Published:Updated:

ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !

அ.அச்சனந்தி, படங்கள்: ஆ.நந்தகுமார்

##~##

வேர்க் கடலையில் இருந்து வெள்ளரிப் பிஞ்சு வரை ரயில் பயணங்களில் விதவிதமாக விற்பவர்களைக் கொஞ்சம் கவனம் செலுத்தி கூர்ந்து கவனித்து இருக்கிறீர்களா? ஒரு குட்டித் தூக்கத்திலோ, ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்ட இசைப் பரவசத்திலோ நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். கொஞ்சம் அவர்களைக் கவனிப்போமா?

திண்டிவனம் அருகே உள்ள கூட்டேறிப்பட்டு,  சின்ன நெற்குணம் கிராமப் பெண்கள் பலருக்கு இந்த ரயில்வே ஸ்டேஷன்தான் பிழைப்பு ஸ்தலம். பொரி உருண்டை, தர்ப்பூசணி பத்தை, நுங்கு, வெள்ளரி விற்றுக்கொண்டு இருந்தவர்களிடம் பேசியதில்...

ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !

'குடியிருக்கிறதே கூட்டேறிப்பட்டுதான். ஸ்டேஷன்  பக்கத்துலயே வீடு. வீட்டுல இரண்டு சென்ட் இடத்துல வெள்ளரி போட்டிருக்கேன். அதை அறுத்துக் கொண்டாந்து விப்பேன். வெள்ளரி சீஸனுக்கு மட்டும்தான் இங்கே வியாபாரம் பண்ணுவேன். மத்த நாள்ல எல்லாம் வேற வேலைக்குப் போய்டுவேன். இதுல வர்ற வருமானம் கைச் செலவுக்குத்தான் ஆவும். அதுக்கே போராடணும். இந்த ஸ்டேஷன் ரொம்பச்  சின்ன ஸ்டேஷனா இருக்கிறதால எல்லா ரயிலும் நிக்காது. தினமும் மூணு ரயில்தான் நிக்கும். அதுவும் கரெக்டா ரெண்டு நிமிஷம்தான். அதுக்குள்ள ஒவ்வொரு பொட்டியா ஓடி ஓடி விக்கணும். ஸ்கூல் லீவு நாள்ல என் பொண்ணும் வந்து விப்பா. ஒரு வெள்ளரிப் பிஞ்சு கட்டு, 10 ரூபாய். வண்டி கிளம்பறதுக் குள்ள ஒரு 10 கட்டாவது வித்துடலாம். 10 ரூபாய் கட்டை ஆறு ரூபாய்க்குக் கொடுப்பியானு பேரம் நடக் கும். இதெல்லாம் சமாளிச்சுத்தான் வியாபாரம் பண்ணணும். உடம்புக்குக் கெடுதியாவே இருந்தாலும் பாக்கெட்ல அடைச்சுக்கொடுத்தா, போட்டு இருக்கிற விலையைப் பேரம் பேசாமக் கொடுத்துட்டுப் போவாங்க. இந்த மாதிரி இயற்கையாக் கிடைக்கிற பொருளுக்குக் காசுகொடுக்க கஷ்டப்படுவாங்க' என்று அலுத்துக்கொள்கிறவர், ''வண்டியில போறவங்க எல்லாம் எங்கே யும் கிராஸிங் போடாம சீக்கிரம் ஊர் போய்ச் சேர ணும்னு நினைச்சா, நாங்க கிராஸிங் போட்டு ரெண்டு டிரெயின் நின்னா கூட வியாபாரம் ஆகுமேனு நினைப் போம்' என்கிறார் உண்ணாமலை.

ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !

பொரி உருண்டை விற்கும் கன்னியம்மாவோ, 'பசங்க எல்லாம் திருப்பூர்ல கல்யாணம் கட்டிக்கிட்டு இருக்கானுங்க. என்னையும் அங்கே வந்துடுனுதான் சொன்னாங்க. எனக்கு என்னவோ சொந்த ஊரை விட்டுட்டுப்போக மனசு வரலை. அதனால இங்கேயே பொரி உருண்டை பிடிச்சு வித்துக்கிட்டு இருக்கேன். காலையில 4 மணிக்கு எல்லாம் எழுந்து 100 பொரி உருண்டை அளவுக்குப் பிடிச்சுவைப்பேன். 100 உருண்டை வித்தா 30 ரூபாய் கிடைக்கும்' என்கிறார்.

ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !
ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !

'நான் சின்ன நெற்குணத்துல இருக்கேன்பா. எனக்கு சோறு போடறதே இந்த ரயில்வே ஸ்டேஷன்தான். எங்க வீட்டுக்காரரு இறந்துட்டாரு. சீஸனுக்கு ஏத்த மாதிரி தர்ப்பூசணி, பலாப் பழம், கொய்யாப் பழம், வேர்க் கடலைனு மாத்தி மாத்தி வாங்கியாந்து விற்பேன். சில நாள் வண்டியிலே ஏறி முண்டியம்பாக்கம் வரை போய் வித்துட்டு வருவேன். புரட்டாசி மாசம் ஆச்சுனா திருப் பதி வண்டி வழியா கூட்டம் வரும். அப்புறம் மருவத்தூர் சீஸனுக்குப் போற சனங்க நிறைய வருவாங்க. இந்தக் காய்ச்ச காலத்துல எதுவுமே சரியா விளையலை. தர்ப் பூசணி விளைச்சலும் சுகப்படலை. 'தானே’ புயலால பலா மரமும் அழிஞ்சுடுச்சு. ஏப்ரல் மாசமெல்லாம் ஸ்டேஷன் முழுக்கப் பலாப் பழ வாசனை அள்ளும். இப்ப பலாப் பழத்தைப் பார்க்கிறதே அதிசயம்தான்' என்று ஆயாசாமாகப் பார்க்கிறார் வெள்ளரிக்கா பாட்டி விருத்தாம்பா!

ரயில் ஓடினா பொழைப்பு ஓடும் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு