Published:Updated:

வலையோசை : இனியவை கூறல்

வலையோசை : இனியவை கூறல்

வலையோசை : இனியவை கூறல்

வலையோசை : இனியவை கூறல்

Published:Updated:
வலையோசை : இனியவை கூறல்

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள்!

வலையோசை : இனியவை கூறல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவிகித சக்தி, மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (ஓவராத்தான் யோசிக்கிறான்.)

ஆண்களின் மூளை, அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையைவிட குறைவுதான். (நம்மில் சிலர் -'இருந்துட்டு போகட்டும்பா!’)

குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்.

('அதான் எங்களுக்குத் தெரியுமே!’ - புடவை கடையில் இருந்து ஒரு குரல்)

மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம் வாழலாம். ஆனால், ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும்! (உண்ணாவிரதம் இருப்பவர்கள் கவனிக்க..!)

ஏன், எதற்கு, எப்படி?

வலையோசை : இனியவை கூறல்

ண்கள் தங்கள் மனைவியை சிறந்த துணையாக ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது, 'பெட்டர் ஹாஃப்’ என அழைக்கிறார்கள். இந்த அடைமொழி தோன்றிய விதம்?

இந்தச் சொற்றொடர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அரேபியப் பூர்வகுடி மக்களிடையே ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அவனுடைய மனைவி கூட்டத்தின் தலைவனிடம் முறையிடுகிறாள். 'தனக்கும் அவனுக்கும் திருமணமாகிவிட்டதால் இருவரும் தனித்தனி கிடையாது. அதனால் அவனுக்குரிய சுக துக்கங்களில் தனக்கும் பங்கு உண்டு’ என்றும் 'தன்னையும் தண்டனைக்குள்ளாக்குமாறும்’ மன்றாடினாள். தலைவன் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான். குற்றமற்ற இவளுக்குத் தண்டனை தர முடியாது என்றும் அவனுக்குத் தண்டனை, அவன் மனைவியோடு ஆயுள் முழுக்கச் சேர்ந்து வாழ்வதே எனத் தீர்ப்பளித்தான். இப்படித்தான் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க தங்களோட மனைவியை 'பெட்டர் ஹாஃப்’ என அழைக்கத் தொடங்கினர்!

ஒரு கவிதை :

''கடைக்கண் ஓட்டத்தைக் கண்டாலும்
பெண்ணின் மனவோட்டத்தை யாரறிவர்!''

வலையோசை : இனியவை கூறல்

ஒரு விளக்கம்:  அட்லாண்டிக் கடலின் உள்ளே செல்லும் ஒரு நீரோட்டம்தான் கல்ஃப் நீரோட்டம். இந்த நீரோட்டம் ஒரு வெப்ப நீரோட்டம். அதுதான் ஃப்ளோரிடா முதல் வட ஐரோப்பா வரையிலான தட்பவெப்ப சூழ்நிலையை நிர்ணயிக்கிறது. ஃப்ளோரிடா கடற்பகுதியில் தொடங்கி க்யூபா கடல் கணவாய் வழியாகப் பயணித்துச் செல்கிறது என, ஆராய்ச்சி செய்தவர் அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ஃப்ராங்கிளின். இன்றுவரை இது போன்ற நீரோட்டங்கள் குறித்த ஆராய்ச்சி, மர்மமாக நீண்டு கொண்டே செல்கிறது.

நம்மை ஆச்சர்யப்படவைக்கும் விஷயம், அதன் ஓட்டமானது எப்படி இருக்கும் என்றால், நீங்கள் புவியியலில் படித்த பெரிய ஆறுகள் மிசிசிபி, நைல், காங்கோ, அமேசான், வோல்கா, யாங்ட்ச் போன்றவற்றின் ஒட்டுமொத்த கூட்டணியாக ஓடிக்கொண்டு இருக்கும் என்பதுதான் அதன் பிரமாண்டம்!

(சரி, கவிதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்கறீங்களா? அதுதாங்க இந்த மாதிரியான கண்ணுக்குத் தெரியாத எதையுமே கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளால முடியாத ஒண்ணுதான் பெண்ணோட மனசு!)

வெளவால்கள் பற்றி அறிக...

வலையோசை : இனியவை கூறல்

வெளவால்களை கண்டு வியந்த மனிதன்! பயந்தானா? வியந்தானா?!

இந்த இனமானது இயோசீன் காலத்தில் இருந்து, அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்துவருகின்றன.

கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத்தக்கது.

இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்ஃபின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

அரிய வகை பழந்தின்னி வெளவால்கள், சாதாரணமாகக் கோவை மாநகரின் மையப் பகுதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காண முடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாகக் கூட்டமாகப் பறந்து திரிகின்றன. குறிப்பாக தற்போது நேரு ஸ்டேடியம் காந்தி பூங்காவில் வெளவால்கள் இருக்கின்றன!

வலையோசை : இனியவை கூறல்