Published:Updated:

பந்தம் ஓர் ஒப்பந்தம்

பந்தம் ஓர் ஒப்பந்தம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

170 ஷரத்துக்கள் கொண்டது அது!

 என்ன 'அது’?

நாட்டையே ஆட்டிவைக்கிற சட்டமா?

இல்லை; இந்த உலகத்திலேயே மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு திருமண ஒப்பந்தம் அது!

பந்தம் ஓர் ஒப்பந்தம்

மாஜி அமெரிக்க 'வெள்ளை மாளிகை’ அரசியான ஜாக்குலினுக்கும் ஒனாஸிஸுக்கும் ஏற்பட்ட திருமண பந்த ஒப்பந்தம்!

1968 அக்டோபர் 20-ம் தேதி திருமணம் செய்துகொண்ட ஜாக்குலின் - ஒனாஸிஸ் இருவருக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில சுவையான அம்சங்கள் இவை:

ஷரத்து-19: ஒனாஸிஸ், ஜாக்குலின் இருவருக்கும் தனித் தனி படுக்கை அறைகள் இருக்க வேண்டும்.

ஷரத்து-23: ஜாக்குலின் ஒனாஸிஸுக்காகக் குழந்தை பெற்றுத் தருவதில்லை என்ற தெளிவான நிபந்தனையின்படி தான் இந்தத் திருமணம். எனவே, அதற்காக ஒனாஸிஸ், ஜாக்கியை வற்புறுத்தக் கூடாது.

பணம் சம்பந்தப்பட்ட ஷரத்து இது: ஒனாஸிஸ், ஜாக்கியை விவாகரத்து செய்தால், இருவரும் தம்பதியாக வாழ்ந்த ஒவ்வொரு வருடத்துக்கும் 10 மில்லியன் டாலர்கள் (ஏழரைக் கோடி ரூபாய்) என்று கணக்கிட்டு, ஜாக்கிக்குத் தர வேண்டும். திருமணமாகி ஐந்து வருடங்களுக்குள் ஜாக்கியே அவரை விட்டுச் சென்றால், 20 மில்லியன் டாலர்கள் மட்டும் (15 கோடி ரூபாய்) ஒனாஸிஸ் அவருக்குக் கொடுத்தால் போதுமானது.

அவர்கள் தம்பதியாக இருக்கும்போது ஒனாஸிஸ் இறந்துவிட்டால், 100 மில்லியன் டாலர்கள் (75 கோடி ரூபாய்) ஜாக்கிக்குக் கிடைக்க வேண்டும்.

ற்பனைக்கு எட்டாத அளவில் பணத்தை விரயமாகச் செலவு செய்து மற்றவர்களைப் பிரமிக்கவைக்கும் கிரேக்கத் தொழிலதிபர் ஒனாஸிஸ், சில சமயம் மிகவும் கஞ்சத்தனமாக நடந்துகொள்வதும் உண்டாம்!

பந்தம் ஓர் ஒப்பந்தம்

னாஸிஸுக்குச் சொந்தமான ஸ்கோர்பியஸ் தீவில் ஒருநாள் ஜாக்கி, ஓர் உயர்தர சென்ட் பாட்டிலைக் கை தவறுதலாகக் கொட்டிவிட்டார். கணவரிடம் உடனே அந்த 'சாதனல் நம்பர் 5’ என்ற சென்ட்டைப் பாரீஸில் இருந்து வரவழைக்கச் சொன்னார். பாரீஸில் உள்ள உதவியாளருக்கு டெலிபோன் செய்து மீடியம் சைஸ் பாட்டில் ஒன்றை உடனே தருவித்துக் கொடுத்தார் ஒனாஸிஸ்.

ஆனால் ஜாக்கியோ, கணவருடன் அதற்காகச் சண்டை பிடித்தார். ஏன் தெரியுமா? பெரிய சைஸ் பாட்டிலுக்குப் பதிலாக மீடியம் சைஸ் பாட்டிலை வரவழைத்துவிட்டார் என்பதற்காக. ''உங்கள் சிறிய பாட்டில் சென்ட்டுக்கு தேங்க்ஸ். சிறிய பரிசுக்கு எவ்வளவு பெரிய டிரிப்?'' என்று குத்தலாகச் சொல்லி விட்டு, உள்ளே சென்ற ஜாக்குலின் அன்று முழுவதும் தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை யாம்.

