Published:Updated:

ஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்!

ஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

க்காளி திருவிழா, சாக்லேட் திருவிழா என வெளிநாட்டு விழாக்களைப் பற்றி கேள்விப்பட்ட நமக்கு, 'சேத்தாண்டி திருவிழா’ கேட்க ரொம்பவே புதுசு!

 மழை பொய்த்து கொக்குகூட நிற்க முடியாத, சகதி நிறைந்த, நீர் இல்லாத பெரிய கண்மாய்க்குள், ஒரு அதிகாலை திபுதிபுவென இறங்குகிறார்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் மற்றும் விடலைப் பையன்கள். கண்டபடி உருண்டு புரண்டு சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கும் பூசிவிடுகிறார்கள். கரையில் இருந்து மேளம் அடிக்கிறது ஒரு கோஷ்டி. மேள தாள சத்தத்துக்கு இடையே பக்திப் பெருக்கோடு ''ஆகேய்.. ஓகேய்!'' ரைமிங்கோடு ஆட்டமும் போடுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் கோயில் கோடை விழாவில்தான் 'வாரான் வாரான் பூச்சாண்டி’ என்பதுபோல, அனைத்து மக்களும் சேத்தாண்டியாக வலம்வருகிறார்கள்.

ஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்!

''முன்பு ஒரு காலத்துல இந்தப் பகுதி மக்கள் எல்லாம் வெக்கை நோய் வந்து இறந்துபோய்ட்டாங்களாம். அப்ப மருளாடி ஒருத்தரிடம் உக்கிரமா இறங்கின முத்து மாரியம்மன்,

ஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்!

'செட்டி ஊரணி சேத்தை அள்ளிப் பூசிக்கிட்டு, வைக்கோல் பிரியிலே தலைப் பாகை மாதிரி கட்டி கையில் வேப்பிலையோடு ஊரை மேள தாளத்தோட சுற்றி வரணும்’னு சொல்லுச்சாம். எனக்கு விவரம் தெரியுற வயசுல இருந்து இந்த நேர்த்திக் கடனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். எந்த ஊர்ல, எந்த வேலையில இருந்தாலும் எட்டாம் நாளு திருவிழா அன்னிக்குக் கிளம்பி வந்து சேத்தாண்டியா மாறிடுவோம். ஊர் மக்கள் எல்லாரும் எங்களை தொட்டுக் கும்பிட்டுப் போவாங்க. அது தனி சந்தோஷம்'' என்றவர், 'ஆகேய்..  ஓகேய்!’ என சேத்தாண்டி குழுவில் பக்திப் பரவசமானார் ஞானகுரு.

செந்தில், ''சேத்தாண்டி வேஷம் போடறதுல எந்தக் கூச்சமும் கிடையாது. நிறைய இன்ஜினீயரிங் படிக்கிற பசங்களே வேஷம் போட்டு இருக்காங்க. ஆம்பளைங்க மட்டும்தான் சேத்தாண்டியா மாறுவோம். கிராமத்துல அந்தக் காலத்துல குளிக்கும்போது, கண்மாயில கரம்பையைக் கரைச்சு தலைக்குத் தேய்ச்சு குளிப்பாங்க. அந்தளவுக்கு இந்தக் களிமண்ணுல குளிர்ச்சி இருக்கு. தோல் சம்பந்தமான நோய்கள் எதுவும் தாக்காம உடம்புச் சூட்டை சீராவெச்சுக்க இது உதவும். சேத்தாண்டி வேஷம் போட்ட மாதிரியும் ஆச்சு. உடம்புச் சூட்டை தணிச்ச மாதிரியும் ஆச்சு. டிரெஸ்ஸைக் கழற்றிட்டு கட்டின துண்டோட, சேறு பூசுன ஆண்டியா வரும்போது, 'இது நிலையில்லாத உலகம்... நிதானமா இருக்கணும். ஓவரா ஆடக்கூடாது’னு தோணும். அதுபோதும் சார் எங்களுக்கு!'' என்கிறார் தத்துவார்த்தமாக.

வித்தியாசமான ஆண்டிகள்தான்!

- ஜெ.பேச்சிமகன்

ஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு