Published:Updated:

வலையோசை : தமிழ் வலைப்பூ

வலையோசை : தமிழ் வலைப்பூ

வலையோசை : தமிழ் வலைப்பூ

      ஊர்த் திரும்பல்!

வலையோசை : தமிழ் வலைப்பூ

நான் சென்னைக்குப் படிக்க, பிழைக்கவந்தவன். இங்கு பெற்றதைவிட, இழந்ததே அதிகம். உளவியல் பிரச்னைகள் இங்குதான் அதிகம். என் படிப்பு முடித்தவுடன் சென்னையில் என் வேலையும் முடிந்துவிடும். எதற்காக நான் இங்கு வந்தேனோ, அந்த வேலையை முடித்தபின் என் ஊருக்குத் திரும்புவதுதானே நியாயம்? அதைவிடுத்து நான் இங்கேயே இருந்தால், யாரோ ஒருவரின் வாய்ப் பைத் தட்டி பறிப்பதாகத்தானே அர்த்தம். சென்னை ஒரு போட்டி உலகம்.என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான போட்டி இங்கு மிகவும் குறைவு. முடிவில் ஏற்படுவதோ பொறாமைதான். இந்தப் பொறாமை உலகத்தில் நிலைத்து நிற்க தினம் தினம் ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் என் இடம் மற்றவருக்குத் தாரைவார்க்கப்படும் என்பதே சென்னையின் இயல்பு. இந்தப் போராட்டத்தால் முன்னேற்றம் ஏற்படுவதைவிட மன உளைச்சலே அதிகம். வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிப்பதால்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் நாம் எதிரியாகப் பார்க்கப்படுகிறோம். யாருக்குத் தெரியும் மும்பை, தெலங்கானாபோல் சென்னையிலும் வெளியூர்க்காரர்கள் இருக்கக் கூடாது என எதிர்காலத்தில் யாராவது அரசியல் செய்யலாம். சொந்த ஊரின் வளங்களைப் பயன்படுத்தி முன்னேறிவிட்டு, நம் சொந்த ஊர் பின்தங்கி இருக்க விட்டுவிட்டு, வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் நம் உழைப்பைக் கொடுப் பது எந்த விதத்தில் நியாயம்? ஆம்... நான் என் ஊருக்கே போகப்போகிறேன், விரைவில்!

       காதலின் ஈர்ப்பு 'இருப்பு’ ஆகுமா?

வலையோசை : தமிழ் வலைப்பூ

காதலில் மூன்று நிலைகள் உண்டு. 1. இனக் கவர்ச்சி: பார்த்தவுடன், பழகியவுடன் ஒருவர் பிடித்துப்போவது (அ) ஈர்ப்பு ஏற்படுவது. 2. கற்பனை கலந்த காதல்: குறிப்பிட்டவருடன் காலம் முழுக்க வாழப்போவதாகக் கற்பனை செய்து, உணர்வுபூர்வமாக ஒருவர் மீது ஒருவர் அதிகமாக சார்ந்து வாழ்வது.   3. நிறைவான காதல்: நிறைகுறைகளை அறிவுப்பூர்வமாக அலசி, வாழ்க்கையை முழுதாகப் பகிர்ந்துகொள்வது. மேற்சொன்ன முதல் இரண்டு பருவங்கள் ஈர்ப்பின் அடையாளங்கள். மூன்றாவது பருவமே இருப்பின் அடையாளம். காதல் காலம் திருமணத்தில் முடிய இருப்பு அவசியம். ஈர்ப்பு என்பது எதனாலும் வரலாம். ஒருவரிடம் உள்ளது மற்றவரிடம் இருப்பதாலும், இல்லாமல் இருப்பதாலும் வரலாம். ஈர்ப்பு என்பது வேறு. இருப்பு என்பது வேறு. ஈர்ப்பு இருப்பாகுமா எனப் பார்த்து, பிறகு திருமணம் செய்யுங்கள்!

உளவியலாளர்களை விடுத்து நித்யானந்தாக்களை நாடுவது ஏன்?

நித்யானந்தா போன்ற சாமியார்களை மக்கள் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு உண்மையிலேயே அவர்களிடம் அப்படி என்ன திறமை இருக்கிறது? மக்களின் மனப்பாங்கை மிகத் துல்லியமாகப் புரிந்துவைத்து இருக்கும் அவர்கள், தங்களின் பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் தெரிந்தவர்கள். நம் அரசியல்வாதிகளுக்கு உள்ள அதே திறமைதான் இது. அரசியல்வாதிகள் ஒன்றன்

வலையோசை : தமிழ் வலைப்பூ

பின் ஒன்றாக இலவசங்களை அள்ளிவிடுவது போன்று மக்களைச்சிந்திக்கவிடாமல், குழப்பிக்கொண்டே இருப்பார்கள். தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக அல்லது தொழில் நுட்பம் தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொள்வார்கள். பிரதமர் அலுவலகமே இப்போதுதான் யூ-டியூபில் இணைந்திருக்கிறது. ஆனால், 2006 முதல் இன்றுவரை பல உலக மொழிகளில் சப்-டைட்டில் போடப்பட்டு 2,237 வீடியோக்கள் நித்யானந்தாவின் ஆன்மிக நிறுவனத்தால் யூ-டியூபில் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும் ஃபேஸ் புக், டிவிட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் கால்பதித்து இருக்கிறார்கள்.

பல மொழிப் புலமை, பேச்சுத் திறமை, வார்த்தை ஜாலம் எனத் திறமையானவர்களாக உள்ளனர். நித்யானந்தாவின் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் 28 உலக மொழிகளில் வெளியாகி உள்ளதாம். யார் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள் ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வதுதான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கைகொண்டவர்களாக இருப்பார்கள். அதனால்தான் என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும் அதைப் பற்றி எல்லாம் சராசரி மனிதனைப்போல் கவலைப்படாது, தான் செய்ய நினைத்ததைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு ஆன்மிக கல்வி நிறுவனங்கள் சமூக சேவை பல்வேறு ஆன்மிக சொற்பொழிவுகள் புத்தகங்கள் - இதுதான்இந்த கார்ப்பரேட் சாமியார்களின் ஃபார்முலா.

மன அழுத்தம், நிம்மதியின்மை, வாழ்வில் பிரச்னை என்று போனால், அதில் இருந்து இந்த சாமியார்கள் விடுதலை அளிக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்தியத் தத்துவங்களில் பொதிந்துக்கிடக்கும் உளவியலை அறிந்து, அதனைப் போதித்து, யோகக் கலையைக் கற்பித்து, விடுதலை அளிக்கிறார்கள். இதே வேலையைக் கைதேர்ந்த உளவியாலாளர்களாலும் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடியும். ஆனால், ஏன் மக்கள் உளவியலாளர்களைப் பார்க்கச் செல்வது இல்லை? 'உளவியலாளர்/மனநல மருத்துவர்களிடம் பைத்தியமானவர்கள்தான் செல்ல வேண்டும்’ என்ற மிகத் தவறான கற்பிதம் நம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. இந்தக் கருத்தை நம் சமூகம் மாற்றிக்கொள்ளாத வரை, கார்ப்பரேட் சாமியார்களின் வரலாறு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!

வலையோசை : தமிழ் வலைப்பூ
அடுத்த கட்டுரைக்கு