பந்தம் ஓர் ஒப்பந்தம்

ஜாக்குலின் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நான்கு தடவை உடைகளை மாற்றுகிறார். ஒவ்வொரு தடவையும் உள் ஆடைகள், காலுறை கள் இவற்றை டஜன் கணக்கில் அணிந்து பார்த்த பின்னரே சரியான வற்றை அணிவாராம்.

ஜாக்கிக்கு ஆகிற நகைக் கடை பில் மட்டும் மாதம் 20,000 டாலர்கள் (1,50,000 ரூபாய்). 1970-ம் வருடம் அவர் பிறந்த தினத்துக்கு ஒனாஸிஸ் அளித்த பரிசு 1,20,000 டாலர்கள் விலை மதிப்புள்ள படுக்கை அறை செருப்புகள்.

பட்டுப் படுக்கை விரிப்பைப் பற்றி ஜாக்கி மிகவும் கண்டிப்பாக இருப்பாராம். ஒரு விரிப்பில் இரண்டு நாட்களுக்கு மேல் படுக்க மாட்டா ராம்! பயணம் செய்யும்போது டஜன் கணக்கில் பட்டுப் படுக்கை விரிப்புக் கள் கூடவே போகுமாம்!

ஒனாஸிஸ் மிகவும் பிஸியான மனிதர். சும்மா உட்காருவதற்கு அவருக்குப் பிடிக்காது.

ஜாக்கிக்கோ, ஏதாவது படித்துக்கொண்டு இருப்பது, சன்-பாத் எடுப்பது, மாலை என்ன டிரெஸ் பண்ணலாம் என்று சிந்தனை செய்வது - இவை எல்லாம் பிடித்த பொழுதுபோக்குகள்.

ன்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்துக்கொண்டு இருந்த ஜாக்கி, தானும் ஒரு சாதாரணப் பெண் என்று நினைவுகொள்ள ஒரு திருப்பம் ஏற்பட்டது.

1970-ம் ஆண்டு நியூயார்க்கில் இருந்தபோது, ''நாம் இருவரும் சேர்ந்து வாழ்வது இனி சாத்தியம் இல்லை. நமது திருமண ஒப்பந்தத்தின்படி உனக்குச் சேர வேண்டிய தொகை யைக் கொடுத்துவிடுகிறேன். நமது திருமணம் முழுத் தோல்வி, என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார் ஒனாஸிஸ். ஜாக்கி மறுப்பு, சமா தானம் எதுவும் கூறவில்லை. ''என் வக்கீல் மூலம் தெரிவிக்கிறேன்!'' என்று மட்டும் பதில் சொன்னார்.

உடனே, ஒனாஸிஸ் புறப்பட்டு பாரீஸ் சென்றார். அவர் தனது முன்னாள் மனைவி மேரியா சல்லா ஸுடன் சேர்ந்து ஒரு பாரீஸ் ஹோட்டலில் அந்நியோன்னியமாகச் சேர்ந்து சாப்பிட்ட புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.

ஜாக்குலின் இதைப் பார்த்தார்.

உடனே பாரீஸுக்குப் பறந்து சென்றார். ஒனாஸிஸ் தங்கி இருந்த இடத்துக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக்கொண்டு இருந்தார். அவர் கண்கள் அழுது அழுது சிவந்து வீங்கி இருந்தன.

ஒனாஸிஸ் வந்ததும் அவரது மார்பில் குழந்தை மாதிரி தஞ்சம் அடைந்து அழுதார்.

அதுதான் அவர்களது திரு மணத்தை அந்தத் தடவை மீண்டும் காப்பாற்றியது.

1971-ம் ஆண்டு மார்ச் மாதம், 'கிறிஸ்டினா’ கப்பலில் இருவரும் இருந்தபோது திடீரென்று புயல் அடித்தது. ஜாக்கி மிகவும் பயந்துபோய்க் கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்த ஒனாஸிஸை எழுப்பித் தன் அறைக்கு வரும்படி கெஞ்சினார். அடுத்து வரும் நாட்களிலும் இரவுகளில் மீண்டும் புயல் வரும் என்ற சாக்கில் ஒனாஸிஸைத் தன்னுடனே இருக்கச் செய்தார். இருவருக்கும் வேறு வேறு படுக்கை அறைகள் இருக்க வேண்டும் என்ற அவர்களது திருமண ஒப்பந்தத்தின் 19-வது ஷரத்து அத்துடன் முடிந்தது!

- எஸ்.ரஜத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு