Published:Updated:

சாதனை மனிதர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள்!

சாதனை மனிதர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள்!

##~##

'சென்னை அண்ணா நகரில் எத்தனையோ தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஆனால், 'பி.எல்.ராஜ் மெமோரியல் ஸ்டடி சர்க்கிள்’ ரொம்பவே ஸ்பெஷல். இது முழுவதும் பெண் களால் நிர்வகிக்கப்படுகிறது. எளிமையான முறையில் இயங்கும் இந்தப் பயிற்சி மையம் பற்றி 'என் விகடனி’ல் எழுதலாமே!’ - இது பெரம்பூர் வாசகர் பரம தயாளன் வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல்.

 அண்ணா நகர் சாந்தி காலனியில் ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட்டின் கீழ் தளத்தில் எந்த விளம்பரமும் இன்றி இயங்கி வருகிறது பி.எல்.ராஜ் ஸ்டடி சர்க்கிள். ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் சவாலாக இருக்கும் 'பொது அறிவுத் தாள்’, 'சமூகவியல்’ பாடங்களில் சொல்லி அடிக்கிறார்கள். இந்த நிறுவனத்தை நடத்தி வரும் சுடரொளி, ''நானும் என் தோழி குமரேஸ்வரியும் டெல்லியில் தங்கி சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிவந்தோம். அந்தச் சமயத்திலேயே குமரேஸ்வரிக்கு சமூகப் பணியில் ஆர்வம் அதிகம். டெல்லியில் ஆர்வமாகக்குவிந்துக் கிடந்து குழப்பங்களுடன் படிக்கும் தமிழக மாண

சாதனை மனிதர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள்!

வர்களையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் பார்த்துப் புதுமையான இலகுவான பயிற்சி மையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பாள். அவ ளுடைய முயற்சியால் 2006-ல் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. குமரேஸ்வரிக்கு டெபுடி ரெஜிஸ்டராகத் தமிழ்நாடு அரசுப் பணி கிடைத் ததும் நானே இந்த மையத்தை நிர்வகித்துவருகிறேன். இதுவரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 30-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கும் டெபுடி கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கும் பலரை எங்கள் மையம் உருவாக்கி அனுப்பியுள்ளது'' என்கிறார்.

சாதனை மனிதர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள்!

இந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்தவரான குமரேஸ்வரியிடம் பேசினேன். ''என் நண்பரும் ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான ஜெய்கணேஷ§க்கு முதல் நன்றி. டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர் வுக்குப் படித்த சமயத்தில், தமிழ் வழியில் படித்த அவருக்குப் பாடத் தயாரிப்பில் உதவி புரிந்தேன். அவருக்கு வகுப்பும் எடுத்தேன். 'உங்களிடம் ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறார். கடினமான விஷயங் களையும் எளிமையாக்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது நீங்கள் பாடம் எடுக்கும் முறை’ என்று என்னை ஊக்கப்படுத்துவார். அந்த ஆண்டு எனக்கு சர்வீஸ் கிடைக்காதபோதும் ஜெய் கணேஷ§க்கு ஐ.ஆர்.எஸ். கிடைத்தது. தேர்வுக்கான வயது வரம்பு முடிந்த நிலையில்என் தோழியுடன் இந்தப் பயிற்சி மையத்தைஆரம்பித்தேன். என் அண்ணன் ராஜ், இளம் வயதில் துடிப்பாகக் களப்பணி செய்தவன். 30

சாதனை மனிதர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள்!

வயதுக்குள் இந்தியா முழுக்கப் பயணித்து பல ஆய்வுகள் மேற் கொண்டவன். 'நீ ஐ.ஏ.எஸ். தேர்வானால் காஷ்மீருக்கோ, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றிலோ சேவை செய்தால்தான் இந்தத் தேர்வுக்கே அழகு!’ என்பான்.

பலவிதமான கனவுகளோடு இளம் வயதி லேயே இறந்தும் போனான். அவனுடையநினை வாக ஆரம்பிக்கப்பட்டதே இந்த மையம். ஜெய்கணேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கைகொடுத்து உதவ, இப்போது ஆண்டு ஒன்றுக்கு 70 மாணவர்கள் வரை எங்களால் பயிற்றுவிக்க முடிகிறது.

சுடரொளியின் கடின உழைப்பால் ஆண்டுக்கு 10 பேராவது சர்வீஸ் வாங்குகிறார்கள். முழுக்க முழுக்க இலவசமாக நடத்தியபோது, 'தர்மத்துக்கு நடத்தினால் என்னத்த நடத்தப் போறாங்களோ?’ என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதைத் தவிர்க்கவே மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம். அது ஆசிரியர்களுக்கான சம்பளத்துக்காகத்தான். உண்மையில் கஷ்டப்படும் மாணவர்கள் யாரி டமும் நாங்கள் கட்டணம் வசூலிப்பது இல்லை. அமெரிக்காவில் இருக்கும் என் அண்ணன், அண்ணியும் நண்பர்களும்தான் பொருளாதார ரீதியாக இந்த மையத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் கள். இது எல்லாவற்றையும்விட சுடரொளி, பார்கவி, லாவண்யா சபரீஷ், ஜெயலஷ்மி, ரமேஷ் கருப்பையா, சுபாஷ் போன்ற நல்ல உள்ளங் களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்'' என்கிறார்.

வெல்டன் கேர்ள்ஸ்!

- ஆர்.சரண், படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு