போட்டி. வெஸ்டர்ன், கிராமியம், ஹிப் பாப், குத்துப்பாட்டு என்று ஆடித் தீர்த்துவிட்டனர் மாணவர்கள்.  

'அடுத்த வருஷம் வரைக்கும் தாங்கும்பா’ என்றார் வருங்கால டாக்டர் ஒருவர். ஆத்தி!