Published:Updated:

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

Published:Updated:

நீதிமன்றம் என்றால் தண்டனை வழங்கும் இடம். அங்கு சட்டம் மட்டுமே பேசும் - இதுதான் பெரும்பாலான மக்களின் மனநிலை. ஆனால், இந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, மன்னிப்பும் மனிதநேயமும் நீதிமன்றத்திலும் சாத்தியம் என்பதை நிரூபித்துவருகிறது சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றம்!

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் கண்ணில்படுகிறது, அன்னை தெரசா ஒரு குழந்தையுடன் இருக்கும் ஓவியம். அதில், 'பகைமையை வளர்க்காதீர். மன்னியுங்கள். பிறர் தவறுகளை நீங்கள் மன்னித்தால் இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பார்’ என்கிற வாசகங்கள் படிப்பவர்களை உருக்குகிறது. ஒவ்வொரு நீதிமன்ற அறையின் முகப்பிலும் அழகிய வண்ணப் படத்துடன் கூடிய வாசகங்கள் சிந்திக்கவைக்கின்றன.

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

இங்கு பணிபுரியும் வக்கீல் ராமசாமியிடம் பேசினேன். ''தமிழகத்துக்கே முன்னுதாரணமாக எங்கள் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் இப்படி ஒரு சீர்திருத்தம். அதற்காகச் சட்டத்தை மீறுகிறோம் என்று தவறாக நினைக்க வேண்டாம். சட்டத்தையும் நீதியையும் மனிதநேயத்துடன் செயல் படுத்துகிறோம்.

வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வருபவர்கள், முடிந்தவரை பகைமையை மறந்து சமாதானமாகப் போக வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.  நீதிமன்றத் துக்கு வருபவர்கள் இறுக்கமான மனநிலையில் இருப்பார்கள். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை உணர வேண்டும். வழக்குக்காக ஆஜராக வருபவர்கள் எதிரிகள் மீது கோபமாக வருவார்கள். அவர்கள் இதுபோன்ற வாசகங்களையும் வண்ணப் படங்களையும் பார்க்கும்போது அவர்களின் ஆக்ரோஷமான மனநிலை சற்றே மட்டுப்படும். அப்போதுதான் நாங்கள் முன்னெடுத்து வைக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் சம்மதிப்பார்கள்.

வேறு எந்த நீதிமன்றத்திலும் இல்லாதபடி இங்கு மட்டுமே கண்ணகி சிலம்புடன் நிற்கும் ஓவியம் இருக்கிறது. அதில், 'உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அச்சம் இல்லாமல் வாதாடுங்கள்; உரிமையை நிலைநாட்டுங்கள்’ என்று எழுதி இருக்கிறோம். 'ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. அந்தப் பழமொழியைப் பொய்யாக்கி, 'சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பதை வலியுறுத்தவே இந்த ஓவியம்.  

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!
சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

இங்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு நீதி முகாம்களில் அதிகப்படியான வழக்குகளைக் கையாள்கிறோம். இங்கு வரும் பெரும்பாலான வழக்குகளில், நாங்களும் நீதிபதிகளும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களும் எடுத்துவைக்கும் அகிம்சை வாதங்களில் சம்பந்தப்பட்டவர்கள், வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு சமாதானமாகப் போய் விடுவார்கள்!

குறிப்பாக, விவாகரத்து வழக்குகள். இங்கு விவாகரத்து கேட்டு வரும் தம்பதியரை தனி அறையில் உட்காரவைத்து, அவர்களை மனம் திறந்துப் பேசவைப்போம். அப்போது அவர்களின் பெற்றோரை அனுமதிக்க மாட்டோம். காரணம், தற்போது நடக்கும் பெரும்பாலான விவாகரத்துகளுக்குக் காரணமே பெற்றோர்தான். தம்பதியர் மனம்விட்டுப் பேசும்போது தங்களுக்குள் இருக்கும் 'ஈகோ’வை மறக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

'சேர்ந்து வாழவே முடியாது’ என்று சபதம் போட்டுக்கொண்டு இங்கு வந்த 10 தம்பதியரை நாங்கள் ஒன்றுசேர்த்து வைத்துள்ளோம். குடும்ப நீதிமன்ற நுழைவாயிலில் இரண்டு வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கிறது.  

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

'கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் மனதார விரும்புங்கள். முழுமையாக நம்புங்கள்’. 'திறக்க முடியாத பூட்டும் இல்லை; தீர்க்க முடியாத பிரச்னையும் இல்லை, சமாதானத்துக்கு முயலுங்கள்’ என்கிற இந்த வாசகங்களை படிக்கும்போது அவர் களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலே போதும். அதுவே எங்களுக்குக் கிடைக்கும் வெற்றி.  வழக்கை நடத்தியே ஆக வேண்டும் என்றால், வழக்கின் முடிவில் ஒருவர் வெற்றி பெறுவார்; ஒருவர் தோல்வி அடைவார். ஆனால், சமாதானத்தில் மட்டும்தான் இருவரும் வெற்றி பெறுவார்கள்...'' என்கிறார் புன்னகையோடு!

அர்த்தமுள்ள வார்த்தைகள்!

சமாதானத்தில் மட்டுமே இருவருக்கும் வெற்றி!

ம.சபரி,
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism