வலையோசை : அன்பே சிவம்

ஆன்லைன் டிக்கெட் அவ்வளவு சுலபமா?

ரயில் பயணத்தில் முன்பதிவு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவனுக்குப் பிரச்னையே இல்லை. நெம்பி, நொண்டி, தோண்டித் துருவி ஆன்லைனிலேயே டிக்கெட் எடுத்துவிடுவான். அப்புறம் மறக்காமல் அலுவலகத்திலேயே பிரின்ட்- அவுட் எடுத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

வலையோசை : அன்பே சிவம்

ஆனால், டிக்கெட் எடுக்க ரயில்வே ஸ்டேஷனுக்கே சென்று வரிசையில் நிற்கிறவன் எதுக்கு நிற்கிறோம் என்றே தெரியாமல் மணிக்கணக்கில் காத்திருப்பதுதான் கொடுமை. ஆனால், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் விஷயம் விசுக்குன்னு சொல்வதற்கு சுலபமாகத்தான் இருக்கிறது. ஆனால், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் நம் ஜாதகத்தில் சுக்கிரன், சூரியன் எல்லாம் சுகமாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் படிப் படியாகப் பல கட்டங்கள் தாண்ட வேண்டும். எல்லா முறைவாசலுக்கும் மரியாதை செய்துவிட்டு, ஓ.கே. பட்டனை அமுக்கும்போது இதயம் படபடவென அடிக்கும். சர்வரோ இணையமோ பல் இளித்துவிட்டால் அவ்வளவுதான்... சமயத்தில் கைக் காசும் போய்விடும். டிக்கெட் புக் ஆகாது. பரமபதம் உச்சத்துக்குச் சென்றவன் பாம்பு கொத்தி விழுந்த மாதிரி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்!

கொறிக்க... இது கௌதமின் சிறுகதை...

எப்போதும் போல் அன்று இரவும் வெகு சாதாரணமாகத்தான் சரக்கடிக்க ஆரம்பித்தோம். குடிப்பதற்கு

வலையோசை : அன்பே சிவம்

முன்னே அவன் செய்யும் முன்னேற்பாடுகள் சுவாரஸ்யமானவை. அதில் ஒன்று, பாட்டில் வாங்கிய கறுப்பு கவரை தன் சட்டையின் இரண்டாம் பொத்தானோடு கோத்துக்கொள்வது. காரணம், உடல் அனுசரித்துப்போகாமல் பல சமயங்களில் வாந்தி எடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறான தருணங்களில் கழுத்துடன் இருக்கும் கவரிலேயே எடுத்துவிடுவது உசிதம் அல்லவா! குடிக்கும்போது வாந்தி வருவதும், தகுதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதும் ஒன்றே என்பது நண்பனின் கணிப்பு!

பேருந்தில் இடம் இல்லாமல் நின்றுகொண்டு வந்த என்னை கல்லூரி மாணவி ஒருத்தி இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டாள் # ஷ்லீமீஸீ வீ ஷ்ணீs ணீ ளீவீபீ.

என் மேலாளர், என் மனைவி இருவருடைய கேள்விகளும் ஒரே மாதிரியானவை 'இப்போ எங்கே இருக்கீங்க?’ # நுண்மேலாண்மை.

பிரம்மச்சாரிகளுக்கு!

'என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்னை மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் ஃப்ரெண்ட் இருக்கான். ஆனா, மொதப் பொண்ணுக்கு 16 வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய்

வலையோசை : அன்பே சிவம்

ஃப்ரெண்டு கூட இல்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ?’ - ஓர் அம்மாவின் அங்கலாய்ப்பு. கலாசாரக் காவலர்களே... கலவரப்பட்டு கத்தியைத் தூக்கிடாதீங்க. டிராப் யுவர் வெப்பன்ஸ். மேற்படி சம்பாஷனை நடந்தது ஐரோப்பாவில். அங்கு பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க 'உன் வாழ்க்கை இனி உன் கையில்’னு தண்ணிய தெளிச்சுடுறாங்க. அதுக்கு முறையா செண்ட்-ஆஃப் பார்ட்டி கூட உண்டாம். ஆனா, நம்மூர்ல பையனோ, பொண்ணோ காலேஜ் முடிச்சு, வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் பெத்தவங்களோட 'ரேடார் ஃப்ரீக்வன்சிக்குள்’ளேதான் இருந்தாகணும்.

'எந்த மாதிரி துணை உனக்கு வேணும்?’ என்று பையனையோ பொண்ணையோ இப்ப கேட்டுட முடியாது. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஃபீலிங்!. 'சின்ன வீடு’ பாக்யராஜ் மாதிரி சிலர் சாமுத்திரிகா லட்சணத்துல பொண்ணு கேட்பாங்க. சிலருக்கோ, 'உயரம் அஞ்சே அரைக்கால் இருக்கோணும். என்னையும் புரிஞ்சுக்கோணும், என் குடும்பத்தையும் புரிஞ்சுக்கோணும்’னு கண்டிஷன் போடுவாங்க.

பொண்ணுங்களும் இதுக்கு சளைச்சவங்க இல்லை. 'அழகா இருக்கணும். ஆனா, காதலிச்சி இருக்கக் கூடாது. ஆன் சைட்ல இருக்கணும், ஆனா, எந்தக் கெட்ட பழக்கமும் கூடாது. தாடிவெச்சா மாதிரியும் இருக்கணும். ஆனா ஷேவும் பண்ணியிருக்கணும்’னு ஏகத்துக்கும் படுத்தி எடுப்பாங்க. இவங்க நினைக்கிற மாதிரி ஜோடி வேணும்னா நம்ம ஜேம்ஸ் கேமரூன்கிட்ட சொல்லி செஞ்சாத்தான் ஆச்சு!

வலையோசை : அன்பே சிவம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு