என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

த்ரிஷாதான் பெஸ்ட் ஹுரோயின் !

கோ.செந்தில் குமார், யா.நபீசா ரா.ராபின் மார்லர் படங்கள்: பா.கந்தகுமார்

##~##

திருவண்ணாமலையின் அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவுக்கு வந்திருந்த விஷாலுடன் கல்லூரிப் பெண்கள் நடத்திய கலகலப்பான அரட்டை இது.

''எப்போ கல்யாணம்..? லவ் மேரேஜா? அரேஞ்சுடு மேரேஜா?''

''என்னங்க எடுத்த உடனேயா? உங்ககிட்ட பேசவே பயமா இருக்கே. ஓ.கே., கட்டாயம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணத்தான் ஆசைப்படறேன். அதுக்காக வெயிட் பண்றேன்!''

''இந்தக் கேள்வி கேட்கலைனா சாமி கண்ணைக் குத்தும். நடிக்க வரலைனா என்னவா ஆகியிருப்பீங்க..?''

''நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம். அதனால கண்டிப்பா டாக்டர், இன்ஜினீயர் ஆகி இருக்க மாட்டேன். ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயராவோ ஃபுட்பால் பிளேயராவோ வந்திருப்பேன்!''

த்ரிஷாதான் பெஸ்ட் ஹுரோயின் !

'' 'பாலாவோட 'அவன் இவன்’ படத்தில் வர்ற  மாதிரியான ஒரு கேரக்டரை மறுபடியும் பண்ணமாட்டேன்’னு பேட்டி கொடுத்தீங்களே. ஏன் சார்? 'அவன் இவன்’ படத்துக்காகத் தேசிய விருது கிடைக்கலைனு வருத்தம் இருக்கா?''

'' 'அவன்- இவன்’ல ஒன்றரைக் கண்ணுள்ளவனா நடிக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. மற்றபடி பாலா படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லலை. ஆனா, கண்டிப்பா அந்த ஒன்றரைக் கண்ணு... பண்ணவே மாட்டேன்.

அதே மாதிரி நான் அவார்டுக்காக 'அவன் இவன்’ படம் பண்ணலை. நல்ல கேரக்டர். என்னை நல்ல நடிகனாகக் காட்டிய படம். தேசிய விருது வாங்கணும்னு நினைச்சு எப்பவும் படம் பண்றதில்லைங்க. மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிற வரவேற்பும் பாராட்டும் தான் எங்களுக்கு எல்லாத்தையும்விட பெரிய விருது. எனக்கு அது போதுமான அளவுக்குக் கிடைச்சிருக்கு. அதனால, ஆல்வேஸ் விஷால்  இஸ் ஹேப்பி!''

த்ரிஷாதான் பெஸ்ட் ஹுரோயின் !

''நீங்க நடிக்கணும்னு நினைச்சு மிஸ் பண்ணின கேரக்டர்..?''

''இப்போ என் ஃப்ரெண்ட் ஜீவா 'முகமூடி’ல  பண்றானே, அந்த கேரக்டர்தான்!''

''காலேஜ் படிக்கும்போது உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா?''

''கேர்ள் ஃப்ரெண்ட்ஸா? நமக்கு எக்கச்சக்கமா இருந்தாங்க. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் உதயநிதி ஸ்டாலினோட மனைவி கிருத்திகா உதயநிதி. சின்ன வயசுல இருந்து நாங்க ஃப்ரெண்ட்ஸ். அவங்க கூட இப்போ ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறாங்க!''

''நீங்க எத்தனை பேரை லவ் பண்ணியிருக்கீங்க?''

''(சிரிப்புடன்) பண்ணலைனு சொன்னா என்னை நீங்க விட்டுடுவீங்களா?''

''உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யார்?''

''(உடனடியாக பதில் வருகிறது) த்ரிஷா. இப்போ 'சமரன்’ படத்தில் என்னோட நடிக்கிறாங்க!''

''போன தலைமுறை நடிகர்கள், இந்தத் தலைமுறை நடிகர்கள் - என்ன வித்தியாசம்?''

''நடிப்பு எங்களோட தொழில். ஆனா, நிஜ வாழ்க்கையில் நாங்க எல்லாரும் நல்ல நண்பர்கள். 'டேய்  மச்சான், அந்தப் படம் சூப்பரா பண்ணி இருக்கே’னு சந்தோஷப்படுவோமே தவிர, எங்களுக்குள்ள ஈகோ-ங்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆரோக்கியமான நட்பு வட்டாரம் எங்களுடையது. அதுக்காக போன தலைமுறை நடிகர்கள், ஈகோவோட இருந்தாங்கனு சொல்ல வரலை!''  

''பாலாவுக்கு நிறைய கோபம் வருமாமே, எப்படிச் சமாளிச்சீங்க?''

த்ரிஷாதான் பெஸ்ட் ஹுரோயின் !

''அவர் கூட படம் பண்ண கொடுத்துவெச்சிருக்கணும். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சுது. சின்னச் சின்ன அசைவுகளையும் எப்படிப் பண்ணணும்னு சொல்லிக்கொடுப்பார். பாலானு இல்லைங்க, எந்த டைரக்டருக்கும் அவங்க சொல்றதை நடிகர்கள் சரியாப் பண்ணலைனா கோபம் வரத்தானே செய்யும்?''

''நீங்க அழகா இருந்தாலும் பிளாக். 'கறுப்பா இருக்கோமே’னு எப்பவாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா?''

''சத்தியமா இல்லைங்க. கறுப்புதாங்க எனக்கும் பிடிச்ச கலரு!''

''ஆர்யா உங்களோட நெருக்கமான நண்பராமே..?''

''ஆர்யாவும் நானும் 16 வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். அவனாலதான் எனக்கு 'அவன் இவன்’ல நல்ல பெயர் கிடைச்சுது. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்றோம்னா,  'உனக்குப் பிடிச்ச கேரக்டரை நீ எடுத்துட்டு மிச்சத்தைக் கொடு’னு சொல்ற ஒரே நடிகன் அவனாத்தான் இருக்கணும். பாலா படத்துல அந்த வாய்ப்பு கிடைச்சதுக்கு எப்படி நான் நன்றி சொல்றதுன்னு தெரியலை. அவனை மாதிரி ஒரு நண்பன் கிடைச்சது எனக்குக் கிடைச்ச வரம்னு சொல்லலாம்!''

'' பொதுவா ஃப்ரெண்ட்ஸ் பற்றி..?''

''நமக்கு அதுதாங்க எல்லாமே!''