என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

ஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி !

ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்

##~##

''வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை கிராமத்தில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை ஆணுக்கு நிகராக ஒரு பெண் செய்கிறார்'' என்ற செய்தி நம் வாய்ஸ் ஸ்நாப்பில் வந்து விழ, லாலாப்பேட்டை விரைந்தேன். சாலையோரத்திலேயே வீடும் கடையும் ஒன்றாக அமைந்திருக்க, பஞ்சர் ஒட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள் முருகேசனும் அவருடைய மனைவி அனார்கலியும். கடைக்கு உரிமையாளர்களும் பணியாளர்களும் இவர்களே.

பஞ்சர் பணிக்கு இடையே நம்மிடம் பேசிய அனார்கலி, ''22 வருஷமா என் வீட்டுக்காரருக்கு பஞ்சர் போடுறதுதாங்க தொழில். தனியாக் கிடந்து கஷ்டப்படுற அவருக்கு உதவியா, சின்னச் சின்ன வேலைகள் செய்வேன். இப்போ 15 வருஷமா நானே தனியா பஞ்சர் ஒட்டுறேன்.

லாலாப்பேட்டைக்குப் பக்கத்துல இருக்கிற நெல்லிக்குப்பம்தான் என் வீட்டுக்காரக்குச் சொந்த ஊரு; எனக்கு வானாபாடி கிராமம். கல்யாணத்துக்கு அப்புறம் லாலாப்பேட்டைக்குத் தனிக் குடித்தனம் வந்தோம். ஆரம்பத்துல ரெண்டு பேருமே விவசாய வேலைதான் பார்த்தோம். ஆனா, அது சரிப்பட்டு வரலைங்க. அவரு அப்பப்போ சவுண்ட் சர்வீஸ் வேலையும் சைக்கிள் ரிப்பேரும் பார்ப்பாரு. அந்த அனுபவத்தைவெச்சு தனியா சவுண்ட் சர்வீஸ் கடை போட்டாரு.

ஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி !

ஒரு ஃபங்ஷனுக்கு சீரியல் செட் போடப் போனவருக்கு ஷாக் அடிச்சிடுச்சு. கடவுள் புண்ணியத்துல பெரிசா ஒண்ணும் ஆகலை. அப்புறம் சைக்கிள் கடை, பஞ்சர்னு போய், சைக்கிள் கடையிலேயே டூ-வீலர்களுக்கும் பஞ்சர் போட ஆரம்பிச்சார். அப்பதான் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு. அப்புறம் ரெண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆம்பளைப் பையன்னு குடும்பம் பெருசாகிடுச்சு. ஆனா, வருமானம் மட்டும் பெருசாகலை.

ஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி !

சில கஸ்டமருங்க, 'வெறுமனே டூ-வீலருக்கு மட்டும் பஞ்சர் ஒட்டுனா வருமானம் வராது முருகேசா, லாரி, டிராக்டர்களுக்கும் பஞ்சர் ஒட்டு’னு சொன்னாங்க. அப்புறம்தான் அவருக்கு ஒத்தாசையா நான் முழுசா இந்தத் தொழில்ல இறங்கினேன். காலையில புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு தொழில்ல மும்முரம் ஆயிடுவேங்க'' என்று அனார்கலி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிடுகிறார் முருகேசன்.

ஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி !

''சைக்கிள் ஷாப்-ல தொடங்கி இந்த பஞ்சர் கடை வரைக்கும் எனக்குனு உதவிக்கும் ஒத்தாசைக்கும் என் மனைவியைத் தவிர வேற யாருமில்லீங்க. ஆரம்பத்துல எனக்கு உதவியா மட்டுமே இந்தத் தொழிலுக்கு வந்த என் மனைவி, படிப்படியா தொழில் கத்துக்கிட்டு இப்போ ஆம்பிளைக்கு இணையா... தனியாவே ஒரு டயரைக் கழற்றி பஞ்சர் பாக்குற அளவுக்கு உயர்ந்துட்டாங்க. இந்த உழைப்பாலதான் வாடகை வீட்டுல இருந்த நாங்க, இப்ப சொந்த வீடும் கட்டி, வீட்டோடு சேர்ந்தாப்புல கடையும்வெச்சு தொழில் செய்யுறோம். பிள்ளைங்களையும் நல்லபடியா படிக்கவெக்கிறோம்!'' என்கிறார்.

ஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி !