Published:Updated:

வலையோசை : புலம்பல்கள்

வலையோசை : புலம்பல்கள்

வலையோசை : புலம்பல்கள்

கிரிக்கெட் எனக்குப் பிடிக்காது என்று சொல்வது நாத்திகம் பேசுவது மாதிரி. அப்பா, தம்பி, நண்பர்கள்

வலையோசை : புலம்பல்கள்

முதற்கொண்டு எல்லோருமே கிரிக்கெட் பிரியர்கள் என்பதால், நாத்திகத்தை நமக்குள்ளேயே வைத்துக்கொள்வதைப் போல இந்த எண்ணத்தையும் உள்ளேயே வைத்துக்கொள்வேன்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி வந்தாயிற்று. அதுவும் பாகிஸ்தானுடன் மோதல் என்றதும் ஊரே பற்றிக்கொண்டது. எனக்கு எப்போதுமே பெரிதாக பாகிஸ்தான் மேல் விரோதம் இருப்பது இல்லை. 'நாடு என்பது மக்கள்; மக்கள் என்பவர்கள் அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் அல்லர்’ என்பது என் எண்ணம். இந்தியா ஜெயிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், ஒரு பாக். வீரர் பந்தினால் காயம்பட்டு ரத்தம் சிந்தியபோதும், நடுவாக விளையாட இறங்கிய ஒரு மிக இளம் வீரர் அவுட்டாகி சோகமாக வெளியேறியபோதும் பாவமாக இருந்தது.

தோல்வியைச் சில நிமிடங்களில் ஜீரணித்துக்கொண்டு அழகாக, 'என்டெர்டெயினிங்கான ஒரு விளையாட்டைத் தந்தோம் என்று நம்புகிறேன். இருப்பினும் தோல்விக்காக என் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கம்பீரமாகப் பேட்டி தந்த கேப்டன் அஃப்ரிடி என்னைக் கவர்ந்தார். வெற்றி, போதையைப் போன்றது. சண்டை சச்சரவுகள் இருப்பினும் நமக்கு ஒருநாள் முந்திப் பிறந்த சகோதரன்தான் பாகிஸ்தான். ஆனால், இந்த நினைப்பு ஏனோ இலங்கை மீது வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. வெற்றிக் கோப்பை இரண்டாம்பட்சமாக இருப்பினும் இலங்கையை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருக்கிறது!

கூச்சநாச்சமே இல்லாமல் விருந்தோம்பல் என்றால் என்ன என்று கேட்குமளவில் நீங்கள் இருந்தீர்களானால் சந்தேகமே இல்லாமல் நீங்கள் ஏதேனும் ஒரு சிட்டியில் பிறந்த ஒரு சிட்டிசன்தான். நல்லவேளையாக நம்மில் சிலருக்கு அந்தத் துர்ப்பாக்கியம் நேராமல் கிராமத்தில் பிறந்து தொலைத்து, அப்படியானதொரு விஷயத்தைச் சின்ன வயதிலாவது பார்த்துக் களிக்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது.

வலையோசை : புலம்பல்கள்

என் சின்ன வயதில் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்கள் முகம் தெரியாத வழிப்போக்கர்களாக இருந்தாலும் கூட முதலில் சிரித்த முகமாக வரவேற்று, திண்ணையில் அமரச்சொல்லி தண்ணீர் தந்துவிட்டுதான், 'அவர் யார்? என்ன விஷயமாக வந்திருக்கிறார்?’ என்று விசாரிப்பார்கள்.

ஒருமுறை யாரென்றே தெரியாத, வயதில் முதிர்ந்த ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்தபோது, அவரை உட்காரச்சொல்லி பேசிக்கொண்டு இருந்தார் அப்பா. அவர் வெளியூரில் இருந்து வருவதாகவும் எங்கள் ஊருக்கு அருகில் மெயின் ரோட்டுக்கு குறுக்குவசமாக உள்ள ஒரு சிற்றூருக்குப் போகவேண்டும் என்றும் சொன்னபோது, அவரின் தள்ளாத நிலைகண்டு என் அப்பா, சித்தப்பா ஒருவரைக்கொண்டு சைக்கிளில் அவரை அந்த ஊருக்குக் கொண்டுபோய் விடச்சொன்னார். போகும் முன்பாக அந்த முதியவர் ஒரு விஷயத்தை மிகவும் தற்செயலாகச் சொன்னார். 'இந்த ஊருக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கேன் நான். ஒரு தகராறுல மாட்டிக்கிட்டு தப்பிக்க கொஞ்சநாள் இங்க மறைவா இருக்கலாம்னு வந்தப்போ என்னைய இங்க சாவடி பக்கமாவெச்சு வெட்டிப்புட்டாங்க... அப்போ இங்க முன்சீப்பா கிருஷ்ணபாண்டியன்னு ஒருத்தர் இருந்தார். அவருதான் மாட்டுவண்டியில போட்டு என்னைய அம்பாசமுத்திரம் கொண்டு போய் காப்பாத்துனார். இந்த ஊருக்கு நான் கடன்பட்டு இருக்கேன். அவுருதான் என் கொலசாமி’ என்று சொல்லிவிட்டுப்போனார். அப்பா எதுவும் சொல்லவில்லை. ஆனால், எனக்குத்தான் ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த முன்சீப் என் தாத்தாதான்!

வலையோசை : புலம்பல்கள்

சில வருடங்களுக்கு முன்னால் தென்காசி அருகே உள்ள ஓர் உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். தொடக்கத்தில் அவர்களைக் காணும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஓடிச்சென்று உதவுவேன். ஒருநாள் இதைக்கண்ட நிறுவனர் என்னை அழைத்து, 'உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியம் இல்லை. தேவை எனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும், ஒருவருக்கொருவர் எந்தச் சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தால் அறிந்தேன். நாளடைவில் அவர்களுடைய நிஜமான தேவை என்ன என்பது புரியத் தொடங்கியது!

வலையோசை : புலம்பல்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு