Published:Updated:

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

##~##

றுப்பு நிறம், சுருண்ட முடி, ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட் சகிதம் வீதியில் வலம்வரும் ருவாண்டா மாணவ- மாணவிகளைப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் தோன்றாது. ஆனால், அவர்களுடைய சோகம் மிகுந்த வரலாற்றைக் கேட்டால், கண்கள் குளமாகின்றன!

 ருவாண்டாவில் 1994 ஏப்ரல் மாதம் நடந்த இனப் படுகொலையை, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி இன அழிப்பு எதிர்ப்புத் தினமாக ருவாண்டா மக்கள் அனுசரிக்கிறார்கள். இதன் 18-ம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சியை சேலம் ருவாண்டா மாணவர்கள் சங்கம் கடந்த 7-ம் தேதி சேலத்தில் நடத்தியது. இந்தச் சங்கத்தின் செயலாளர் பிஜிமனா அல்பெர்ட் பேசும்போது, பார்வையாளர்கள் பலரும்

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

கண்கலங்கினார்கள்.

''ஆப்பிரிக்காவின் நடுவில் உள்ள சிறிய நாடு ருவாண்டா. ஹூட்டு, டுட்ஸி ஆகிய தொன்மையான பழங்குடி இன மக்கள் வாழும் இங்கு, ஹூட்டு இனத்தவர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரண்டு பிரிவினரும் மொழியில் ஒன்றுபட்டாலும் அதிகாரப் பகிர்வில் இருவருக்கும் நீண்டகால பகைமை தொடர்ந்தன. 30 ஆண்டு கால பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் அடைந்ததும், ஹூட்டு இனத்தவர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். டுட்ஸி சிறுபான்மையினருக்கு எதிரான இனக் கலவரங்கள் அதிகரிக்கவே... டுட்ஸி புரட்சியாளர்கள் ஹூட்டு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர்.

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

ஜனாதிபதி ஹபி யாரிமனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க... ஆத்திரம் அடைந்த ஹூட்டு ராணுவம் 'இன்தர் கம் வே’ என்னும் கூலிப் படைக்கு ரகசியமாகப் பயிற்சிக் கொடுத்து... அவர்கள் ஜனாதிபதியின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்கள். 'டுட்ஸி கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதியைக் கொலைசெய்துவிட்டார்கள்’ என்ற செய்தி ஹூட்டு மக்களிடம் காட்டுத் தீ போல பரவியது. 'நெட்டை மரங்களை வெட்டித் தள்ளுங்கள்’ என்ற சங்கேத வாசகத்தை ஹூட்டு வானொலி அறிவிக்க... இன அழிப்பு ஆரம்பமானது. டுட்ஸி இனக் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். சாலைகளில் கொத்துக் கொத்தாக இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்டார்கள்.

துப்பாக்கியால் சுட்டால் தோட்டா செலவாகிவிடும் என்று ஈட்டியால் குத்தியும் அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் டுட்ஸிகள் கொலை செய்யப்பட்டார்கள். சிதைந்த உடல்களில் இருந்து வெளியேறிய குருதி, விக்டோரியா ஏரியை சிவப்பாக்கியது. இப்படி 100 நாட்களில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், உலகத்தின் ஊனக் கண்கள் திறக்கவில்லை. இனி உலகத்தில் எங்குமே இதுபோன்ற இன அழிப்பு நடக்கக்கூடாது...'' என்றார் கண்ணீருடன்!

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

இந்தக் கலவரத்தில் தன்னுடைய தாயை கண் முன்னே பலிகொடுத்து இருந்தார், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சாம். ''சிறுவனாக இருந்த என்னைத் தூக்கிக்கொண்டு என் அம்மா ஓடிக்கொண்டு இருந்தார். பின்னால், சுமார் 50 பேர்கொண்ட கூட்டம் துரத்தியது. கூட்டம் நெருங்கி வந்ததும் தப்பிக்க முடியாது என்று கருதிய என் அம்மா, என்னை அருகில் ஓடிய கால்வாயில் தூக்கி எறிந்தார். கால்வாயை நீந்தி புதர் மறைவில் நின்று, நான் கண்ட காட்சிகளை இனி உலகில் யாரும் பார்க்கக் கூடாது.

இனி எங்கும் வேண்டாம் இன அழிப்பு!

அதற்குப் பிறகு எங்கள் நாட்டில் நடந்ததுபோல இலங்கையில் நடந்த இன அழிப்பை இணையத்தில் பார்த்து கொதித்துப்போய் பல நாட்கள் அழுதேன். எங்களைக் காக்கத் தவறியது போலவே இப்போதும் உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் அவர்களையும் பாதுகாக்கவில்லை. இனி ஒருபோதும் வேண்டாம் இனப் படுகொலை'' - ஆற்ற முடியாத அழுகையுடன் இரு கை தூக்கி கும்பிடுகிறார் சாம்!

   - வீ.கே.ரமேஷ்
  படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு