Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்தத் தொடர் தொடர்பாக விகடன் டாட் காமில் வரும் பின்னூட்டங்களில், 'இணையம், அது சார்ந்த தொழில்முனைவுகள், கணிப்புகளைப் பற்றி மட்டுமே எழுதுவது ஏன்அண்டன்? இவற்றைத் தாண்டியும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உண்டே.... அவற்றையும் எழுதினால் என்ன?’ என்ற கேள்விகள் அடிக்கடி வெளிப்படுகின்றன.

 அதனால், இந்த ஒரு வாரம் மட்டும், முடிந்த வரை இணையம் தவிர்த்த வருங்காலத் தொழில்நுட்பங்களை கவர் செய்ய எண்ணம்.

நாளுக்குப் பல மணி நேர மின் வெட்டால் அவதிப்படும் மெயின்லேண்ட் வாசகர்களைக் கருதி முதல் ஏரியா மின் சக்தி.

நிலக்கரி போன்ற படிம எரிபொருட்களைப் (Fossil Fuels) பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மின் சக்தியின் சுற்றுப்புறச் சூழல் கேடுகள் இல்லாமல், புதுப்பிக்கத்தக்க மின் சக்தி தயாரிக்கும் முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்குச் சமீபத்திய சில வருடங்களில் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டதன் பலன் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்திருக்கிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

குறிப்பாக, சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மின் சக்தியைப் பொறுத்தவரை, வீட்டுக் கூரை மீது பொருத்தப்பட்ட சோலார் பேனல்களில் இருந்து பெறும் முறை மட்டுமே இதுவரை இருந்தது. சோலார் ரோட்வேஸ் எனப்படும் பரிசோதனை முயற்சி வெற்றியடையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. தார் சாலையின் மீது சோலார் பேனல்களைப் பதித்துவைத்து அவற்றில் இருந்து மின்சாரம் தயாரித்து விநியோகிக்க முடியும் என்பதைச் சிறிய அளவில் பரிசோதனையாகக் காட்டிவந்த இந்தத் திட்டத்தை ஆம்ஸ்டர்டாம் நகரில் பெரிய அளவில் செயல்படுத்தி இருக்கிறார்கள். இப்போதைக்கு சாலை விளக்குகள், சிக்னல் போன்றவற்றை இயக்கத் தேவையான மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்துகொள்ளும் வலிமைதான் இந்த சூரிய ஒளி மின் உற்பத்திச் சாலைகளுக்கு இருக்கிறது. என்றாலும் இந்த முயற்சியின் தொலைநோக்கு பிரமிக்கவைக்கிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

'உலக உருண்டையில் எந்தக் கணத்திலும் பாதி நேரம் சூரிய ஒளி இருக்கிறது. இந்த நேரத்தில் மின் உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்தி, மீதி இருப்பதை இருட்டில் இருக்கும் மற்ற பாதிக்குக் கொடுக்கும் வசதியைக் கொண்டுவர முடியும்!’ என்றுஎல்லாம் வங்கத்து நீரை மையத்து நாடுகளுக்குக் கனவில் கொண்டுவந்த பாரதிபோல பிரமாண்டப் பார்வையுடன் பலரது கவனத்தை ஈர்த்தபடி இருக்கிறது இந்த முயற்சி. மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்துக்குச் செல்லுங்கள் http://solarroadways.com/intro.shtml

இந்தியாவில் சாலை விபத்தில் இறப்பவர்களில் கணிசமானவர்கள் பாதசாரிகள். இதற்கான காரணங்களில் ஒன்று... வாகன ஓட்டுநரின் பார்வைக்கு அப்பால் மறைந்திருக்கும் பிளைண்ட் ஸ்பாட் (blind spot). புதியதொரு  தொழில்நுட்பம் பாதசாரிகள் விபத்தில் அடிபடுவதைக் குறைக்க உதவுகிறது. மொபைல் ஐ (Mobil eye) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், வாகன ஓட்டுநரின் இரு கண்களைத் தவிர, மூன்றாவது செயற்கைக் கண்ணையும் கொடுக்கிறது. கண நேரத்தில் எடுக்கப்பட்டுவரும் வீடியோக்களின் மூலம் விபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது. இது மட்டும் அல்ல... குடி போதையில் கார் ஓட்டுவதைத் தடுக்கும் தொழில்நுட்பமும் தயார். ஆல்கஹாலின் விளைவால் கண்ணின் கருவிழி விரிந்திருப்பதைக் கண்டுபிடித்து, வாகனத்தின் இன்ஜின் இயக்கத்தை அணைத்துவிடும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டால், விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

அடுத்த ஏரியா விவசாயம்.

வீட்டு மாடிகளில் ஒளி புகாத இடங்களில் விளக்குகளைக்கொண்டு விவசாயம் செய்யும் முயற்சிகள் அதிகரித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஜப்பானில் சோடியம் வேப்பர் விளக்குகளைக்கொண்டு அரிசி சாகுபடி வருடத்துக்கு மூன்று முறை செய்வதை விளக்கும் வலைப்பக்கம்  (http://www.treehugger.com/green-food/pasona-o2-urban-underground-farming.html) ஆச்சர்யமூட்டும் அதேவேளையில், இதுபோன்ற ஒரு முயற்சியைச் செய்யும் அளவுக்கு உத்வேகம் இல்லையே

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

என்பவர்களுக்கு ஒரு வழி இருக்கிறது.

இங்கிலாந்தில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ்ஸ்யெர் அருகில் விவசாயப் பண்ணை ஒன்று இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்தப் பண்ணையை நிர்வகிப்பதில் நீங்கள் பங்கு பெறலாம். ஒவ்வொரு நாளும் பண்ணையில் நடக்க வேண்டிய செயல்களைப் பற்றிய விவாதங்களில் நீங்கள் பங்குபெறுவது மட்டும் அல்ல, அதன்முடிவு களுக்கு வாக்களிக்கும்உரிமையும் உங்க ளுக்கு உண்டு. உழுவதில் இருந்து, நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது எனப் பண்ணையில் நேரடியாக வேலை செய்பவர்கள் உங்களது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொள் வார்கள். 'சொன்னபடி கேளு; மக்கர் பண்ணாதே!’ என ஆடு, மாடுகளுடன் சிங்காரவேலனாக ஆடிப் பாட முடியாத குறை தவிர, நீங்கள் ஒரு சைபர் விவசாயி ஆகிவிடலாம். வலைதள உரலி http://www.my-farm.org.uk/

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு