Published:Updated:

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

Published:Updated:
##~##

'கரணம் தப்பினால் மரணம்... அந்த மரணத்துக்கே சவால்விடும் ஒரு  சாகசத்தைப் பார்க்க அனைவரும் வாருங்கள்!’  -திண்டுக்கல்லில் ஒலிப்பெருக்கியில் ஹை-டெசிபலில் அறிவித்துக்கொண்டு இருக்கிறார் அந்தப் பெரியவர். தலைக்கு

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 டிக்கெட் வாங்கி, மரணக் கிணற்றின் மேல் மக்கள் கூடுகிறார்கள். இரண்டு பைக்குகளை உயிர்ப்பித்து ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார்கள் இரண்டு ரைடர்கள். 60 கி.மீ. வேகத்தில் அதிவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.  ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும்போதே எழுந்து நிற்பது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது,  மல்லாக்கப் படுப்பது, கை கோத்துக்கொள்வது என்று மெய் சிலிர்க்கவைக்கிறார்கள்.  

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

சிறிது நேரத்தில் ஒரு மாருதி காரும் சேர்ந்து  சுற்ற ஆரம்பிக்கிறது. மாருதி பேனட்டில் படுப்பது, மாருதிக்கு முன் குறுக்கும் மறுக்குமாக பைக் ஓட்டுவது என சாகசம் உச்சநிலையை எட்டும்போது, மக்களில் பலர் பயத்தில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் முடிவுக்குவருகிறது நிகழ்ச்சி. சாகசக் கதை சொல்லத் தொடங்குகிறார் சலீம் கான். மரணக் கிணற்றில் பைக் ஓட்டும் இவர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். ''ஏழு வருஷமா மரணக் கிணறுல பைக் ஓட்டிட்டு இருக்கேன். 10-வது வரைக்கும் படிச்சேன். வீட்டுல நல்ல வசதிதான். இந்தத் தொழில் செஞ்சுதான் சாப்பிடணும்னு அவசியம் இல்லை. த்ரில்லுக்காக இந்த வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு தடவை வீட்டுக்குப் போகும்போதும் என் அப்பா, அம்மா என்னை கட்டிப்பிடிச்சு அழுவாங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டாங்க. நான் கேட்கலை. கூண்டுல பைக் ஓட்டும்போது மனசுல எதுவுமே இருக்காது. கவனமெல்லாம் பைக் மேல மட்டும்தான் இருக்கும். இதுவும் ஒருவகையான யோகாதான். சில சமயம் என்னையும் மீறி விபத்து நடந்துடும். ஒரு தடவை  டயர் பஞ்சராகி கீழே விழுந்து ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். நான் பைக் ஓட்டுறதைப் பார்த்து, ஒரு பெரியவர் என்னை கட்டிப்பிடிச்சு அழுதார். நிறைய பொண்ணுங்க என்னைக் காதலிக்கிறதாச் சொல்வாங்க. யார் என்ன சொன்னாலும் சிரிச்சிக்கிட்டு கிளம்பிடுவேன். எனக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கு. ஆனா பைக் ஓட்டும்போது, குடிக்க மாட்டேன். இது மரண கிணறுக்கு மட்டும் இல்லை... ரோட்டுக்கும் பொருந்தும். ஏன்னா உயிர் முக்கியம் பாஸ்!'' சிரிக்கிறார் சலீம் கான்.

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

கூண்டில் மாருதி கார் ஓட்டும் சுனில் ஜேக்கப், ''இந்தியாவுல மட்டும் இல்லாம, நிறைய வெளிநாடுகளில் ஷோ நடத்தி இருக்கேன். என் அனுபவத்துல நிறைய விபத்துகள், சில இறப்புகளைப் பார்த்திருக்கேன். இது எங்களுக்குப் பழகிடுச்சு. பைக் ஆக்ஸிலேட்டர்ல சணல் கயிறு ஒண்ணைச் சுற்றி வெச்சிருப்போம். ஆக்ஸிலேட்டரைத் தேவையான அளவு திருகிவிட்டுட்டுக் கையை எடுத்துட்டா, ஆக்ஸிலேட்டர் மாறாமல் அப்படியே இருக்கும். அதே மாதிரி கூண்டுல தண்டவாளம் மாதிரி ஒரு அடி அகலத் துக்கு வரிசையா ஆணிகளை அடிச்சிவெச்சிருப்போம். அதுதான் எங்களுக்கு ட்ராக். வண்டி ஓட்டுறவங்க அதைக் கணக்குவெச்சு ஓட்டணும். இந்த மாதிரி நிறைய ட்ரிக் இருக்கு. இதெல்லாம் இங்கே மட்டும்தான். ரோட்டுல போகும்போது நல்ல பசங்களா பைக் ஓட்டுவோம்!'' ரசித்து சிரிக்கிறார் ஜேக்கப்.

சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்