Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

QR Code - ஒரு கழுகுப் பார்வை...

 அஞ்சல் தலை போன்ற சதுர வடிவில் கறுப்பு, வெள்ளை கசமுசப் படிமங்களுடன் இருக்கும் இந்த வடிவங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டொயோட்டா கார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட QR Code. 'க்விக் ரெஸ்பான்ஸ் கோட்’  என்பதன் சுருக்கமே QR Code. கார் தயாரிப்பு தொழிற் சாலையில் பல்வேறு பாகங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு எனக் கண்டறியப்பட்ட QR Code கேமரா அலைபேசியின் பயன்பாடு அதிகரித்ததும் தொழிற்சாலைகளுக்கு வெளியேயும் பிரபலமாகியது. இந்த வசதியைப் பயன்படுத்தி பல்வேறு துறைகள் QR Code  வசதியைத் தங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்திக்கொண்டாலும், விளம்பரத் துறை அதில் உச்சத்தைத் தொட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவைப் பொறுத்தவரை,   QR Code பிரபலமானது இரண்டு வருடங்களுக்கு முன்புதான். நியூயார்க்கில் இருக்கும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் உள்ள பிரமாண்ட ஃப்ளெக்ஸ் போர்டுகளில் இந்தச் சதுர வடிவ வில்லை காட்டப் பட, பலருக்கு அது என்ன என்பதே புரிய வில்லை. டெக் ஞானம்உள்ள சிலர் தங்க ளுடைய அலைபேசியை எடுத்து ஃப்ளெக்ஸ் போர்டில் இருக்கும் QR Code ஐ நோக்கி ஸ்கேன் செய்து விளம்பரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, அதைப் பார்த்து மற்றவர்களும் அதையே பின்பற்ற, QR Code  விளம்பரத் துறையின் முக்கியமான பகுதியானது. இப்போது, விமான நிலையங்களில் இருந்து பள்ளிக்கூட பார்க்கிங்வளாகங்கள் வரை பல இடங்களில் QR Codeகளைப் பார்க்க முடிகிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஒரு பக்கத்துக்குள் தேவைப்படும் விவரங்களைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதிக விவரங்களுக்கு QR Codeஐ ஸ்கேன் செய்யுங்கள் என்று சொல்லி, அந்த         QR Code கொண்டுசெ

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ல்லும் இணையதளப் பக்கத்தில் அதிக விவரங்களைக் கொடுப்பது பழக்கமாகிவருகிறது. இந்தத் தொழில்நுட்பத்துடன் இடம் சார்ந்த சேவையையும் (Location Based Service) இணைத்துவிட்டால், அதற்கு ஹார்ட்லிங்கிங்  (Hardlinking)   என்று பெயர். உங்களது அலைபேசியில் ஜி.பி.எஸ். வசதி இருந்தது என்றால், குறிப்பாக எந்த இடத்தில் இருந்து அதைப் பெற்றுகொண் டீர்கள் என்பதையும் இணைத்துவிட முடியும்.

யாருக்குத் தெரியும்... எதிர்காலத்தில் சிறுகதைகள் QR Code வடிவில் எழுதப்பட... நீங்கள் அலைபேசியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து முழுக் கதையையும் படிக்கக் கூடும். இப்போதைக்கு, விகடனின் அலை மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வசதியாக QR Codeகள் இருக்கின்றன. ஸ்மார்ட் போன் வைத்திருந்தால், னிஸி ஸிமீணீபீமீக்ஷீ ஒன்றைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பாருங்களேன்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

சமீபத்தில் சான்ஃபிரான்சிஸ்கோவில் இருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்த வேளையில்,அதே விமானத்துக்காகக் காத்திருந்தவர்களில் ஒருவர் நல்ல நண்பர். அவர் பயணிப்பது எனக்கோ, நான் பயணிப்பது அவருக்கோ தெரியாது. பல மாதங்களாக அவரைச் சந்திக்கவில்லை என்பதால், அடுத்த ஆறு மணி நேரப் பயணத்தில் அருகில் அமர்ந்து பேசலாம் என்றால், விமானம் நிறைந்துவிட்டது; இருக்கைகளை மாற்ற முடியாது என்று கை விரிக்க, பயணத்தின்போது ஒரே விமானத்தில் அமர்ந்து சில வரிசைகளுக்கு அடுத்து அமர்ந்திருந்த அவருடன் கணினி மூலமாக சாட் செய்யும் விநோதத்தை நிகழ்த்த வேண்டியதாயிற்று!

சென்ற வாரத்தில் ஹாலந்தைச் சேர்ந்த கே.எல்.எம். நிறுவனம் அட்டகாசமான திட்டம் ஒன்றை வெளியிட்டது. வணிக நிறுவனங்களின் வாசலில் நின்றபடி, வரும் வாடிக்கையாளரை வரவேற்பதை மீட் அண்ட் க்ரீட் (Meet & Greet)  என்பார்கள். தமிழக நகரங்களில் கொடி கட்டிப் பறக்கும் ஜவுளிக் கடைகளின் நுழைவாயில்களில் மீட் அண்ட் க்ரீட்களைப் பார்க்கலாம்.  கே.எல்.எம். விமான நிறுவனம் மீட் அண்ட் சீட் என்ற பெயரில் வெளியிட்டிருக்கும் இந்தத் திட்டத்தின்படி, உங்கள் பயணத் தைப் பதிவுசெய்யும்போது, உங்களது ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட் இன் விவரங் களைக் கொடுத்துவிட வேண்டும். அதைப் பயன்படுத்தி, அதே பயணத்தில் இருக்கும் மற்ற பயணிகளின் விவரங்களைத் தெரிந்துகொண்டு, கே.எல்.எம். தளம் குறிப்பிட்ட நபருக்கு அருகில் இருக்கையை ஒதுக்கிக் கொடுக்கும். உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து பாரிஸுக்கு வர்த்தக மாநாட்டுக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே விமானத்தில் அதே மாநாட்டுக்குச் செல்லும் வேறு ஒருவரும் இருக்கிறார் என்றால், நீங்கள் அவர் அருகில் அமர்ந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுக்கிறது இந்தத் திட்டம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

மேல் விவரங்களுக்கு இந்த உரலியைச் சொடுக்குங்கள்...

http://www.klm.com/travel/us_en/prepare_for_travel/on_board/Your_seat_on_board/meet_and_seat.htm

விமானப் பயணம் மட்டும் அல்ல... பள்ளியில் பல வருடங்களுக்கு முன் ஒன்றாகப் படித்த நண்பனின் திருமணம் வருகிறது. திருமண விருந்தில் உங்களது பழைய நண்பர் பட்டாளம் யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து, நீங்கள் ஒரே மேசையில் அமர்ந்து கூத்த டிக்கவும் முன்கூட்டியே திட்டம் தீட்டலாம். திருமண வைபவங்களைத் திட்டமிட உதவும் இணையதளங்கள் இப்போது சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமாகிவருகின்றன. அவற்றில் சிலவற்றையும் அதே டெக்னிக்குகளை மற்ற துறைகளில் இருப்பவர் களும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

Log off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism