என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

என் ஊர் : பெரியகுளம்

Singampuli
News
Singampuli

மாரியாத்தா கும்பம்... மாவடிச்சு திம்போம்!

##~##

யக்குநரும், நகைச்சுவை நடிகருமான சிங்கம்புலி, தான் பிறந்து வளர்ந்த பெரியகுளம் பற்றி இங்கு பேசுகிறார்.

 ''பெரியகுளத்துல தாண்டவத்தேவன் தெருவுல நான் பிறந்து வளர்ந்தேன். தாத்தாவோட சைக்கிளைவெச்சு சைக்கிள் ஓட்டப் பழகிக்கிட்டு இருந்தேன். பொதுவா ராத்திரிகள்ல எங்க ஊர்க்காரங்க தெருவுல பாயை விரிச்சு படுத்துத் தூங்குவாங்க. ஒருநாள் சாயங்காலம் சைக்கிள் எடுத்து ஓட்டும்போது பேலன்ஸ் இல்லாமத் தூங்கிக்கிட்டு இருந்தவங்க நெஞ்சுல சைக்கிளை ஓட்டிட்டேன். தெருவே என்னைத் தூக்கிப் போட்டு மிதிக்க ரெடியாகிருச்சு. பல சுத்து      பஞ்சாயத்துப் பேசி பிரச்னையைச் சரிபண்ணினோம்.

என் ஊர் : பெரியகுளம்

நான் ட்ரைம்ப் (Triump) ஸ்கூல்ல படிச்சேன். ஸ்கூல் முடிஞ்சதும் பெரிய கோயில் பக்கத்துல இருக்கிற வராக நதிக்குப் போய் ஆட்டம் போடுவேன். ஆத்துல குளிச்சது தெரியக்கூடாதுங்கிறதுக்காக எங்க தெருவுக்குள்ள நுழையும்போது, புழுதி மண்ணை எடுத்துப் பூசிப்பேன். என் அம்மா 'என்னடா இப்படி வந்துருக்க, போய் குளி' னு விரட்டுவாங்க. சந்தோ ஷமா ரெண்டாவது முறை குளிப்பேன். மாரியம்மன்கோயில் திருவிழா ஆரம்பமே அமர்க்களமா இருக்கும். அன்னைக்கு நட்டுவைக்கிற கொடிக்கம்பத்துக்குத் தினமும் யார் முதல்ல மஞ்சத் தண்ணி ஊத்துறதுனு போட்டியே நடக்கும். ஒரு நாள் நான் அதிகாலை 3 மணிக்கே கிளம்பிப் போனா, 2 மணிக்கே எவனோ தண்ணி ஊத்தி இருந்தான். கடுப்பாகி முதல்நாள் ராத்திரி 10 மணிக்கே தண்ணி ஊத்திட்டு வந்துட்டேன். ஊர்ப் பெருசுங்க எல் லாம் செம டென்ஷன் ஆகிட்டாங்க. அதே மாதிரி காளியம்மன் கோயில் திருவிழாவுல ஊர்க்காரங்கள்லாம் பக்தியா பாடுவாங்க. நாங்க மட்டும் நாங்களே எழுதின

         'மாரியாத்தா  கும்பம்
      மாவடிச்சுத் திம்போம்
   பேச்சியாத்தா கும்பம்
பெசைஞ்சுவெச்சுத் திம்போம்!
’னு சீரியஸா, ஹைபிட்ச்ல பாடுவோம். திருவிழாவுக்கு வந்த மொத்த ஜனமும் எங்களைத்தான் பார்க்கும். சிங்கம்புலி எங்க குலதெய்வம் பேரு. என் சித்தப்பா பேரும்சிங்கம் புலிதான். என்னைத் தேடி வர்ற என் வயசுப் பசங்க வீடு மாறிப்போய், 'சிங்கம்புலி இருக் கானா? அவனை வரச் சொல்லுங்க’னு கேட் பாங்க. சித்தி செம டென்ஷன் ஆகி, விளக்கு மாறை எடுத்து விரட்டுவாங்க. சித்தப்பாவைத் தேடி வர்றவங்க எங்க வீட்டுக்கு வந்து 'சிங்கம் புலி ஐயா இருக்காருங்களா?’னு கேட்பாங்க. 'அவன் விளையாட போய்ட்டானே!’னு எங்க அம்மா சொல்ல... வந்தவங்க ஒண்ணும் சொல்ல முடியாமல் குழம்பி கிளம்பிருவாங்க. இந்த மாதிரி எங்க பேரைவெச்சு தினம் ஒரு காமெடி யாவது அரங்கேறிடும்.

என் ஊர் : பெரியகுளம்

ப்ளஸ் ஒன் படிக்கும்போது லவ் வந்துடுச்சு. அந்தப் பிள்ளை தினமும் காலையில 4 மணிக் குப் பெருமாள் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்துடும். ஒருநாள் அலாரம்வெச்சு எழுந்திருச்சு வந்தா, குருக்கள் சம்பத்சாமி என்னைக் கன்னா பின்னானு திட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் தான் கோயிலுக்குக் கைலி கட்டிக்கிட்டு வரக் கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டேன். ஒருநாள் அந்தப் பொண்ணுகிட்ட லவ் லெட்டர்கொடுத் தேன். அடுத்த வாரமே அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி, ஊரைவிட்டேப் போய்ட் டாங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ஃப்ரெண்ட், 'ஏண்டா அந்த இடத்துலவெச்சி லெட்டர் கொடுத்தே’னு ஏறிட்டான். என்னடான்னு போய் பார்த்தா, கோயில் சுவர்ல நல்லா ஆறு அடி உயரத்துக்குப் பெருசா 'நாமம்’ வரைஞ்சி இருந்தாங்க.

என் ஊர் : பெரியகுளம்

 பெரியகுளத்துல நடக்குற தீ மிதி விழா, ரொம்பவே பிரசித்தம். இந்தப் பூக்குழியை நடத்துறவங்க இஸ்லாமிய மக்கள். ஆனால், தீ மிதிக்கிறது இந்துக்கள். இப்பவும் பெரியகுளத்துல அந்த மரபும் நட்புறவும் உயிர்ப்போடு இருக்கு. பெரியகுளத்துல எங்க மீட்டிங் பாயின்ட் 'வைகை கேன்டீன்’தான். எனக்கு சினிமா மோகம் வர இந்த கேன்டீனும் ஒரு காரணம். ரஜினி, கமல்னு எந்த நடிகரோட படப் பாட்டு கேசட் வந்தாலும் பெரியகுளத்துலயே எங்க குரூப்தான் முதல் போணி பண்ணி 'வைகை கேன்டீன்’மூலமா ஊரையே அலறவைக்கும். ஒருநாளைக்கு ஒவ் வொருத்தரும் 25 டீயாவது குடிச்சு காரசாரமா பாட்டுகளைப் பற்றியும், படத்தைப் பற்றியும் விவாதிப்போம்.

மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் போன்ற பிரபலங்கள் பிறந்து வாழ்ந்த ஊர் இது. அதனால சின்ன வயசில் இருந்தே சினிமாக்காரங்களைப் பார்த்து வளர்ந்தவன். அதனால எனக்குள்ள சினிமா ஆசை வந்ததுல பெரிய ஆச்சர்யம்எதுவும் இல்லை. ஆனால், எனக்குள்ள இருக்கிற இயல்பான நகைச்சுவை உணர்வுக்கு பெரியகுள மும் அங்க நான் வாழ்ந்த வாழ்க்கையும்தான் முக்கியக் காரணம்!''

- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி