Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ஃபேஸ்புக் மீது யாஹூ வழக்குத் தொடர்ந்ததன் காரணத்தை இந்த வாரம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்.

 அந்தக் காரணம், லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், உங்கள் முகவரிப் புத்தகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் நண்பர்களின் தொடர்புத் தகவல்கள், அலை/தொலைபேசி எண்கள், அவர்களது மின்னஞ்சல்கள்கொண்ட முகவரிப் புத்தகத்தை உங்கள் வசதிக்காக அலைபேசியிலோ, மின்னஞ்சல் தளத் திலோ வைத்திருப்பீர்கள்தானே? அதன் மீது பெரும்பாலான இணைய நிறுவனங் களுக்கு ரொம்பவும் விருப்பம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

2009-ம் வருடத்தில் யாஹூ தளம், அதன் மின்னஞ்சல் உள்ளிட்ட அதன் பல்வேறு சேவைகளின் மொத்தப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 600 மில்லியன். ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 350 மில்லியன். அந்த வருட இறுதியில் யாஹூ தனது தளத்தில் ஃபேஸ்புக் தொடர்பு (Facebook Connect) என்ற சேவையை நிறுவப் போவதாக அறிவித்தது.

தனது உள்கட்டமைப்புக்குள் இயங்கும் இந்தச் சேவையை எந்தத் தளம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றது ஃபேஸ்புக். தளத்துக்கு வரும் பயனீட்டாளரை நம்பிக்கையுடன் அடை யாளம் கண்டுகொள்ள ( Trusted authentication & Real identity ), பயனீட்டாளரின் நண்பர்கள் யாராவது அதே தளத்துக்கு வந்திருந்தால் அதைப் பற்றித் தெரிவிக்க (Friends Access) என உங்களுக்குப் பலவிதமான நன்மைகள் உண்டு என்றது ஃபேஸ்புக். இப்படி ஒரு சேவையை இலவசமாகக் கொடுக்க என்ன காரணம்? தமது பயனீட்டாளர்கள் எந்தெந்தத் தளங்களுக்குச் சென்று என்னென்ன செய்கிறார்கள் என்பதை நெருக்கமாக வேவு பார்த்து, அதன் மூலம் அவர்களுடைய பயனீட்டுத் தகவல்களைச் சேகரித்துவைத்துக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, கோடை விடுமுறைக்கு எந்த ஊருக்குச் செல்லலாம் என்பதைப் பற்றி இணையத்தில் அலசியபடி இருக் கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் ஃபேஸ்புக் பக்கம் கொடைக்கானலில் இருக்கும் தங்கும் விடுதியைப் பற்றிய தகவல்களைக் காட்டுவ தோடு, சில வாரங்களுக்கு முன் உங்கள் நண்பர் ஒருவர் சென்று வந்து அதை விரும்பி எழுதியதையும் இணைத்து 'ஸ்பான்ஸர்டு ஸ்டோரீஸ்’ (Sponsored Stories) பகுதியில் காட்ட முடியும்.

யாஹூ தனது பயனீட்டாளர்களின் பயனீட்டு அனுபவம் அதிகரித்தால், தங்களது தளங்களுடன் அவர்கள் ஒட்டி இருப்பது அதிகரிக்கும் என எண்ணியது. ஆனால், நடந்ததோ தலைகீழ்!

தங்களுக்குத் தெரியாமலேயே, தங்களது பயனீட்டாளர்கள் பற்றிய விவரங்களை ஃபேஸ்புக்குக்குத் தாரைவார்த்தது. யாஹூ வின் தளங்களை மட்டுமே பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யாமல் இருந்தவர் களும் ஃபேஸ்புக்குக்குள் நுழையத் தொடங்கினர். மொத்தத்தில் ஃபேஸ்புக்கின் கிடுகிடு வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க, ஃபேஸ்புக்கின் இன்றைய பயனீட்டாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு பில்லியன். தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்ட எரிச்சலில்தான் இப்போது யாஹூ, ஃபேஸ் புக்கின் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறது என்பது என் கணிப்பு.

