##~##

ஸ்ரீவைகுண்டம் - திருநெல்வேலி செல்லும் பாதையில் இருக்கும் ஆதிச்சநல்லூர் பற்றி தெரியுமா? கரடுமுரடான கற்கள் நிறைந்த பொட்டல் காடாக இருக்கும் ஆதிச்சநல்லூர்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த, நம்முடைய கலாசாரம் செழித்த பகுதி என்றால் நம்புவதற்குச் சிரமமாக இருக்கும். கி.பி. 1876-ல் ஜெர்மனியைச் சேர்ந்த ஜகோர் எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மானுடவியல் ஆராய்ச்சிக்காக, இந்தியா வுக்கு வந்தார். ஒவ்வொரு பகுதியாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டே வந்தவர், கடைசியாகஆதிச்ச நல்லூரில் உடைந்த மட்பாண்டத் துண்டுகளைக் கண்டு தோண்டிப் பார்த்திருக்கிறார். அதில் மட் பாண்டங்கள், முதுமக்கள் தாழி, செம்புப் பட்டை, இரும்பு ஆயுதங்கள் போன்றவற்றைக் கண்டெடுத்து ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து விட்டார். 1899-ல் இருந்து 1905 வரை அலெக் சாண்டர் இரியா எனும் ஆராய்ச்சியாளர்,ஆதிச்ச நல்லூரிலேயே தங்கி அகழ்வாராய்ச்சி செய்ததில் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாணலி, தயிர்ப் பானை, முக்கனிசட்டி, முக்காலிக் குதில், ஜாடி, உருளி, மையக் கிண்ணம் என சுமார் 100 வகையான சமையலுக்குப் பயன்படும் பாத்திரங்கள், ஈட்டி, எறிவேல், கைக் கோடாரி, பலிவாள், அம்புதலை, வேலாயுதம், அகன்றவாய்ப் பரசு, கத்தி, பலிவாள், குத்துவாள் போன்ற  ஆயுதங்கள் என எக்கச்சக்கப்பொருட் களைத் தோண்டி எடுத்து,  21 மாட்டு வண்டிகளில் சென்னைக்குக் கொண்டு சென்று அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துவிட்டார். காலங்கள் ஓடின.

திராவிடர்களின் தொட்டில்!

 சமூக ஆர்வலர்களின் கோரிக்கையால் 2003-ல் சுமார் ஆறு மாதங்கள் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி கழகக் கண்காணிப்பாளர் சத்தியபாமா தலைமையில் 10 ஆராய்ச்சியாளர்கள் ஆதிச்சநல்லூரில் முகாமிட்டு அகழ்வாராய்ச்சி நடத்தினார்கள். 10-க்கு 10 அடி அகலத்தில் குழி தோண்டப்பட்டது. மூன்று அடுக்கு மட்பாண்டங் கள், 168 முதுமக்கள் தாழிகள், பல இரும்புப் பொருட்கள், விளக்குகள் கிடைத்தன. தாழிக்குள் நெல் மணிகள் மட்கிய நிலையிலும், பல ஆயுதங்கள், குருமார்கள் தலையில் கட்டும் நெற்றிப்பட்டை, சிறுசிறு தங்க ஆபரணங் கள், பாதாளக் கரண்டிகள், உளிகள், வெண்கலப் பொருட்கள் என முதுமக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன. ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று ஆதிச்சநல்லூரும் மிகத் தொன்மையானதாக இருக்கலாம் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

ஆதிச்சநல்லூரின் தற்போதைய நிலை குறித்து ஸ்ரீவைகுண்டம் பாரதி கலை இலக்கிய மன்றச் செயலாளர் வழக்கறிஞர் பாரதிமுருகன் கூறும்போது, ''114 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆதிச்சநல்லூர். 3,000 ஆண்டுகள் பழமையான தாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மொத்தம் உள்ள 114 ஏக்கரில் சுமார் 10 சென்ட் அளவுக்குத்தான் குழிதோண்டி பழங்கால பொருட்களைச் சேகரித்துள்ளனர். மீதம் உள்ள பகுதிகளைத் தோண்டி பொருட் களைச் சேகரிக்க வேண்டும். தமிழக அரசின் ஆதிச்சநல்லூர் பற்றிய ஆய்வு, கடந்த 2004-ல் முடிந்தது.

திராவிடர்களின் தொட்டில்!

அப்போது நடத்தப்பட்ட ஆய்வில், அழகான வேலைப்பாடு கொண்ட 168 முதுமக்கள் தாழி கள் கிடைத்திருக்கின்றன. இந்த மட்பாண்டங் களைத் தட்டினால் வெண்கல ஒலியை எழுப்புகிறது, கீழே போட்டால் உடைவது இல்லை. இறந்தவர்களின் பிணத்தை ஆரியர்கள் எரிப்பார்கள். பாரசீகர்கள் கழுகுக்கு இரையாக விதைப்பார்கள். வட இந்தியர்கள் ஜல சமாதி செய்வார்கள். மண்ணில் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள் திராவிடர்கள். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே இவர்கள் திராவிடர்களாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வங்கதேசத்து தொல்லியல் நிபுணர் பானர்ஜி, ஆதிச்சநல்லூரை 'நாகரிகத்தின் தொட்டில்’ என்கிறார் தற்போது எட்டு வருடங்கள் ஆகியும் ஆய்வு குறித்த அறிக் கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. அறிக் கையைக் கேட்டு மூன்று முறை மனு அனுப்பியும் சரியான பதில் இல்லை. எங்கேயோ நடக்கும் வரலாற்றைப் படிக்கும் நாம், நம்முடைய வீட்ட ருகே வாழ்ந்த நம் முன்னோர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியவில்லை'' என்றார் வேதனையான குரலில்!  

-இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு