##~##

''யாருங்க சொன்னது, சாக்லேட் சாப்பிடறதுக்கும் ஷ§கருக்கும் சம்பந்தம் இருக்குன்னு? வெளிநாட்டில் ஒரு நபர் ஒரு வருடத்துக்கு எட்டு முதல் 12 கிலோ சாக்லேட் சாப்பிடறார். ஆனா, இந்தியாவில் ஒரு நபர் வருடத்துக்கு 20 கிராம்தான் சாப்பிடறார். இப்படியிருந்தும்கூட  இந்தியாவில்தான் ஷ§கர் பேஷன்ட் அதிகம், தெரியுமில்லையா?'' என்று சிரிக்கிறார் சாக்கோ-லா நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீநாத் பாலச்சந்திரன்.

 ''புதுவையில் உள்ள சாக்கோ-லா என்ற கடையில் விதவிதமாக சாக்லேட் சிலைகள் செய்கிறார்கள்'' என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் வாசகி மலர்ச்செல்வி. சாக்கோ-லாவுக்குள்

சாக்லேட் எடு... கொண்டாடு!

நுழைந்தால் வெளிநாட்டில் நுழைந்ததைப் போன்ற உணர்வு.

சாக்கோ-லா புதுவையில் சாக்லேட்டுகளுக்காக மட்டுமே பிரத்தியேகமாக இயங்கும் கடை.  சாக்லேட் கேக், சாக்லேட் குக்கீஸ் என எங்கும் சாக்லேட் மயம்தான். ''2003-ல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வந்த ஐடியாதான் சாக்கோ-லா. நான் முதலிலேயே சொன்ன மாதிரி இந்தியர்கள் சாக்லேட் சாப்பிடுவதைவிட சுவீட்ஸ் சாப்பிடுவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

இந்த நிலையை எப்படியும் மாற்ற வேண்டும் என்று எனக்கு ஆசை. பொதுவாகப் பல சாக்லேட்டுகள் காய்கறிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இங்கு இருக்கும் சாக்லேட்டுகள் சொகொவா பட்டர் எனப்படும் மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப் பொருளை பெல்ஜியம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த சொகொவா பட்டரில் இனிப்பு அளவாக இருக்கும். இதில் இருந்து பல வகையான சாக்லேட் கேக் செய்யலாம்.

சாக்லேட் எடு... கொண்டாடு!

நாங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் பல புதுமைகளை சாக்லேட்டில் செய்துவருகிறோம். 624 கிலோவில் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலையை சாக்லேட்டாக வடிவமைத்தோம். இந்தச் சிலையை வடிவமைக்க எங்களுக்கு 42 நாட்கள் ஆனது. அடுத்ததாக 600 சிறிய பட்டாம்பூச்சிகள், எட்டு அடி ரயில், ரஜினிகாந்த் எனப் பல வகையான சாக்லேட் சிலைகளைச் செய்தோம்.

சாக்லேட் எடு... கொண்டாடு!

நாங்கள் சாக்கோ-லாவை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. பொதுவாக வெளிநாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள், ஃபாரின் சாக்லேட்டுகள் வாங்கி வருவார்கள். ஆனால், இப்போது சாக்கோ-லாவில் இருந்து வெளிநாட்டுக்கு சாக்லேட் வாங்கிச் செல்கிறார்கள்'' என்று சிரிக்கிறார் ஸ்ரீநாத்.

ஆ.நந்தகுமார்
படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு