என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

வலையோசை - வேர்கள்

வலையோசை - வேர்கள்

வலையோசை - வேர்கள்

'நர்சரி பள்ளியைவிட தாத்தா, பாட்டி பெஸ்ட்!’  இங்கிலாந்து ஆய்வில் தகவல்.

##~##

ஐந்து வயது ஆன பிறகுதான் குழந்தையை முதன்முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்துவைக்கச் செய்ய வேண்டும் என்கிற வழக்கம் மறைந்துவிட்டது. குக்கிராமத்தில்கூட நர்சரி பள்ளி வந்துவிட்டது. எல்.கே.ஜி., யு.கே.ஜி.-க்கு முன்பாக, மழலை மாறாத இரண்டரை வயதிலேயே ப்ரீ.கே.ஜி-க்குத் துரத்திவிடுகிறார்கள். இதுதொடர்பாக இங்கிலாந்தின் நஃபீல்டு அறக்கட்டளை மற்றும் பணப் புழக்கம் தொடர்பான ஆய்வு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின. சமூக ஆராய்ச்சியாளர் கரோலின் பிரைசன் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:

''புதிதாகப் பள்ளி செல்லும்போது குழந்தைகளுக்கு ஒருவித தயக்கம், பயம் இருக்கும். நர்சரி சென்ற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்காது. அதேநேரம், அதிக பணம் செலவழித்து சேர்க்கப்படும் நர்சரி பள்ளியில் கிடைப்பதைவிட, நல்ல அனுபவமும் பழக்கவழக்கங்களும் தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. அந்தக் குழந்தைகள் புதிது புதிதாக நிறைய வார்த்தைகள் தெரிந்துகொள்கின்றன. சரளமாகப் பேசுகின்றன. கோபம், வருத்தம் என, அவர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவது இல்லை. அன்பு செலுத்தும் உறவினர்கள் மத்தியில் வளரும் குழந்தைகள், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன''.

வலையோசை - வேர்கள்

வகுப்பறையா.. சிறைச்சாலையா?

வலையோசை - வேர்கள்

மகனுக்கோ மகளுக்கோ திடீரென உடல் நிலை சரியில்லை என்று போன்வந்து, அழைத்து வரப் போயிருக்கிறீர்களா? இப்போது காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். வகுப்பு வாசலில் பெண்ணென்றும் பாராமல் முட்டிப்போட்டுப் படித்துக்கொண்டு இருப்பது, வகுப்பறைகளைக் கடக்கும் தருணங்களில் ஸ்கேலால் விளாசும் சத்தம், போதாக்குறைக்கு பிரேயர், என்.சி.சி. என்று கிரவுண்டில் நிற்கவைப்பது, வெயிலில் ஓடவிட்டு தண்டனை கொடுப்பது, சக மாணவர்கள் முன்னால் அவதூறாகப் பேசி அடிப்பது, பெற்றோரை வரவழைத்துத் திட்டுவது...

வணக்கம் தமிழர்!

வலையோசை - வேர்கள்

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து, 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான 'ஏ, பி, சி, டி’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?’ எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் 'டி’ என்னும் எழுத்து வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது, 'ஸ்டாப்’ எனக் கூறி நிறைவு செய்தார். அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தமிழ் தேசியவாதி, தமிழ் அறிஞர். ஆகவே 'தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு’ என்பதைப் புரிந்துகொள்வீர்களா?

போட்டித் தேர்வுக்கான டிப்ஸ்:

வலையோசை - வேர்கள்

பொதுவாக நாம் போட்டித் தேர்வு மற்றும் பள்ளித் தேர்வுக்குப்  படிக்கும்போது, 'கேள்வி, அதற்கு நான்கு பதில்கள்... அதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பது’ - இதுதான் நடைமுறை. இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

காகசஸ் மலை

1. திபெத்துக்கு வடக்கில் உள்ளது.

2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குப் பகுதி.

3. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.

4. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

இந்தக் கேள்விக்கு விடை என்று பார்த்தால் 3. அவ்வளவுதானா? இந்த ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்துவிட்டது. நாம் அடுத்தக் கேள்விக்குச் செல்வோம் என்று போய்விடுவீர்கள். ஆனால், பொதுவாகக் கேள்விக்கு என்ன பதில் என்று பார்ப்பதைவிட பதிலுக்குக் கேள்வி தேடுங்கள்.

வலையோசை - வேர்கள்

மேலே உள்ள கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்...

1. திபெத்துக்கு வடக்கில் உள்ளது - இதற்கு கேள்வி தேடுங்கள். திபெத்துக்கு வடக்கில் என்ன உள்ளது? மற்ற மூன்று திசையிலும் என்ன உள்ளது ? அது தொடர்பான தகவல்கள் என்னென்ன?, இப்ப பாருங்க... ஒரு பதில், அதற்கு உண்டான கேள்விகள் பல... இவற்றைத் தேடும்போது மறக்குமா? அதேபோல் மற்ற பதில்களுக்கும் கேள்வி தேடுங்கள்.