Published:Updated:

என் ஊர்

ஆம்பூரைச் சமத்துவபுரம் என்றும் சொல்லலாம் !ரியாஸ் படங்கள்: ச.வெங்கடேசன்

அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ.
 ஆம்பூர்

 ##~##

''இந்தியாவின் தோல் பொருள் உற்பத்தி யில் இரண்டாவது இடம் வகிக்கும் தொழில் நகரம் எங்கள் ஆம்பூர். பாலாற்றின் கரை ஓர நகரமான இங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வசித்தாலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என எல்லோரும் ஒன்றுபட்டு வாழும் சமத்துவ பூமி என்ற பெருமை எங்கள் ஆம்பூருக்கு உண்டு!'' என்று தன்னுடைய ஊர்ப் பெருமையைப் பேசத் தொடங் கினார் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் மனிதநேய மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டத் தலை வருமான அஸ்லம் பாஷா.

 ''பச்சை ஆடை போர்த்தியதுபோல் நீண்டு படுத்துக் கிடக்கும் மலைத் தொடர் ஆம்பூருக்கு ஓர் அழகான அடையாளம். பச்சக் குப்பம் மேம்பாலத்தைக் கடக்கும் போதே, பசுமை மலைத் தொடரோடு ஆம்பூரின் எல்லை தொடங்கிவிடும். ஆம்பூர் பிரியாணி என்றாலே ருசி பார்க்கும் ஆவலில் எச்சில் ஊறாத நாக்கு இருக் காது. என்னுடைய சிறு வயதில் பருவம் தப்பாது பெய் யும் மழையாலும் ஆக்கிரமிப்புகள் அற்ற நல்லசூழ்நிலை யாலும் ஆண்டுதோறும் பாலாற்றின் நீர்வரத்துபொய்க் காமல் பொங்கிவந்தது. இதனால் பாலாற்றங்கரையில் அமைந்து இருக்கும் ஆம்பூரும் சுற்றுவட்டாரக் கிராமங் களும் விவசாயத்தில் செழித்து விளங்கின. தற்போது பாலாற்றில் நீர்வரத்து என்பதே மறந்துபோன வரலாறு ஆக மாறிவிட்டது.

என் ஊர்

ரயில்வே இருப்புப் பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவை மையமாக இருக்க... ஒருபுறம் ஆம்பூரும் மற்றொருபுறம் ஆம்பூரின் இன் னொரு பகுதியான பெத்லேகம் என்ற பகுதியும் இருக்கும். பெத்லேகமுக்கு ரெட்டித் தோப்பு என்ற பெயரும் உண்டு. இங்கு சுமார் 30 ஆயிரம் பேர் குடியிருக் கிறார்கள். சமத்துவப் பகுதி என்றால்பெத் லேகமுக்குத்தான் பொருந்தும். முஸ்லிம் களுக்கான ஆறு பள்ளிவாசல்கள், இந்துக் களுக்கான எட்டு கோயில்கள், கிறிஸ்துவர் களுக்கான எட்டு சர்ச்சுகள் ஆகியவை இங்கு உண்டு. ஆம்பூர் பகுதியின் பெரிய மருத்துவமனையான பெதெஸ்தா மருத்துவ மனையும் பழமை வாய்ந்த மஸ்ஹருல் ஊலும் கல்லூரியும், ஆரம்பப் பள்ளி,உயர் நிலைப் பள்ளி, மின்வாரிய அலுவலகம் போன்றவையும் இந்தப் பகுதியில்தான் உண்டு. ஆம்பூருக்குக் குடிநீர் கொடுக்கும் ஆசனாம்பட்டு அணையும் பெத்லேகமைக் கடந்துதான் இருக்கிறது. நெடுஞ்சாலைப் பகுதியில் இருந்து பெத்லேகமுக்குச் செல்ல ரயில்வே இருப்புப் பாதைக் குக் கீழே உள்ள குறுகலான கால்வாயைத்தான் பாதையாகப் பயன் படுத்துகிறார்கள். முக்கியமான இந்தப் பகுதிக்கு, அகன்ற பாதை இல்லா தது நெடுநாள் குறையாகும்.

என் ஊர்

இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம் ஆம்பூர் மக்கள் அனை வருக்குமே உண்டு. என்னுடைய இளம்பிராயத்தில் இருந்து என்னுள்ளும் இந்த ஏக்கம் இருந்துவந்தது. தற்போது ஆம்பூரின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நான் முன்னெடுத்த முதல் முயற்சியே பெத்லேகமுக்கான பாதை அமைப்பது தொடர்பான பணிதான்!''

என் ஊர்
அடுத்த கட்டுரைக்கு