Published:Updated:

மனைவிக்கு மரியாதை!

தையூரில் ஒரு தாஜ்மஹால்

மனைவிக்கு மரியாதை!

தையூரில் ஒரு தாஜ்மஹால்

Published:Updated:
##~##

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். ஆனால், கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த  ஏகாம்பரம் என்பவருக்கு அவருடைய மனைவியே இறைவன்தான். ஆம், அவர் தெருவின் முனையில் மனைவிக்காகக் கோயில் கட்டி கும்பாபிஷேகத் தையும் முடித்திருக்கிறார் ஏகாம்பரம்!’ என்று வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் பதிந்திருந்தார் தாம்பரம் வாசகர் கணபதி.

 தையூரில் இளவந்தாங்கல் பகுதியில் வசிக்கும் ஏகாம்பரம் 75 வயதான விவசாயி. உப்பு உற்பத்தி சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 2005-ல் தன் மனைவி மெய்யம்மாள் இறந்த பிறகு அவருக்காகக் கோயில் கட்டியவர், 2009-ல் அதற்குக் கும்பாபிஷேகமும் நடத்தி முடித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கால் சரியா செயல்படாதுங்க. என் 25-வது வயசுல ஜானகி என்கிற 13 வயசு மெய்யம்மாளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு. எங்களோடது அப்ப பெரிய கூட்டுக் குடும்பம். எனக்கு மூணு தம்பிங்க, ஒரு தங்கச்சி. கல்யாணத்துக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை மெய்யம்மாள்தான் கவனிச்சிக்கிட்டாங்க. அப்ப இருந்து எங்க வீட்ல ஒரு சின்ன பிரச்னைகூட வந்தது இல்லை. அப்புறம் என் தம்பிங்க எல்லாரும் தனித்தனியா நல்ல முறையில செட்டில் ஆனாங்க. எனக்கு நாலு பொண்ணு, ரெண்டு ஆண் குழந்தைங்க. பொண்ணுங்க நாலு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். ரெண்டு மகன்களும் அமெரிக்காவில் செட்டிலாகிட்டாங்க. இதுக்கெல்லாம் ஒரே காரணம் மெய்யம்மாள். விவசாயம் முழுக்க அவங்க மேற்பார்வையில்தான் நடந்துச்சு. ஒரு குடும்பத் தலைவியா ஓய்வு இல்லாம எப்பவும் குழந்தைங்க, குடும்பம்னு ஓடிட்டே இருப்பாங்க.

மனைவிக்கு மரியாதை!

2005-ல் உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருந்தவங்க, திடீர்னு ஒருநாள் எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட் டாங்க. என் நிழலாவே வாழ்ந்த மெய்யம்மாவை என்னால மறக்க முடியலைங்க. தெய்வமா ஆனவங்களைத் தெய்வமாவே வழிபடணும்னு தோணுச்சு. மெய்யம்மாளுக்குக் கோயில் கட்டலாம்கிற என் யோசனையைப் பசங்களும் ஏத்துக்கிட்டாங்க. ஓ.எம்.ஆர். ரோட்ல இருக்கிற 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள எங்க இடத்துல 10 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டினோம். சங்கு, பெருமாள் நாமத்துடன் விமானத்தின் மேல் கலசம் அமைத்து கும்பாபிஷேகம் பண்ணினோம்.

தினமும் கோயிலுக்குப் போய் பூஜை பண்ணிட்டு இருந்தேன். கொஞ்ச நாளா என்னால சரியா நடக்க முடியலை. அதனால இப்ப வாரம் ஒருமுறைதான் கோயிலுக்கு வந்துட்டு போறேன். கோயில்ல நிறைய செடிகளை வெச்சுப் பராமரிக்கிறேன். மனசுக்கு நிம்மதி வேணும்னாலும் மெய்யம்மா நெனைப்பு வந்தாலும் உடனே கோயிலுக்கு வந்துடுவேன். எங்க வீட்டு குல விளக்கு, குலதெய்வம் எல்லாம் அவங்கதான். வீட்டுக்கு யாரு வந்து உதவினு கேட்டாலும் இல்லைனு சொல்லாம செய்வாங்க. அதனால அவங்களோட ஒவ்வொரு நினைவு நாள்லயும் ஏழைகளுக்கு அன்னதானம் போட்டு வேட்டி, சேலை கொடுத் துட்டு வர்றேன். இதுக்காகவே அறக்கட்டளை ஒண்ணையும் தொடங்கப் போகிறேன்' என்றவர், ''ஒருத்தனுக்குப் பொண்டாட்டி மட்டும் சரியா அமைஞ்சுட்டா அவன்தான் பெரிய அதிர்ஷ்டசாலி தம்பி. அந்த வகையில நான் பெரிய அதிர்ஷ்டசாலிங்க'' என்று நம்மை நெகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைத்தார் ஏகாம்பரம்.

மனைவிக்கு மரியாதை!

கட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்