Published:Updated:

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

Published:Updated:

ஞானப்பிரகாசம். பத்திரிகையாளர்களுக்கு 'ஸ்டில்ஸ் ஞானம்’, சினிமாத் துறையினருக்குப் 'பொக்கிஷம் ஞானம்’. இவரை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் ரீ-மேக் அல்லது லேட்டஸ்ட் வெர்ஷன் எனலாம். இவருடைய வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் புகைப்படங்கள், புத்தகங்கள்தான். இவருடைய வீட்டை ஒருமுறை வலம்வந்தால் தமிழ் சினிமாவின் முக்கால் நூற்றாண்டு வரலாற்றை அறியலாம். தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய இளம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வரை எனத் திரும்பிய பக்கம்எல்லாம் புகைப்படங்கள், தகவல்களைச் சேகரித்துவைத்திருக்கிறார் ஞானம்.  

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த ஆர்வம் ஸ்கூல் படிக்கும்போதே தொடங்கிடுச்சு. அப்பவே பார்ட் டைமா தேவி ஆர்ட் ஸ்டுடியோவில வேலை பார்த்தேன். ஸ்கூல்ல கடைசி பெல் அடிச்சதும் லேப் வாசல்ல நிப்பேன். தேவை இல்லாத போட்டோஸ், ஃபிலிம் துண்டுகளை எடுத்து சட்டைப் பையில் தெரியுற மாதிரிவெச்சு, ஸீன் போடுவேன். என்னை பசங்க ஆச்சர்யமாப் பார்த்ததுல ஏற்பட்ட போதைதான் இந்த கலெக்ஷன்ல நான் இறங்கக் காரணம்.

அப்ப சிவாஜி சாரின் போட்டோகிராஃபரா இருந்த திருச்சி அருணாச்சலம் சார்கிட்டே அசிஸ்டென்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். டிசைனர் ரூம்ல போட்டோஸை மார்க் பண்ணி பத்திரிகைகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் தருவாங்க. அப்படித்தான் டிசைனர்கள், பத்திரிகை நண்பர்களின் நட்பு கிடைச்சுது.

1988-களில் என்கிட்ட இருந்த பழைய போட்டோக்கள் மொத்தமே 600தான். அப்ப நிறையப் பேர் பழைய போட்டோக்களைக் கேட்டு வருவாங்க. இருக்கிறதைக் கொடுத்து அனுப்புவேன். இல்லாத போட்டோக்களை கேட்கும்போது, 'இல்லையே’னு சொல்லி அனுப்ப சங்கடமா இருக்கும். அதுக்கு அடுத்துதான் பழைய போட்டோஸை தீவிரமாத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில்தான் போட்டோகிராஃபர் அமிர்தத்தின் நட்பு கிடைச்சுது. என் போட்டோஸ் கலெக்ஷன் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அவர் வெச்சிருந்த 400 சினிமாப் படங்களின் ஃபிலிம் ரோல்களை என்கிட்ட தூக்கிக்கொடுத்தார். இதேபோல் ஸ்டில்ஸ் சாரதி, செம்மை ஆனந்த், சங்கர்ராவ்னு பல நண்பர்கள் தங்களோட கலெக்ஷனை கொடுத்தாங்க. இன்னைக்கு என் கலெக்ஷன்ல மூணு லட்சம் போட்டோக்களுக்கு மேல இருக்கு.

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

'படையப்பா’ பட புரமோஷனுக்காக 'அபூர்வ ராகம்’ படத்தில் எடுத்த ரஜினி படங்களைக் கேட்டு இருந்தாங்க. என்கிட்ட அப்ப அந்த போட்டோஸ் இல்லை. 'கொஞ்சம் டைம்தாங்க’னு கேட்டுட்டு, அந்தப் பட போட்டோஸ் இப்ப யார்கிட்ட இருக்குனு தீவிரமாத் தேட ஆரம்பிச்சேன். கடைசியில் ஹைதராபாத்ல இருக்கிற தெலுங்கு சினிமா போட்டோகிராஃபர் ஒருத்தர்க்கிட்ட இருக்குன்னு தகவல் கிடைச்சு போய் வாங்கி வந்தேன்.

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்னு எல்லாரோட போட்டோக்களும் என் கலெக்ஷன்ல இருக்கு. தவிர கன்னடம், தெலுங்குனு எல்லா சினிமா ஸ்டார் போட்டோஸ் கலெக்ஷனும் இருக்கு. நல்ல நண்பர்களை, பத்திரிகையாளர்களை இங்க சிதறிக்கிடக்கிற போட்டோக்கள்தான் எனக்கு அறிமுகப்படுத்துச்சு. இந்தப் பேசாத போட்டோக்கள்தான் பலரைப் பேச வெச்சிக்கிட்டு இருக்கு. என்னை வாழவைக்கிற இந்தப் புகைப்படங்களுக்குக் கோடி நன்றிகள்!’

புகைப்படங்கள்.. ஞானத்தின் பொக்கிஷங்கள்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism