கூகுளின் புராஜெக்ட் க்ளாஸ் (Project Glass) பற்றிய தகவல் டெக் மீடியா மட்டும் அல்ல, பரவலாக எல்லா மீடியாக்களின் கவனத்தையும் சென்ற வாரம் கவர்ந்தது. அது என்ன கூகுள் கண்ணாடி?

இந்தத் தொடரின் நீண்ட நாள் வாசகர்களுக்கு சிக்ஸ்த் சென்ஸ் (Sixth Sense) பற்றிப் படித்தது நினைவு இருக்கலாம். தொப்பியில் செருகப்பட்ட மினி சைஸ் வெப் கேமரா, கழுத்துக் கயிற்றில் தொங்கும் குட்டி புரொஜெக்டர், பேன்ட் பாக்கெட்டில் செல்போன். இந்த மூன்று உபகரணங்களும் ஒன்றோடு ஒன்று ப்ளூடூத் மூலம் தொடர்புகொண்டு, நீங்கள் தேடும் தகவல்களைக் கண்டறியும் ஆராய்ச்சிப் படைப்பாக இருந்தது சிக்ஸ்த் சென்ஸ். இதைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இதை உருவாக்கிய ப்ரணவ் மிஸ்ட்ரியின் தளத்தைச் சொடுக்குங்கள் (/www.pranavmistry.com/projects/sixthsense/).

மனிதர்கள் சாதனங்களுடன் இடைபடும் 'ஹ்யூமன் - மெஷின் இன்ட்ராக்ஷன்’ (human-machine interaction) டெக் உலகில் முக்கியமான, ஆனால், அத்தனை வேகமாகப் புதுமைகளைக் கொண்டுவர முடியாத பிரிவு. உதாரணத்துக்கு, கணினியின் விசைப் பலகையைச் சொல்லலாம். கணினிகளு டன் இடைபட எளிதாக இருக்கும் சாதன மாகக் கண்டறியப்பட்டு ஆண்டுகள் பல ஆன பின்னரும் இன்னும் மிகப் பெரிய புதுமை இதில் வரவில்லை. விரல்களின் மூலம் இயக்கப்படும் டச் இன்டர்ஃபேஸ் (Touch Interface) பயனுக்கு வந்த பின்னரும் பாயின் அண்ட் க்ளிக் (Point-and-Click) சாதனமான மவுஸின் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை.

கூகுள் கண்ணாடி புராஜெக்ட் ( உரலி : https://plus.google.com/111626127367496192147/posts ) இந்த டெக் பிரிவில் இடையீடு செய்யும் சாத்தியத்தை உருவாக்கி இருக்கிறது. கூகுள் கண்ணாடியின் செயலாக்கம் கிட்டத்தட்ட சிக்ஸ்த் சென்ஸ் போலவேதான். உங்களுக்கு அருகில் இருக்கும் சூழலையும் உங்களது சமூக இணைப்புகளையும் இணையத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் சரி விகிதத்தில் பயன்படுத்தி உங்களுக்குப் பயனுள்ள வகையில் Augmented Reality யாக உதவி புரிந்துகொண்டே இருப்பதுதான் கூகுள் கண்ணாடியின் செயல் நோக்கம்.

சிக்ஸ்த் சென்ஸ்போலப் பல சாதனங்களைத் தலையிலும் கழுத்திலுமாகத் தொங்க விட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல், கண்ணாடி ஒன்றுக்குள் கச்சி தமாகப் பொருத்தி வைக்கப்பட்ட இணைய உபகரணம் இது. அதில் கேமரா, செல் போன், இடது கண்ணுக்கு மேல் குட்டித் திரை எனத் தனி நபருக்குத் தேவையான அனைத்து மின்னணு தொடர்புச் சாதனங் களும் நெருக்கமாக இணைக்கப்பட்டு இருக்கும்.

கூகுள் கண்ணாடி எப்படிச் செயல்படும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது கூகுள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த பயனீட்டாளர், கூகுள் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த நாளை ஆரம்பிக்கிறார். காபி குடிக்கும்போது அன்றைய நாளுக்கான திட்டங்களை அவரது காலண்டரில் இருந்து எடுத்துக்காட்டுகிறது கூகுள் கண்ணாடி. மதியம் 2 மணிக்கு

நண்பரைப் புத்தகக் கடை ஒன்றில் சந்திக்கும்படி சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிடித்த இசையை ஒலிக்கச் செய்துகொள்கிறார். ரயில் நிலையம் அருகில் வரும்போது, ரயில் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வருகிறது. 'அதற்குப் பதில் நடந்து செல்கிறீர்களா?’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் செய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்!’ என்றபடி மொட்டைமாடியின் முகப்பில் நின்றுகொண்டு கிதாரை வாசிக் கிறார். எதிரே கடலின் பின்னணியில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காதலியும் பார்க்கும் வகையில் ஷேர் செய்துவிட்டு கிதார் வாசிக்கிறார். காதலி அதை ரசிக் கிறார்.

அட்டகாசமா இருக்கே, அண்டன். எப்போது இது கடையில் கிடைக்கும் என்று கேட்கும் ஹைடெக் ஆர்வலர்களுக்குப் பதில்... 'ரொம்ப நாளாகும்’! அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம்போலப் பல அற்புதங்கள் செய்யப்போவதாக கூகுள் சொல்லும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது மாடல் வடிவில்தான் இருக்கிறது. சென்ற வாரத்தில் கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி ப்ரின், சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்த விழா ஒன்றில் போட்டுக்கொண்டு இருந்த கூகுள் கண்ணாடி

பலரையும் பேச வைத்தாலும், அமிஞ்சிக்கரை லட்சுமணனில் இருந்து நியூஜெர்ஸி வீரக்குமார் வரை பரவலாக அனைத்து டெக் பயனீட்டாளர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பல வருடங்கள் ஆகும்.

பை தி வே, இதைக் கிண்டலடித்து சில வீடியோக்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. அதில் சிறப்பான இரண்டு:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZwModZmOzDs

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=t3TAOYXT840

LOG OFF