Published:Updated:

நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க!

நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார் 'நீயா... நானா’ கோபிநாத். 'பேட்டி எடுக்கிற உங் களையே மாணவர்களைவெச்சுப் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும்?’ என்றேன். ''சூப்பரா இருக்குமே?'' என்றார். அப்புறம்... நடந்தது என்ன?

 '' 'நீயா... நானா’வில் நிறையப் பேருக்கு அட்வைஸ் பண்றீங்களே. உங்களுக்கு அது மாதிரி யாராவது அட்வைஸ்..?''

(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நாங்க எங்கங்க 'நீயா... நானா’வில் அட்வைஸ் பண்றோம்? 'நீயா நானா’வின் நோக்கமே அட்வைஸ் பண்ணக்கூடாதுங்கிறதுதான். ஒருத்தன் கறுப்புதான் அழகுங்கிறான். இன்னொருத்தன் வெள்ளைதான் அழகுங்கிறான். பேசி ஒரு முடிவுக்கு வாங்கனுதான் சொல்வோம். 'நீயா... நானா’ நிகழ்ச்சி சில மதிப்பீடுகளுக்கு வரும். முடிவுகளுக்கு வராது. ஒருநாளும் நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணியது கிடையாது. ஏன்னா, என் அட்வைஸ் காஸ்ட்லியானது. அதுபோக எனக்கு அட்வைஸ் பண்ற வயசும் வரலை.''

நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க!

'ப்ளீஸ்... இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’னு  ஏன் சார் பேர் வெச்சீங்க?''

''எந்தப் புத்தகமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையைத் திருத்திடாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஏன் இந்தத் தலைப்பு வெச்சேன்னு அந்தப் புத்தகத்தின் முன்னுரையி லேயே சொல்லி இருக்கேன். உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயத்தைத் திரும்பிப் பார்க்கிறதுக்கான வாய்ப்புதான் அந்தப் புத்தகம்!''

''நீங்க எதனால மீடியாவைத் தேர்ந்தெடுத்தீங்க?''

நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க!

''வேற வழி இல்லாம எல்லாம் தேர்ந்தெடுக்கலை. மீடியாதான் வேணும்னு தேர்ந்தெடுத்தேன். அடிப்படையில் எனக்கு எல்லோருடனும் பழகிக்கொண்டு இருக்கிற மாதிரியான வேலை வேணும். அதுக்கு ஒரே வழி மீடியாதான்!''

''நிகழ்ச்சிக்கு நடு நடுவுல போய்த் தரையில உட்கார்ந்துக்கிறீங்க, ஸ்டெப்ஸ்ல உட்கார்ந்துக்கிறீங்களே?''

''வேற என்ன பாஸ், கால் வலி தாங்காம உட்கார்ந்திருக்கேன். அது மட்டும் இல்லாம ஒரு நிகழ்ச்சியில நிர்மாணிக்கப்பட்ட கட்டமைப்பு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு நிகழ்ச்சியாளர்னா நேராதான் நிக்கணும்னு இல்லை. அந்தச் சூழ்நிலையை மாற்ற முயற்சி பண்றேன். ஒரு அம்மா அவங்க வீட்டுக் கதையைச் சொல்றாங்கனா நானும் கதை கேட்கிற மாதிரி உட்கார்ந்துக்கிட்டா அவங்களும் வெத்தல பாக்கு போடற மாதிரி சாவகாசமா உட்கார்ந்துக்கிட்டுப் பேசுவாங்க. கம்யூனிகேஷன் என்பது வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல; எதிரில் பேசறவங்களுக்குச் சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கணும்!''

''கோபிநாத்னாலே கோட்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். இந்த நிகழ்ச்சிக்கு கோட் போடாம வந்திருக்கீங் களே?''

''வெளியில நான் எங்கங்க கோட் போட்டு பார்த்திருக்கீங்க? தமிழ்நாட்டுல கல்யாணத்துக்கு கோட் போடாத முதல் ஆள் நான்தான். நிகழ்ச்சிக்காக மட்டும்தான் «காட் போடறேன்பா. அந்த நிகழ்ச்சியில் நான் கோட் போடற ஸ்டைல் முறையான ஸ்டைலே கிடையாது. காலரை எடுத்து வெளிய விட்டுப்பேன். இன் பண்ண மாட்டேன். மேல் பட்டன் போட மாட்டேன். டை கட்டினா தொண்டை கட்டும். இன் பண்ணிட்டு அடிக்கடி கையைத் தூக்கினா சட்டை வெளியே வரும். அதனால என் வசதிக்கு அணியறேன்!''

நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க!

''உங்களைப் பாதித்தப் புத்தகம்னு ஏதாவது இருக்கா?''

''தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'தோழர்’!''

''உங்க நிகழ்ச்சி மூலமா பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறீங்க அவங்ககிட்ட இருந்து கற்றுக்கிட்டது என்ன?''

'' 'உலகத்துல ஒவ்வொருத்தனும் கெட்டவனாயிட்டான், ஒவ்வொருத்தனும் திருடனாயிட்டான், ஒவ்வொருத்தன் மனசுக்குள்ளேயும் வக்கிரம் படிஞ்சிருக்கு’னு நமக்கு நிறைய தப்பான அபிப்ராயங்கள் இருக்கு. அடிப்படையில அது தப்பு. இன்னைக்கும் நிறைய மனுஷங்களுக்கு ஈரம் இருக்கு. நாட்டுக்கு உழைக்கணும்கிற எண்ணம் இருக்கு. அம்மா அப்பாவைக் காப்பாத்தணும்கிற அக்கறை இருக்கு. மழையில நனையணும்கிற இதயம் இருக்கு. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!''  

- அ.அச்சனந்தி
படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு