Published:Updated:

வலையோசை : நெல்லை நண்பன்

வலையோசை : நெல்லை நண்பன்

வலையோசை : நெல்லை நண்பன்

வலையோசை : நெல்லை நண்பன்

Published:Updated:
வலையோசை : நெல்லை நண்பன்

பொன்னான தருணம்!

''தமிழில் இருக்கும் லட்சத்தி சொச்சம் வார்த்தைகளில் உனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது?'' என்று சமீபத்தில் யார் கேட்டிருந்தாலும் டக்கென்று சொல்லியிருப்பேன், 'தருணம்’ என்று. ஆனால், பேச்சு வழக்கின் புழக்கத்தில் இந்த வார்த்தையின் பயன்பாடு சில பல ஆண்டுகளாகவே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலையோசை : நெல்லை நண்பன்

குறைந்துவிட்டது. தருணம் என்ற வார்த்தை ஒரு நொடியையோ, மணித்துளியையோ உயிருள்ளதாக்கிவிடுகிறது. காலமும் நேரமும் மனதில் நிற்பது இல்லை. தருணங்களே மனதில் நிற்க வல்லவை. 'அந்தத் தருணத்திலே அந்தப்புரத்தில் நுழைந்த அழகான ராஜகுமாரனைப் பார்த்த இளவரசி...’ என்பவையெல்லாம் சாண்டில்யனோடு சம்பவமாகிப் போய்விட்டது.

'யேய்... இது என் மகன்டி’ என்று அம்மா என் கழுத்தில் கையைப் போட்டு முடிக்கும் முன்னரே கையைத் தட்டிவிட்டு 'வவ்வவ்வவ்வ... எங்க மாமா’ என்று கூறி மடியில் அமர்ந்து கன்னத்தில் அழுந்த முத்தம்வைப்பாளே என்னுடைய அக்கா மகள். ஒரு மகன் மாமாவாகும் மலர்ச்சியான தருணம்!

'யேய்... என் தம்பிடி. ஏண்டி அவனப் போட்டு இந்தப் பாடு படுத்துறே. அவன் மேல ஏறி குதிக்காதே’ என்று தன் மகளிடம் பொய்யாகக் கோபப்படுவாளே அக்கா. ஓர் அம்மா அக்காவாகும் அழகான தருணம். 'யேய் புள்ளைய அடிக்காதடி... உங்களை எல்லாம் இப்படி அடிச்சிருந்தாத் தெரியும்’ என்று அடி கொடுக்கும் அக்காவிடம் இருந்து பாப்பாவை வாரி அணைத்துக்கொள்வாளே அம்மா, சிறு வயதில் சேட்டை செய்தால் எங்களை துரத்தித் துரத்தி அடித்த அதே அம்மா. ஒரு அம்மா பாட்டியாகும் அற்புதமான தருணம்.

'பாஸ்... நான் பிரசன்னாவோட ஃப்ரெண்ட் பேசுறேன் பாஸ். அவன் கூட உங்களுக்கு போன் பண்ணியிருப்பான். நாளைக்குக் காலைல அங்க வந்துருவேன். புது ஊரு பாஸ், யாரையுமே தெரியாது’ என்று அலைபேசியில் சொல்லும்போது, 'கவலைய விடுங்க பாஸ்... வாங்க பாத்துக்கலாம்’ என்று சொல்லி தூங்கி விழித்து பஸ்ஸில் இருந்து இறங்கும்போது, பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பெட்டியைக் கையில் வாங்குவானே. ஒரு நண்பனின் நண்பன் நண்பனாகும் நல்லதொரு தருணம்!

'முயற்சி திருவினையாக்கும்’னு சொன்னது யாரு? ஓ மிஸ்டர் வள்ளுவர்! வாங்க, வந்து எங்க வீட்டுல பாப்பாவுக்கு ஒரே ஒரு இட்லி ஊட்டுங்க பாப்போம்’

சுஜாதாவைவிட மிகப்பெரிய தீர்க்கதரிசி ராஜீவ் மேனன்தான். 2012-ல் தமிழ்நாட்டின் நிலைமையை 15 வருஷத்துக்கு முன்னமேயே படத்துக்குத் தலைப்பா வெச்சு இருக்காரு # மின்சார (மே) கனவு

சச்சின் என்னும் சாதனைப் புயல்!

வலையோசை : நெல்லை நண்பன்

நூறாவது சதம் மட்டுமல்லாமல் நூறு சதங்களையுமே பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருப்பதாக ஜல்லியடிக்கிறார்கள் பலர். ஆனால், பங்களாதேஷ§க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த முதல் சதம் இதுதான். சச்சினின் சாதனையைக் குறைந்தபட்சம் நம்முடைய தலைமுறையின் வாழ்நாள் முடிவுக்குள் இன்னொரு வீரர் நிகழ்த்துவது கடினம்.

சச்சினின் முதல் சதம் என்னுடைய பிறப்புக்குப் பிறகுதான் அடிக்கப்பட்டிருக்கிறது. இதோ நூறாவது சதத்தையும் பார்த்து விட்டேன். நெல்லையின் மகிழ்ச்சியான இளமைக் காலங்கள் சச்சினின் தலை சிறந்த ஆட்டங்களைப் பார்ப்பதிலேயே கழிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சச்சினின் 200 ரன்களைப் பார்த்திருக்கிறேன். புயல் காற்றுக்கு நடுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சார்ஜாவில் ஆடிய 143 ரன் ருத்ர தாண்டவத்தைப் பார்த்திருக்கிறேன். சோயிப் அக்தரைத் துரத்தித் துரத்தி அடித்த 98 ரன்களைப் பார்த்திருக்கிறேன். சச்சின் கையில் ஓர் உலகக் கோப்பை தவழ்வதைக் கண்ணாரப் பார்த்திருக்கிறேன்!

எழுத்தறிவித்த இறைவன்!

வலையோசை : நெல்லை நண்பன்

ங்கை சார்... முழுப் பெயர் மங்கை மணவாளன். திருநெல்வேலியில் ப்ளஸ் டூ படிச்ச யாராலயும் இந்தப் பெயரை கேள்விப்படாம இருக்க முடியாது. இதை அவர் வாசிப்பாரா இல்லையானு தெரியலை. ஆனா, அவருக்குத் தெரிஞ்சவங்க யார் கண்ணுலயாவது இது பட்டா அவர்கிட்ட போய்ச் சொல்லுங்க, 'உங்ககிட்ட படிச்ச பையன் ஒருத்தன் அவனுடைய நெஞ்சாங்கூட்டில் இருந்து உங்களைப் பற்றிய சில வார்த்தைகளை எழுதியிருக்கான்’னு.

மங்கை சார்! மறக்க முடியல மங்கை சார்! கெமிஸ்ட்ரினா சைத்தான்னு நெனப்புல இருந்த எனக்கு அதையே கர்த்தாவாக்கி, பின்னாடி காதலியாக்கிக் கொடுத்தீங்களே, அதை... எப்போ டியூஷன் ஃபீஸ் கொடுக்க வந்தாலும் உள்ளதுலேயே கஷ்டமான கொஸ்டின் பேப்பரைக் கொடுத்து பரீட்சை எழுதச் சொல்வீங்க. அதுல நான் நூத்துக்கு நாலு மார்க் கம்மியா வாங்குனா, 'நான் இன்னும் டியூஷன் ஃபீஸ் வாங்குற அளவுக்குச் சொல்லிக்கொடுக்கல போல, எப்பம் நீ சென்டம் எடுக்குறியோ, அப்பதான் டியூஷன் ஃபீஸ் வாங்குவேன்’னு மறுத்தீங்களே, அதை... ஹை கிரவுண்டு ரவுண்டானா பக்கத்துல ஜூபிடர் பேக்கரியில கணக்கே பாக்காம சாப்பிட வாங்கிக்கொடுப்பீங்களே, அதை... நாங்க ப்ளஸ் டூ பரீட்சை எழுதும்போது, எக்ஸாம் சென்டர்ல இருந்த நம்ம பள்ளிக்கூட வாத்தியார் அத்தனை பேர் மேலயும் நீங்க கோபமா இருந்தாலும் எங்களுக்காக சென்டர் வாசல்லேயே நின்னு வாழ்த்துச் சொல்லிட்டுப் போனீங்களே, அதை.... எதையுமே எங்களால மறக்க முடியல மங்கை சார், நல்லா இருக்கீங்களா சார்?!''

வலையோசை : நெல்லை நண்பன்