Published:Updated:

பிளாக் டிக்கெட்டில் விஜய்... எலிசபெத் அறையில் கேட்டி!

ஐ.பி.எல். திருவிழா

பிளாக் டிக்கெட்டில் விஜய்... எலிசபெத் அறையில் கேட்டி!

ஐ.பி.எல். திருவிழா

Published:Updated:
##~##

காலண்டரில் ஏப்ரல்-மே மாதங்களை 'ஐ.பி.எல். மாதங்கள்’ என திருத்தி எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு ஐ.பி.எல். ஃபீவர் உச்சத்தில் உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஐ.பி.எல். திருவிழா சென்னையிலேயே தொடங்கியது. திருவிழாவின் தித்திப்புக் காட்சிகளில் சில...

• தொடக்க விழா நடைபெற்ற நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், சல்மான் கான் என பாலிவுட் பட்டாளம். விழாவுக்கு முந்தைய நாளே அமிதாப், சல்மான், கரீனா, பிரியங்கா நால்வரும் ரிகர்சலில் கலந்துகொண்டனர். ஆனால், அமிதாப் அரங்கைவிட்டு வெளியேறும்வரை சல்மான் ரிகர்சலுக்கு வரவே இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  விழாவுக்காக சென்னை வந்த அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான கேட்டி பெர்ரிக்கு, இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்த போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கிய அதே 'ராயல் சூட்’ அறையே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒருநாள் மட்டுமே தங்கிய கேட்டிக்கு உதவி செய்ய தனியாக இரண்டு பணிப்பெண்கள், கேட்டியின் பெயர் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்பு, தலையணைகள், 10 வகையான தேநீர் என ராஜ உபசரிப்பு. இளநீர் பாயாசம், பருப்பு உசிலி, அரைச்ச சாம்பார் எனக் கேட்டு நம்மூர் ஐயிட்டங்களைத்தான் விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார்.

பிளாக் டிக்கெட்டில் விஜய்... எலிசபெத் அறையில் கேட்டி!

•  விழா தொடங்குவதற்கு முன் ஃபோட்டோ கிராஃபர்களுக்கு போஸ் கொடுக்கவந்த கேட்டி பெர்ரி, ஐ.பி.எல். கமிஷனர் ராஜீவ் சுக்லாவிடம், ''ஐ.பி.எல். நாளைக்கு முடிஞ்சிடுமா?’ எனக் கேட்க, அதிர்ந்திருக்கிறார் சுக்லா. 'இது இரண்டு மாதங்கள் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்’ என சுக்லா விலாவரியாக விளக்க, 'ஓஹோ’ என ரியாக்ஷன் இன்றி கேட்டுக்கொண்டாராம் கேட்டி. கோடிகளைக் கொடுத்து கான்ட்ராக்ட் போடும்போதே கிரிக்கெட்னா என்னன்னு சொல்லி கூட்டிட்டு வரமாட்டாங்க போல!

•  பஞ்சாப்புக்கு பிரீத்தி ஜிந்தா, பெங்களூருக்கு சமீரா ரெட்டி, கொல்கத்தாவுக்கு ஜூஹி சாவ்லா என இந்த ஆண்டும் பழைய முகங்களே ஸ்டார் அட்ராக்ஷன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டி ஏழு மாதக் கர்ப்பிணி என்பதால் அவரை இந்த முறை ஸ்டேடியங்களில் அதிகம் காண முடியாது.

• பி

பிளாக் டிக்கெட்டில் விஜய்... எலிசபெத் அறையில் கேட்டி!

ரஷர் அதிகம் இருக்கும் என்கிற காரணத்தால் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகிவிட, இந்த ஐ.பி.எல்.லில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆடம் கில்கிறிஸ்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் டிராவிட், புனே வாரியர்ஸ் அணியின் சௌரவ் கங்குலி ஆகிய மூவரும் பயிற்சியாளர், கேப்டன் என இரு பொறுப்புகளையும் சுமக்கிறார்கள்.

•  கிரிக்கெட் வீரர்களின் பாடிகார்டு, ஸ்கோரர், ட்ரெய்னர், ஃபிஸியோதெரபிஸ்ட், கேமராமேன் என ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பின் ஏகப்பட்டோரின் உழைப்பு உள்ளது.  ஆனால், இதில் முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. நம்மூர் ஆட்களுக்கு ரசிகர்கள் என்ற கௌரவத்தைத் தவிர ஐ.பி.எல்.லில் அதிக வேலை இல்லை!

•  சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறி ஸ்டேடியத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டு இருப்பதால், அந்தப் பகுதியில் மட்டும் ரசிகர்களை அமரவைக்கக்கூடாது என அனுமதி மறுத்து இருக்கிறது தமிழக அரசு. அதனால் சென்னை ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் இருக்கைகள் காலியாகவே வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஐ.பி.எல்.லின் முதல் போட்டியான சென்னை- மும்பை போட்டியைக் காண முண்டியடித்தது கூட்டம். ஆட்டத்தைக் காண வந்திருந்த நடிகரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடருமான விஜய்க்கு டிக்கெட் இல்லை. பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்துக்குள் நுழைந்தார் விஜய்!

•  தனித்தனிப் பேட்டிகள், டிரெஸ்ஸிங் ரூம் மோதல்கள் என ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முறுக்கிக்கொண்டு திரிந்த ஷேவாக், டோனி இருவரும் இந்த ஐ.பி.எல்.லில் ராசியாகிவிட்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து வெகுநேரம் பேசிச் சிரித்தபடி இருந்தனர்!

-சார்லஸ்