Published:Updated:

”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”

T.Nagar

தி.நகர் ஷாப்பிங்

”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”

தி.நகர் ஷாப்பிங்

Published:Updated:
T.Nagar
”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”
”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”

''எங்களோட பூர்வீகம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ. ஆனா, எங்க தாத்தா காலத்துலேயே கோவை மேட்டுப்பாளையத்துல செட்டிலாகிட்டோம். ஸ்கூல் படிச்சதெல்லாம் கோவையில்தான். காலேஜ் படிக்க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
வந்ததுல இருந்து சென்னை வாசி ஆகிட்டேன். சென்னையில் தி.நகர் எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம்!'' - சென்னையில் வெகுநாட்கள் வாழ்ந்த தி.நகர் ஏரியா பற்றி பிரியத்துடன் பேசுகிறார் பாடகி அனிதா. புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி.

''கல்யாணம் முடிஞ்சதும் மயிலாப்பூர்ல குடியிருந்தோம். அது ரொம்பவே அமைதியான ஏரியா. 'ஏங்க என்னங்க ஏரியா இது, ஏதோ தீவுல குடியிருக்கிற மாதிரி இருக்கு. கலகலனு இருக்கிற மாதிரி ஏரியாவுல வீடு பாருங்க’னு அவர்கிட்ட தினமும் சொல்லிக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல தாங்க முடியாம தி.நகர் ரெங்கநாதன் தெருவுக்குப் பின்னால உள்ள தெருவில் ப்ளாட் பிடிச்சார். அங்க எக்கச்சக்கத் தண்ணீர் கஷ்டம். 'வேறு வீடு பாத்துக்கிட்டு போயிடலாம்மா’ன்னார். ஆனா, அதுல எனக்குச் சம்மதம் இல்லை.  அந்த வீட்டு மாடியில இருந்து பார்த்தா முழு ரெங்கநாதன் தெருவும் அப்படியே தெரியும். மாடியிலப் போய் உட்கார்ந்தா நேரம் போறதே தெரியாது.

”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”

மற்ற ப்ளாட்காரங்க எல்லாரும் அவ்வளவு அன்பா இருந்தாங்க. தீபாவளி, பொங்கல் பண்டிகையை எல்லாரும் சேர்ந்தே கொண்டாடுவோம். அதேபோல ஷாப்பிங். நினைச்சதை நினைச்ச நேரத்துக்குப்போய் வாங்கிட்டுவருவேன். கச்சேரிக்காக உலகத்தில் உள்ள பல நாடுகளுக்குப் போயிருக்கேன். அங்க எல்லாம் ஷாப்பிங் செய்யறப்ப கிடைக்காத சந்தோஷம், தி.நகர் ஷாப்பிங்கில் கிடைக்கும். கூட்டத்துல முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்கினாத்தான் ஷாப்பிங் பண்ணின திருப்தியே கிடைக்குது. ஒரே பொருள் ஏழைகளுக்குத் தகுந்த மாதிரி அஞ்சு ரூபாயிலும், பணக்காரங்களுக்குத் தகுந்த மாதிரி 5 லட்சத்திலும் கிடைக்குதுன்னா அது இங்கே மட்டும்தான்.

நான் கர்ப்பமா இருந்தப்ப ரெங்கநாதன் தெருவில் கையேந்தி பவன் இட்லி வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிப்பேன். அங்க காரச் சட்னியோட இட்லி விப்பாங்க. 'அங்கெல்லாம் சாப்பிட்டா இன்ஃபெக்ஷன் ஆகிடும்மா. உனக்கு ரெஸ்ட்ராரென்ட்ல இருந்து வாங்கித் தர்றேன்’னு அவர் கெஞ்சுவார். நான்தான் கேட்கவே மாட்டேன். அதேபோல அந்தத் தெருவிலேயே இன்னோர் இடத்துல ஒரு அம்மாவும், பொண்ணும் மிளகாய் பஜ்ஜி போடுவாங்க. அதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். கண்ணு, மூக்குல தண்ணி வர்ற அளவுக்குக் காரமா இருந்தாலும் அதை ஒரு கை பாக்காம வர மாட்டேன். அந்த பஜ்ஜி போடுற பொண்ணு, எம்.ஏ. பட்டதாரி. 'வேற வேலைக்குப் போகாம ஏம்மா இப்படி கடைபோட்டு கஷ்டப்படுற’னு ஒருவாட்டி கேட் டேன். 'இன்னொருத்தர்கிட்ட கைகட்டி வேலை பாக்குறதுக்குப் பதில் சுயமா வேலை பாக்குறது நல்லதுதானக்கா’ன்னா. அவளுக்கு மட்டுமல்ல, பல பேருக்கு தி.நகர் இப்படி கௌரவமான வாழ்க்கை யைக் கொடுத்து இருக்கு.

”அஞ்சு ரூபாயில் இருந்து அஞ்சு லட்சம் வரை!”

1995-ல தி.நகருக்குக் குடிவந்தோம். 10 வருஷம் கழிச்சு சொந்தமா வீடு கட்டி ராஜாஅண்ணாமலைபுரத்துக்கு வந்தோம். ஆனா, அந்த வீட்டைக் காலி பண்றப்ப அப்படி அழுதேன். என் மூத்த பொண்ணும் அந்த வீட்டைவிட்டு வர மாட்டேன்னு அப்படி அடம்பிடிச்சா. 'உங்களுக்காக லட்சம் லட்சமா செலவு பண்ணி அவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இருக்கேன். இதைவிட்டுட்டு உங்களால வர முடியலையா?’னு என் வீட்டுக்காரர் வருத்தப்பட்டார். தி.நகர்னா அந்தளவுக்கு இஷ்டம்!''

- பானுமதி அருணாசலம்,
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism