Published:Updated:

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

Published:Updated:

'விபத்து நடந்தா அவசர உதவிக்கு 108-ஐக் கூப்பிடுவாங்க. எங்கயாவது பாம்பைப் பார்த்தா பயத்தில் அப்பா, அம்மாவைக் கூப்பிடுவாங்க. ஆனா தேனி சுத்து வட்டாரத்துல பாம்பைப் பார்த்தா, என்னைக் கூப்பிடுவாங்க சார்!''- செம ஜாலியாகப் பேசுகிறார் தேனி வீரபாண்டியைச் சேர்ந்த 'பாம்பு’ ரமேஷ். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, செல்போன் சிணுங்குகிறது. ''ரமேஷ் சாரா? போடிப்பக்கம் இருந்து பேசுறோம். கோழிப் பண்ணைக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திருக்கு. சீக்கிரம் வாங்க!'' என்று எதிர்முனையில் பதற்றமான குரல் வர, ''இதோ வர்றேன்'' என்று நண்பர் செல்லத்துரையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தார் ரமேஷ். நாமும் அவரோடு இணைந்துகொண்டோம்.

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போடிப் பக்கம் சென்றதும் மலைச்சாமி என்பவருடைய கோழிப் பண்ணையில், தென்னை மரத்தைச் சுற்றி போடப்பட்ட கோழிப் பண்ணை சந்தில், நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. ரமேஷ§ம், செல்லத்துரையும் விறகுகளை விலக்கிவிட்டு, பாம்பைப் பிடிக்க முயன்றபோது, ஆவேசமாகச் சீறியபடி கொத்தவந்தது அந்தப் பாம்பு. இருவரும் லாகவமாக விலகித் தப்பினார்கள். 10 நிமிடப் போராட்டத்துக்குப் பின் அதன் வாலைப் பிடித்து இழுக்க, கூடவே வந்தது இரண்டு குட்டிப் பாம்புகள். 'ஓ ஃபேமிலியோட இருக்கீங்களா?'' என்றவர், குட்டியையும் பிடித்தார். ''ரொம்பத் தாகமா இருக்கும். கொஞ்சம் தண்ணி குடிக்கவிட்டுட்டு அப்புறம் காட்டுக்குள்ள விட்டுடலாம்!'' என்றவர், அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டார். ''நல்ல பாம்பு தண்ணிக்குள்ள முங்கினா அதோட படம் அழிஞ்சிரும்கிறது மூட நம்பிக்கை'' என்று ரமேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, படம் எடுக்கப் போன நம் போட்டோகிராஃபரின் கேமராவை நச்சென்று கொத்தியது நல்ல பாம்பு. ''படத்துக்கே படமா?'' என்று கிண்டல் அடித்தவர், ''பாம்பில் பல வகைகள் இருந்தாலும் மொத்தம் ரெண்டு பிரிவுகள்தான். விஷம் உள்ளது, விஷம் இல்லாதது. இந்த ஏரியாக்களில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்புனு விஷம் உள்ள பாம்புகள் நிறையவே இருக்கும். இதில் நல்ல பாம்பு கொத்தினால் மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். சுருட்டையும் கண்ணாடி விரியனும் தாக்கினால் ரத்த மண்டலம் பாதிக்கப்படும். பெரும்பாலும் பாம்பு கடித்து, அதன் விஷத்தால் யாரும் இறப்பது இல்லை. 'ஐயோ பாம்பு கடிச்சிருச்சே’ங்கிற பயத்துலதான் நிறையப் பேர் இறந்து போறாங்க. பாம்பு கடிச்சதும் பயத்துல ஓடுவாங்க. அப்போ ரத்த ஓட்டம் அதிகமாகி, அதோட விஷம் உடம்பு எல்லாம் சீக்கிரமே பரவிடும். பயத்துல இதயத் துடிப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்துல விஷம் கலக்குற வேகம் அதிகமாகும்.

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

முதல் விஷயம் பாம்பு கடிச்சா பயப்படக் கூடாது... பதற்றப்படக் கூடாது. கடிபட்ட இடத்தைச் சுற்றி இறுக்கமாத் துணி கட்டி, தைரியமா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாலே உயிர் பிழைச்சிரலாம். பாம்பு கக்குன ரத்தினக் கல்னு நிறையப் பேரை ஏமாத்துறாங்க. அதெல்லாம் ஃபிராடு பிஸினஸ். பாம்புகளோட வயித்துல அந்த மாதிரி எந்தக் கல்லும் உருவாகாது.

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

பாம்புகளைப் பார்த்து பயப்படக் கூடாது. நாம தொந்தரவு தராத வரை அது நம்மளைத் தாக்காது. தொந்தரவா நினைச்சாக்கூட, எச்சரிக்கைக்கொடுத்துட்டுதான் தாக்கும். காடு, வயல்வெளினு எங்கேயாவது பாம்பு கடிச்சா, அவசரத்துக்கு எருக்க இலைகளைச் சாப்பிட்டா உயிர் பிழைச்சிரலாம். முன்னாடியே சொன்ன மாதிரி அந்த நேரத்துல எருக்க இலைகளைத் தேட மன தைரியம் ரொம்ப முக்கியம். நெற்பயிர்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துறதால பாம்புகள் விவசாயிகளுக்கும், நமக்கும் நல்ல நண்பன்!'' என்கிறார் சிரித்தபடியே. சீற்றம் தணிந்து படம் எடுத்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது 'நல்ல’பாம்பு.

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism