Published:Updated:

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

Published:Updated:
”வகுப்பறையில் நான் கலைஞர்!”

மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன், 'இயக்குநர் இமயம்’ பாரதி ராஜா, தான் பிறந்து வளர்ந்த அல்லிநகரம் பற்றிப் பேசுகிறார்.

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''சின்ன வயசுல நான் பார்த்த அல்லிநகரம் வேற... இப்ப இருக்கிற அல்லிநகரம் வேற. அப்ப எல்லாம் ஊருக்குள்ள மொத்தமே நாலு தெருதான் இருக்கும். அப்போ அல்லிநகர     பஞ்சாயத்துல தேனியே உள்ளடங்கி இருந்துச்சு. பஞ்சாயத்து போர்டு ஆபீஸும் நல்ல தண்ணி கிணறும்தான் ஊரோட முக்கிய அடையாளங்கள். அதிகாலை நாலு மணிக்கு எல்லாம் ஊர்ல இருக்கிற இளம் பெண்கள் ஒண்ணாக் கூடி இடுப்புல குடத்தைவெச்சிக்கிட்டு நல்ல தண்ணிக் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறதைப் பார்க்கவும், 'கோவிந்தா’ போட்டுப் பாடுற பஜனைப் பாடல்களைக் கேட்கவும் அவ்வளவு ரம்மியமா இருக் கும்.

ஊருக்கு மேற்கே இருக்கிற 'நந்தவனம்’ பகுதி யில ஒரு குளம் இருந்துச்சு. அங்க ஒரு மண்டபம் இருக்கும். சின்ன வயசுல அந்த மண்டபத்துல உட்கார்ந்துதான் கதை எழுதிப் பழகினேன். என் சோட்டு பசங்கள்லாம் ஒண்ணுகூடி நாடகத் துக்குப் 'பட்டறை மேடு’ தெருவுல பயிற்சி எடுப் போம். பட்டறை மேடுல பெரிய ஏத்தம் ஒண்ணு இருக்கும். சைக்கிள்ல ஏறி நின்னு மிதிச்சாலும் அந்த ஏத்தத்தைத் தாண்ட முடியாத அளவுக்கு அவ்வளவு உயரம்.

இப்ப மிகப் பெரிய வியாபார ஸ்தலமா இருக்கிற 'கீரைக்கல் தெரு’ அப்ப ரொம்பச் சின்னதா இருந்துச்சு. மக்கள் அங்கே கிடைக்கிற கீரை, புல்லுக்கட்டுகளை வாங்குறதுக்காக விடியகாலையிலேயே இங்கே வந்துடுவாங்க. அதனாலதான் இந்தத் தெருவுக்குக் 'கீரைக்கல் தெரு’னு பேர் வந்துச்சு. அந்தத் தெருவுலதான் எங்க வீடும் இருந்துச்சு. தினமும் எங்க தெருவுல இருந்து வீட் டுக்கு ஒரு பையன் வீதம் ஒண்ணுகூடி ஏரியா பாதுகாப்புக்காக ராத்திரி முழுக்க ரோந்துவரு வோம். இதனால எல்லாரும் திருட்டுப் பயம் இல்லாமல் நிம்மதியா இருந்தாங்க. அப்ப தேனி அல்லிநகரத்தைவிட ரொம்பச் சின்ன ஊரா இருந்துச்சு.  விவசாயிகளும் வியாபாரிகளும் சம அளவில் செழிப்பா இருந்தாங்க. ஆனா, நாளடைவில வியாபாரிகள் மட்டும் வளர, விவசாயிகள்நலிவு அடைய ஆரம்பிச்சுட்டாங்க. தொழிற்சாலை கள் பெருகியது, விவசாய நிலங்கள் குறுகியதுனு பல காரணங்களால காலப்போக்குல அல்லி நகரத்தைவிட தேனி வளர்ந்திருச்சு. ஏழாம் வகுப்புப் படிக்கிற வரைக்கும் ஒருநாள்கூடஉருப் படியா வகுப்புக்குப் போனது இல்லை. புத்தகப் பையை எங்கேயாவது வெச்சுட்டு லெட்சுமி தியேட்டர் பக்கத்துல பொன்வண்டு பிடிக்கப் போயிருவேன். அந்தக் காலகட்டங்கள்ல சிவாஜி படங்களையும் கலைஞர் வசனம் எழு தின படங்களையும் பார்த்துட்டு அந்த வசனங் களைப் பேசுவேன். வகுப்புல தமிழ் துணைப் பாடப் பகுதி நடத்துற அன்னைக்கு மட்டும் கரெக்டா போய் முன்வரிசையில உட்கார்ந்துப் பேன். வாத்தியார் என்னை ஏதாவது ஒரு கதையை எழுந்து படிக்கச் சொன்னார்னா கலைஞர் மாதிரி ஏத்த இறக்கத்தோட படிச்சுக் காட்டுவேன். இதை எல்லாம் கவனிச்ச என் தமிழ் வாத்தியார் சுந்தரம்பிள்ளை, 1956-ல் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எனக்குப் பள்ளிக்கூடத்துல நடந்த 'தமிழ்ச்செல்வம்’ என் கிற நாடகத்துல வில்லன் வேஷம் கொடுத்தாரு. அதுதான் எனக்கும்  நாடகத்துக்குமான முதல் பிணைப்பு. அப்போ பயிற்சியில நான் நடிச்ச தைப் பார்த்த என்  வாத்தியார், 'நீயே டைரக்ட் பண்ணுடா!’னு சொன்னாரு. நான் தயங்கினதும், 'நீ நல்லா நடிக்கிறே. நீ எப்படி நடிக்கிறியோ அதே நடிப்பை மத்தவங்கக்கிட்டயிருந்து வாங்கு’னு டைரக்ஷனோட அடிப்படையை மிக எளிமையாப் புரியவெச்சார்.

பள்ளிக்கூடத்துல நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த அல்லிநகரம் போஸ்ட்மேன் சங்கரும் டெய்லர் மணியும் 1958-ல் அல்லிநகர வீரப்பன் கோயில் திருவிழாவில் அரங்கேறின 'மறைந்த மாணிக்கம்’கிற நாடகத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்பு வாங்கித் தந்தாங்க. அப்புறம் 'அல்லி கலா மன்றம்’கிற பேருல மதுரை, திண்டுக்கல், தேனிப் பகுதி முழுவதும் நெறைய நாடகங்கள் போட ஆரம்பிச்சு தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை வரைக்கும் போய் நாடகம் போட் டோம். இப்படி ஆரம்பிச்ச கலை ஆர்வம்தான் என்னை சினிமாவுக்குள் இழுத்துட்டு வந்துச்சு.  

நான் எங்கே போனாலும் என் பால்ய காலத்து அல்லி நகர நினைவுகளும் நிகழ்வுகளும் என்றுமே என் மனதில் சுகமாக நிழலாடும்!''

”வகுப்பறையில் நான் கலைஞர்!”

சந்திப்பு: உ.அருண்குமார் 
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism