Published:Updated:

வலையோசை : வலைமனை

வலையோசை : வலைமனை

வலையோசை : வலைமனை

வலையோசை : வலைமனை

Published:Updated:
வலையோசை : வலைமனை

ஃபேஸ்புக் தோழியும் மாட்டிவிட்ட குழந்தையும்...

•  இ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலையோசை : வலைமனை

து மாதிரி ஃபேஸ்புக் என்ற ஒன்று வந்து தொலைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் 10-ம் வகுப்பு டியூஷனில் உடன் படித்த தனலட்சுமி, கவிதாக்களின் அப்பா பெயரையும் கேட்டுத் தெரிந்துவைத்திருப்பேன். இப்போது தனலட்சுமி எனத் தேடினால் ஆயிரக்கணக்கில் தனலட்சுமிகள் ஃபேஸ்புக்கில் லைன் கட்டுகிறார்கள். நாய்க்குட்டி பொம்மையும் குட்டி பெண் பாப்பா போட்டோக்களும் புரொஃபைல் பிக்சராகவைக்கப்பட்டு அதன் பின் மறைந்து இருக்கும் தனலட்சுமிக்களில் நம் தனலட்சுமியை எப்படிக் கண்டுபிடிப்பது என நினைக்கும்போது, அழுகையே வந்துவிடுகிறது. ஆனால், நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம். இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கைக் கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்குப் பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டு இருக்கும் என நினைக்கும்போது, வந்த அழுகைகூட நின்னுடுது!

•  மனைவி கிச்சனில் கிரைண்டருடன் சண்டை போட்டபடி மாவும் கையுமாக இருந்த சுபமாலை வேளையில், குழந்தையை மடியில் வைத்தபடியே இணையத்தை மேய்ந்துகொண்டு இருந்தேன். 'ம்மே’ மட்டுமே சொல்லக்கூடிய, எவ்வளவு கேட்டாலும் அப்பாவோ, தாத்தாவோ இன்னபிற வார்த்தைகளோ வாயில் வராத பத்து மாத அப்பாவிக் குழந்தை... மேய்ச்சல் போக்கில் ஃபேஸ்புக்கில் புதிதாக ஆட் ஆன தோழியின் புரொஃபைலை க்ளிக் செய்தேன். அவ்வளவுதான்... சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரெனப் பேசும் சிவாஜி மாதிரி, அந்தத் தோழியின் புகைப்படத்தைப் பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை 'க்கா... அக்கா’ என ஹை-டெசிபலில் அபாய ஒலி எழுப்ப, கிச்சனில் இருந்து ஆச்சர்யமாக மனைவி படாரென எட்டிப் பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன்போலத் துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல்... எல்லாம் சுபமாக முடிந்தது. இன்னும் நமக்கெதிராகச் செயல்பட குழந்தைக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்படுகிறதோ என நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது!

சில ட்வீட்டுகள்...

•  யூத்தா

வலையோசை : வலைமனை

ய் டி-ஷர்ட்டில் கிளம்புகையில், 'பனி உங்களுக்கு ஆகாது, குல்லா மாட்டிட்டுப் போங்க' என மனைவி சொல்லும் வேளையில் தொடங்குகிறது வயோதிகம்!

•  குஸ்காவில் பீஸ் தென்படும் அளவுக்குக்கூட வெங்காயப் பச்சடியில் தயிர் தென்படுவது இல்லை # சென்னை ஃபாஸ்ட் புட்ஸ்!

•  சம்பளத்தை நூறு நூறு ரூபாயாத் தெனம் ஏ.டி.எம். போய் எடுப்பதால என் முகம் எல்லா கேமராவுலயும் பதிஞ்சிருக்கும். 'நோட்டம் விட டெய்லி வர்றான்’னு என்கவுன்டர் போட்டுறாதீங்கப்பா!

•  ''சென்னை நிருபர்கள் மோசம், சின்னச் சின்னப் பசங்களா இருக்காங்க'' - ராமதாஸ் #  ஏனுங்க, தைலாபுரம் தோட்டத்துல புகுந்து மாம்பழம் ஏதும் பறிச்சிட்டாங்களா?

•  ஜட்ஜஸ்னு சொல்லிக்கிட்டு, 'அப்படி ஆடியிருக்கலாம், இப்படி பாடியிருக்கலாம்’னு டார்ச்சர் பண்றவங்க மேல எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாதா?

ஹி... ஹி... வலைமனை முக்கியச் செய்திகள்

• 'அ.தி.மு.க. தொண்டர்கள் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்டு ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்!' -  அம்மா

வலையோசை : வலைமனை

இதைவிட நீங்க ஒண்ணு பண்ணலாம்... உங்க தொண்டர்களை, அங்கங்க ஜெனரேட்டர் ஒண்ணு வெச்சி, 'மின்சாரப் பந்தல்’ வைக்கச் சொல்லலாம். சட்னி அரைக்கிறவங்க மிக்ஸி எடுத்துவந்து அரைச்சிக்கலாம்; செல்போன் சார்ஜ் பண்றவங்க பண்ணிக்கலாம்; 'சீரியல் இன்னைக்கு என்ன ஆச்சு?’னு தெரியாம தவிக்கிறவங்க டி.வி. எடுத்துட்டு வந்து போட்டு பார்த்துக்கலாம். ஆனா, கலைஞர் டி.வி. பார்க்கவோ,  கலைஞர் கொடுத்த டி.வி-யில் பார்க்கவோ மட்டும் அனுமதி இல்லைனு போர்டு போட்டுருவோம். எதிர்க்கட்சிக்காரங்க (குறிப்பா அந்த நாக்கு மடிப்புக்காரர்) இந்த ஐடியாவை யூஸ் பண்றதுக்குள்ள... நீங்க பண்ணிடுங்க மேடம்!

•  'நிதிநிலை அறிக்கையில், மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் சரியான பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படவில்லை!'-  விஜயகாந்த்

'சொந்தக் காலில் நிக்காம... உங்களை மாதிரி சுவத்துல ஒரு கால் வெச்சா நிக்கிறாய்ங்க?’னு ஆளுங்கட்சி கிண்டலடிக்கப்போறாங்க கேப்டன்!

•  'மக்கள் வரிச் சுமையை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டுக்காக முதல்வருக்கும் நிதியமைச்சருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என்னுடைய பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!' - சரத்குமார்

அப்பப்போ கட்சி சார்பில் இது மாதிரி தேங்க்ஸு, சாரி ஏதாச்சும் சொல்லுங்க பாஸ்.. இல்லைனா.. 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’னு ஒண்ணு இருக்கிறதையே எல்லோரும் மறந்துடுறாங்க... அப்புறம் அடுத்த எலெக்ஷனுக்கு ரெண்டு டிக்கெட் கூட கிடைக்காது.

•  ''எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்குக்கூட தகுதி இல்லாத விஜயகாந்த், தற்போது அரசியல் ஆதாயத்துக்காக அவருடைய பெயரை உச்சரித்துவருகிறார்!'' -நடிகர் ராமராஜன்

10 நாள் சஸ்பெண்டு பண்ணதுக்குப் பதிலா, 'மேதை’ படத்தை 10 வாட்டி பார்க்கவெச்சிருக்கணும்ணே.. அப்பத்தான் அவரு திருந்துவாப்புல!

வலையோசை : வலைமனை