தாங்களே போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்பதால், அதைக் காரணமாகக் காட்ட முடியாது. இருப்பது ஒரே வழி... தனக்குச் சொந்தமாக பொத்தாம்பொதுவாக இருக் கும் காப்புரிமைகளைப் பயன்படுத்தியதாக ஃபேஸ்புக்கை வழக்கில் இழுப்பது ஒன்று தான் ஒரே வழி.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஃபேஸ்புக்கும் சாமானியப்பட்ட நிறுவனம் அல்ல. யாஹூ இப்படிப் புறவழித் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து பழம்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். வசம் இருந்து நூற்றுக்கணக்கான காப்புரிமைகளை வாங்கி இருக்கிறது. யாஹூவின் தொழில்நுட்பங்கள் ஏதாவது இந்தக் காப்புரிமைகளைப் பயன்படுத்திஇருந்தால், யாஹூவின் மீது வழக்கு தொடர்வதுதான் இதன் நோக்கம். இதைச் சமாளிக்க முடியாமல் தான் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் வாங்கிவிடும் அளவுக்கு அவர்களை மூலையில் மடக்கி முகத்தில் குத்தும் திட்டத்தில் இருக்கிறது ஃபேஸ்புக்!

முகவரிப் புத்தகம் பற்றிய இன்னொரு சர்ச்சையும் சமீபத்தில் எழுந்திருக்கிறது. 'பாத்’ (path) (https://path.com/) என்பது அலைபேசிகளில் மட்டுமே இயங்கும் லேட்டஸ்ட் சமூக ஊடகச் சேவை. ஃபேஸ்புக், லிங்ட்இன் போல அல்லாமல், இந்தச் சேவை 150 நண்பர்களை மட்டுமே ஒருவருக்கு அனுமதிக்கும். 'ஃபேஸ்புக் நகரங்களையும் நெடுஞ்சாலைகளையும் கட்டிக்கொண்டு இருக்க... நாங்களோ உங்களுக்கான சமூக ஊடக வீட்டைத் தருகிறோம்!’ என்ற கவர்ச்சியான சொற்றொருடன் வெளியாகி இருக்கும் இந்தச் சேவை, பரவலாகப் பிரபலமாகிவருகிறது.

சென்ற மாதத்தில் சிங்கப்பூரில் இருக்கும் மென்பொறியாளர் ஒருவர் 'பாத்’ மென்பொருளைத் தரவிறக்கம் செய்ததுமே, அது அவரது அலைபேசி யில் இருக்கும் முகவரிப் புத்தகத்தின் தகவல்களை அனுமதி இல்லாமலேயே படித்து வலைப்பதிவுத் தளத்தில் எழுதி வைக்க, சர்ச்சை ஆரம்பித்தது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

'நாங்கள் வேண்டும் என்றே செய்யவில்லை. புதிதாக இணையும் பயனீட்டாளர்கள் தங்களுக்கு முக்கியமானவர் களைக் கண்டறிந்து அவர்களைத் தங்களது நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்ளப் பரிந்துரை செய்வதற்காக மட்டுமே செய்தோம். தவறுதான்!’ என்று சொன்னது மட்டும் அல்லாமல், உடனடியாக அதைத் திருத்தவும் செய்தது.

அதெல்லாம் இருக்கட்டும்... நமக்கே பிரத்யேகமான தகவல்களை ஒரு மென் பொருள் எடுத்துக்கொள்ள அலைபேசி யின் மென்பொருள் எப்படி அனுமதிக் கலாம் என்ற கேள்வி எழுந்தது. இத்தகைய அனுமதியை மென்பொருட் களுக்கு இனி கொடுக்கப்போவது இல்லை என்று இந்த வாரத்தில் அறிவித்து இருக்கிறது ஆப்பிள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம், பாத் நிறுவனத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான டேவ் மாரின்தான், ஃபேஸ்புக் கனெக்ட் சேவையைக் கட்டமைத்து வெளியிட்டவர்.

Log Off