Published:Updated:

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

க்ரீன் டீயின் கடமைகள்!

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

உலகம் பல நூறு வருஷங்களாக தேநீர் பருகிக்கொண்டு இருக்கிறது. பல வகை தேநீர் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படுவது பிளாக் டீ, க்ரீன் டீ, ஓலாங் டீ ஆகியவைதான். இதில் க்ரீன் டீயின் பயன்பாடுகள் அதிகம். வாழ்நாளை அதிகப்படுத்த, உடல் எடையைக் குறைக்க, நினைவுத் திறனை அதிகப்படுத்த, சர்க்கரை நோயைக் குறைக்க, மன அமைதிக்கு... என்று க்ரீன் டீ-யின் பயன்கள் அதிகம்!

இது கிராஃபைட் காலம்

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

பள்ளி நாட்களில் பென்சில் வழியே நமக்கு அறிமுகமாகும் கிராஃபைட் வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் வாகை சூடப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தில் உள்ள கம்பர்லாந்து என்ற  இடத் தில் சுரங்க வேலை நடைபெறும்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டதுதான் கிராஃபைட். கார்பன் என்ற கரிப்பொருள்தான் கிராஃபைட் ஆகும். கிராஃபைட்டையும் களிமண்ணையும் சேர்த்து நன்றாக அரைத்து, சன்னமான குச்சிகளாக உருட்டி, சூளைகளில் இட்டு சூடாக்கி பென்சில்கள் தயாரிக்கின்றனர்.

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

இது வெப்பத்தாலோ, குளிரினாலோ பாதிக்கப்படுவது இல்லை. இதனால் தான் இவற்றை விமானப் பகுதிகள், ஏவுகணைகள் மற்றும் வின்வெளி கலங்களின் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர். குறைவான எடை, அதிக வலு... இவற்றால் செயற்கைக் கைகள், செயற்கைக் கால்கள் போன்ற செயற்கை உடல் உறுப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பந்தய கார்கள், மீன் பிடிப் படகுகள், கூடாரம் அமைக்கத் தேவைப்படும் துணிகள், பஞ்சாலைகளில் பயன்படும் எந்திரங்கள், இசைக் கருவிகள், சைக்கிள்கள் என எங்கும், எதிலும் கிராஃபைட்தான்.

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மனித குலத்தைக் காக்க கிராஃபைட் உதவுமா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்துவருகிறது. மற்றொரு பக்கம் நானோ தொழில்நுட்ப ஆய்வுகளிலும் கிராஃபைட் இடம்பெற்று இருக்கிறது. 'வருங்காலம் கிராஃபைட் காலம்’ என்பதில் சந்தேகம் இல்லை!

சாம்பிராணியின் கதை!

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

மத வழிபாடு முதல் மருத்துவப் பயன்பாடு வரை உதவும் சாம்பிராணி எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறுவயதில் அரிஸ்ட்டாட்டிலிடம் கல்வி பயின்றுகொண்டு இருக்கும்போது, தன் ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார். பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடு களின் படையெடுப்பின்போது, மூட்டை மூட்டையாக சாம்பிராணியை பெற்று அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பிவைத்தார்.

சாம்பிராணி என்பது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata)  எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense)  என்ற மரத்தில் இருந்து வடியும் பால் ஆகும். இது மிக மெதுவாகக் கடினமாகி ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையும் உடைய சாம்பிராணியாக மாறுகிறது. எரித்தால் மிகுந்த மணம் பரப்பும் இந்த ஃபிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிலும் அதிமாகக் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் கல்வராயன், சேர்வராயன் மலைச் சரிவுகளில் 500 மீ. - 700 மீ. உயரத்தில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. பால் வடியும் ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 1 கிலோ  வரை சாம்பிராணி பெற முடியும்!

கலைடாஸ்கோப் செய்வது எப்படி?

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

கலைடாஸ்கோப்... 1800-களில் கண்டுபிடிக்கப்பட்ட இது, எளிய கணிதத் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. பழங்காலத்தில் விளையாட்டுக் கருவியாகவும், நெசவுத் தொழிலில் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களை உருவாக்கவும் கலைடாஸ்கோப்பைப் பயன்படுத்தினார்கள்.

கலைடாஸ்கோப் செய்வது மிகவும் எளிது. ஒரே அளவு உள்ள மூன்று பட்டை வடிவ கண்ணாடிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இவை போட்டோ ஃபிரேம் போடும் கடைகளில் கிடைக்கும். அவைகளை முக்கோண வடிவில் பொருந்துமாறு ஒட்டவைக்கவும். இருபுறமும் இருக்கும் திறப்புகளில் ஒரு பக்கம் ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் காகிதத்தால் மறைத்துக் கட்டுங்கள்.

வலையோசை : நிலாக் கால நினைவுகள்!

உள்ளே உடைந்த கண்ணாடி வளையல்கள், சிறு வண்ண மணிகள், கண்ணாடித் துண்டுகளைக் கொஞ்சம் போட்டு மறுபக்கத்தை ஒளி ஊடுருவாத காகிதம்கொண்டு அடையுங்கள். பின்பு கலைடாஸ்கோப்பினை மெள்ளச் சுழற்றுங்கள்... உங்கள் கற்பனைக்கே எட்டாத வண்ண வடிவங்கள் தோன்றும்.

இதைக் கடைகளில் இருந்து வாங்கி உங்களின் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். குழந்தைகளையே செய்யச்சொல்லிக் கொடுங்கள். அவர்களாகவே வண்ண வடிவங்களை உருவாக்கட்டும். இவ்வாறு சிறு கருவிகள் செய்து அதைப் பயன்படுத்திப் பார்க்கும்போது அவர்களின் நுண்ணறிவு கூர் தீட்டப்படுவதோடு, அறிவியல் ஆர்வமும் பன் மடங்கு பெருகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு