Published:Updated:

மனித இனத்தில் பெண்தான் அழகு!

மனித இனத்தில் பெண்தான் அழகு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

வியர், ஐ.டி. கம்பெனியின் இயக்குநர், தொழிலதிபர், சமூக சேவகர், அரசியல்வாதி எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் மாலதி ராஜவேலு. இத்தனை தளங் களில் இயங்கினாலும் தன்னை ஓவி யராக வெளிப்படுத்திக்கொள்வதையே விரும்புகிறார். சமீபத் தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஓவியர்களையும் ஒன்றிணைத்து 'புதுச்சேரி ஓவியர் நுண் கலைக் குழு’ என்ற அமைப்பை ஏற் படுத்தி சாலையோர ஓவி யக் கண்காட்சியையும் நடத்தியுள்ளார்.

 ''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். படிக்கும்போது இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர் வம் அதிகம். கல்லூரி முடித்தவுடன் ஓவியக் கல்லூரியான சித்ரகலா பரிஷத் கல்லூரியில் நுண்கலைப் பிரிவில் சேர்ந் தேன். அந்தக் கல்லூரியில் இடம் கிடைப் பது அவ்வளவு சுலபம் இல்லை. நான் வரைந்த ஓவியங்களை எல்லாம் அந்தக் கல்லூரிக்கே எடுத்துச் சென்று காட்டிய வுடன்தான் அனுமதி கிடைத்தது. கல்லூரி யில் சேர்ந்த ஆறு மாதத்திலேயே எனக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்தபோது, 'கல்யாணத்துக்குப் பிறகும் நீ புதுவையில் வந்து படிக்கலாம்’ என்று சொல்லி என்னை ஏமாற்றி திருமணம் செய்து புதுவைக்குக் கூட்டி வந்துவிட்டார்'' என்று தன் அருகில் அமர்ந்து இருக்கும் புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலுவைக் காட்டி சிரிக் கிறார்.

மனித இனத்தில் பெண்தான் அழகு!

''சும்மா சொன்னேங்க. திருமணமாகி வந்தபின் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர்ந்து படிக்கலாம் என்ற கனவும், எனக்குத் தமிழ் சரியாக எழுதப் படிக்கத் தெரியாததால் தகர்ந்து போனது.

மனித இனத்தில் பெண்தான் அழகு!

அதனால் வீட்டிலேயே வரைய ஆரம் பித்தேன். பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத் துக்குள் வந்துவிட்டதால் தீவிர அரசியலில் ஈடு பட்டு, புதுச்சேரி மகிளா காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளராக 12 வருடங்கள்பணியாற்றி னேன்'' என்று சொல்லும் மாலதி, ஓவியக் கண்காட்சி என்று யார் அழைத்தாலும் செல்லத் தவறுவது இல்லை.

''பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருக்கும் ஓவியர்களுக்கு நானாகவே வலியச் சென்று உதவுவேன். பொதுவாகவே ஓவியக் கலைஞர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். தங்களுக்குத் தேவையானதை யாரிடமும் கேட்க மாட்டார்கள். ஓவி யத்துக்கான பொருட்கள் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். எனக்கு ஓவி யப் பொருட்கள் வாங்க அம்மா பணம் கொடுக்க மாட்டாங்க. காலேஜுக்கு ஆட்டோவில் போகும் காசை மிச்சப்படுத்தி அதில் எனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வேன். அதனால் தான் நானே அவர்களுக்குச் சென்று உதவுகிறேன். பொதுவாகவே சமூகத்தின் தவிர்க்க முடியாத அடையாளமான ஓவியக் கலைஞர்களின்தேவை கள் அதிகம். ஆனால், போதிய வசதிகளை அரசு அவர்களுக்குச் செய்துகொடுப்பது இல்லை. அதற்குக் காரணம் இவர்களின் குரல் வலுவாக ஒலிப்பது இல்லை. அதற்காகத்தான் இந்த ஓவியர் நுண்கலைக் குழுவை ஆரம்பித்தோம்.

மனித இனத்தில் பெண்தான் அழகு!

அதன் மூலமாகத்தான் சாலையோர ஓவியத் திருவிழாவை நடத்தினோம். இந்த விழா நிறைய கலைஞர்களின் படைப்புகள் விற்பனையாவ தற்குக் காரணமாக இருந்தது'' என்கிறார் திருப்தி யுடன்.

''அதுசரி, உங்களுடைய படைப்புகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக் கிறீர்களே, ஏன்?'' என்றேன். சிரித்தபடி ''மனித இனத்தில் பெண்கள்தான் அழகு. விலங்கினத்தில் தான் ஆண் அழகு'' என்கிறார்!

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு