Published:Updated:

முணு லட்டு தின்ன ஆசையா ?

கோ.செந்தில்குமார் படங்கள்: பா.கந்தகுமார்

##~##

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தகவல் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவான 'கூடல் 2012’-க்கு வந்த நடிகர் ஜெய்யுடன் அடித்த அரட்டை இது. அரட்டை அடித்த மாணவர்கள்: பிரியங்கா, சரண்யா, ஜனனி, ரேவதி, வாஞ்சிநாதன், கார்த்திக், வினோ, கௌதம், மாதவினேஷ்வரன் மற்றும் இலக்கியன்.

வாஞ்சிநாதன்: ''உங்களுக்குப் பிடித்த ஹீரோயின் யார் சார்?''

ஜெய்: ''ஆரம்பிச்சிட்டீங்களா? இப்படி ஒரு கேள்வி கேட்பீங்கனு தெரியும். ஆனா எடுத்தவுடனே இப்படி கேட்பீங்கனு தெரியாது. ஓ.கே., எனக்கு எல்லா ஹீரோயினும் பிடிக்கும். இருந்தாலும் ரொம்பப் பிடிச்சது ஷாலினி மேடம்தான்!''

பிரியங்கா: ''உங்களுக்கு ரோல் மாடல் யாரு?''

ஜெய்: ''ஹலோ, நான் என்ன சாதிச்சிட்டேன்னு ரோல் மாடல் எல்லாம் கேட்கிறீங்க? அப்படில்லாம் யாரும் இல்லீங்க!''

சரண்யா: ''சினிமாவில் உங்களுக்கு 'நண்பேன்டா’ யாரு?''

முணு லட்டு தின்ன ஆசையா ?

ஜெய்: ''சிம்பு. இப்போ 'வேட்டை மன்னன்’ படத்துல நானும் அவரும் கேங்க்ஸ்டரா நடிக்கிறோம். தல அஜீத்தோட 'பில்லா-2’ வுலயும் நடிக்கிறேன். ஆக, நான் ரொம்ப பிஸியா இருக்கேன்னு சொல்லவந்தேன்!''

ஜனனி: ''நீங்க என்ன படிச்சிருக்கீங்க?''

ஜெய்: ''யு.எஸ்.-ல இன்ஜினீயரிங் படிச்சேன். லண்டன்ல எம்.பி.பி.எஸ். படிச்சேன். அட விடுங்க, படிப்பெல்லாம் ஒரு மேட்டரா?''

கார்த்திக்: ''வழக்கமா வெங்கட்பிரபு கேங் படத்துல நீங்க அட்டென்டன்ஸ் போடுவீங்க. 'மங்காத்தா’வுல எப்படி மிஸ் ஆனீங்க?''

முணு லட்டு தின்ன ஆசையா ?

ஜெய்: ''அட ஆமாங்க, எனக்கும் அதுல செம வருத்தம். ஆனா 'எங்கேயும் எப்போதும்’ படத்துல பிஸியா இருந்ததால 'மங்காத்தா’வுல நடிக்க முடியலை. அதான் 'பில்லா-2’வுல தலயோட சேர்ந்தாச்சுல!''

பிரியங்கா: ''அனுஷ்கா, அமலா பால், ஹன்சிகா மோட்வானி மூணு பேருல யாரோட ஜோடியா நடிக்க ஆசை?''

ஜெய்: ''இதுல என்னங்க வஞ்சனை? மூணு பேரோடயும் நடிக்க ஆசைதான். 'கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா?’ ''

கௌதம்: ''உங்க ஹாபி என்ன?''

ஜெய்: ''கீ-போர்டு வாசிக்கிறது.''

முணு லட்டு தின்ன ஆசையா ?

வாஞ்சிநாதன்: ''இல்லையே, செல்போன்ல எஸ்.எம்.எஸ். அனுப்புறதுதான் உங்க ஹாபினு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்களே?''

ஜெய்: ''அப்படியா சொல்லியிருந்தேன்? செல்போன்ல வெறும் கேம்ஸ் மட்டும்தான் விளையாடுவேன். வாஞ்சித் தம்பி பாடப் புத்தகத்தைத் தவிர மற்றதெல்லாம் படிப்பாரு போல இருக்கு.''

ஜனனி: ''சார் இந்தக் கேள்வி கேட்கலைனா இதைப் பேட்டின்னே ஒப்புக்க மாட்டாங்க. உங்க கல்யாணம் லவ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா?''

ஜெய்: ''உங்க ஆர்வம் எனக்குப் புரியுது. கண்டிப்பா லவ் மேரேஜ்தான். ஆனா இப்போ இல்லை. ஃபங்ஷனுக்கு டைம் ஆச்சு, கிளம்புவோமா?''

'அ...ஞ்...ச...லி’ என்று ஆரம்பிப்பதற்குள் அவசரமாகக் கிளம்பினார் ஜெய். ஆனால், விழா மேடையில் என்ட்ரி ஆனதுமே அரங்கம் முழுக்க எழுந்த குரல் 'அஞ்சலி அஞ்சலி’தான்!

அடுத்த கட்டுரைக்கு