Published:Updated:

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

Published:Updated:
##~##

'ரவட மாரி ரவட மாரி
வெளிய வாராண்டி
ராங்கான கோவக்காரன்
வெளிய வாராண்டி
ராத்திரினு தூங்கினாக்க
ரகளை நடக்கும்டி..’

தெருக்கூத்து கோமாளிப் பாத்திரங்களின் பாடல்களில் ஒன்று இது. இப்போது எல்லாம் கூத்துக் கலை கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் தெரியாமல் தேய்ந்துவரும் வேளையில் தருமபுரியில் மட்டும் ஒலிக்கிறது இந்தக் கோமாளிக் குரல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கொக்கராபட்டி கிராமத்தில் செயல்பட்டுவருகிறது மூவேந்தர் இயல், இசை, நாடக மன்றம்.  கூத்துக் கலை அழிவின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் இந்தச் சூழலிலும் இவர்கள் உட்கார நேரம் இன்றி ஓடியாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

இந்த டீமின் கோமாளிக் கலைஞர் ராஜவேல். பி.எஸ்சி., பி.எட்., பட்டதாரியான இவர், 13 வயது முதல் அரிதாரம் பூசிவருகிறார். இவருடைய அப்பா மனவேல், நேர்த்தியான கூத்துக் கலைஞர். அப்பா உயிரோடு இருந்தவரை சிறு சிறு வேஷங்கள் கட்டிய ராஜவேல், தந்தை மறைவுக்குப் பின் கோமாளி மற்றும் முக்கியப் பாத்திரங்களில் பட்டையைக் கிளப்புகிறார். தவிர, கூத்துக்குத் தேவையான வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவர்.    

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

''பல வேஷம் கட்டினாலும் கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு. மாரியம்பட்டியைச் சேர்ந்த மொட்டையன் தாத்தாதான் என்னோட குரு. இப்போ அவர் இறந்துட்டாரு. எங்க வட்டாரத்துலயே கோமாளி வேஷத்தில் அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. அவரைப் பார்த்து வளர்ந்ததால படிக்கிற காலத்திலும் என்னைச் சுற்றி கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. அழுறது, ஆத்திரப்படுறது, சிரிக்கிறது, உதைக்கிறதுனு எந்தக் கதாபாத்திரத்தையும் எளிதா செஞ்சுடலாம். ஆனா, ஊரே நம்மளைப் பார்த்துச் சிரிக்க... கோமாளி மட்டும் சிரிக்காம காமெடி செய்யறதுதான் கஷ்டமான விஷயம். கூத்துல எல்லா ஸ்கிரிப்ட்டும் ஏற்கெனவே எழுதப்பட்டு இருக்கும். ரிகர்சல் பார்த்து இருப்பாங்க. ஆனா, காமெடி பாத்திரத்துக்கு சுருக்கமா ஒன் - லைன் மட்டும்தான். அதுவும் அந்த ஒன் - லைன், 'கூட்டத்தைக் கலைய விடாம, சோர்வடையவைக்காம கலகலப்பாக்கி, கலெக்ஷனுக்கு கேரண்டி கொடுக்கணும்’கிறதுதான். அதுக்காக மத்தவங்க மனசு நோகாம என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆன் தி ஸ்பாட் நமக்குள்ள இருக்கிற நகைச்சுவை உணர்வை எல்லாம் அள்ளிவிட்டு ரெண்டு மணி நேரம் மக்களைக்கட்டிப் போடணும். இதுக்குத்தான், சின்னப் பசங்க மூக்குல நூல்விடுறது... மேடையில இருந்து டமால்னு விழுந்து அடிபட்ட மாதிரி பின்பக்கம் தடவிக்கிட்டே ஓடுறது, பின்பக்கம் நெருப்பைப் பற்ற வெச்சுக்கிட்டு ஓடிப் போய் தண்ணீர் வாளியில உட்கார்றதுனு ஏகப்பட்ட வித்தைகள் செய்வோம். இப்படி ஏழைக் கலைஞர்கள் அடைகாத்து வெச்சிருந்த கூத்தை கைப்பற்றி, ஏகபோக நிலைக்கு வந்த சினிமா,

கோமாளி வேஷம்தான் எனக்கு உசுரு!

தனக்குப் பால் புகட்டிய தாயான கூத்தைத் திரும்பிப் பார்ப்பது இல்லை. கூத்தில் ஆபாசம் இலைமறை காயாகத்தான் இருக்கும். ஆனால், சினிமா உலகம் ஆபாசத்துல உச்சம் தொட்டுட்டு, இன்னும் எதையோ தேடி அலைஞ்சுக்கிட்டே இருக்கு.

கலைகள் மீது ஆர்வம் கொண்டவங்க திரும்பவும் கூத்துக் கலைகளுக்கு உயிர் கொடுக்கணும்கிறது என்னைப் போன்ற கலைஞர்களுடைய வேண்டுகோள்'' என்கிறார் ராஜவேல்.

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்