Published:Updated:

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

Published:Updated:

ந்தியாவிலேயே முதன்முறையாகத்  தூத்துக் குடி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) உறுப்பினர் ஆகி இருக்கிறார் விஜி என்கிற திருநங்கை. 

##~##

விஜியுடன் பேசுவதற்கு முன், 'லோக் அதாலத்’ என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். சிவில், விவா கரத்து, ஜீவனாம்சம், சொத்துத் தகராறு போன்ற பிரச்னைகளை இங்கு கொண்டுவந்தால், நீதிமன்றக் கட்டணம் தவிர வேறு எந்தச் செலவும் இல்லாமல் அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துவைப்பார்கள். உதாரணமாக அண்ணன் - தம்பி நிலத் தகராறு என் றால் இருவரையும் அழைத்துப் பேசி, யாருக்கு எவ்வளவு வரும் என்பதைப் பேசி புரியவைத்து, பிரித்துக்கொடுத்து சமரசம் செய்து  தீர்ப்பு வழங்குவது. இதில் இருவருக்கும் உடன்பாடு இருக்கும் பட்சத்தில், நீதிமன்றக் கட்டணம் திரும்ப அளிக்கப்படும். மேலும் இங்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து வேறு எந்த நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய முடியாது என்பது கூடுதல் தகவல். இங்கு சென்றால் காலவிரயம், வீண் செலவும் தவிர்க்கப் படும். இனி விஜியிடம் பேசுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்களைப் பற்றி?''

''திருநங்கையா மாறுறதுக்கு முன்னாடியே என் பேர் விஜிதான். இப்பவும் அப்பா, அம்மாகூடத்தான் இருக்கேன்!''

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

''எப்போ திருநங்கையா மாறுனீங்க?''

''நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது, எனக்குள் பெண்மை உணர்வு உருவாக ஆரம்பிச்சுது. ஆம்பளைப் பசங்களோட பேசமாட்டேன். அவங்ககூட விளையாட மாட்டேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, அப்பா டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போனார். டாக்டர் நிறைய கவுன்சிலிங் கொடுத்தார். இருந்தாலும் ஒரு பெண்ணுக்கான உணர்வு அதிகமாகிக்கிட்டே  இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போது பேச்சு வழக்கு, நடை, பாவனை எல்லாமே பொண்ணு மாதிரி மாறிடுச்சு. 2000-ல் மெட்ராஸ் வந்துட்டேன். அப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னார். ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நான் விரும்பலை. 2006-ல் பெங்களூரு போய் பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகிட்டேன். அப்புறம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'சமூகத் தொழில் முனைவோர் பயிற்சி’ படிச்சேன். உடனே சென்னை பேராயத்துல ரீஜினல் புரொகிராம் ஆபீஸர் வேலை கிடைச்சுது. ரெண்டு வருஷம் அங்க வேலை பார்த்தேன்!''

''எப்போ வீட்டுக்குத் திரும்பி வந்தீங்க?''

''2006-ல ஊருக்குத் திரும்பி வந்தேன். அப்பா, அம்மா என்னைப் பார்த்ததும் கதறி அழுதாங்க. சொந்தக்காரங்க என்னை ஏத்துக்கலை. நானும் கவலைப்படாம ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 'அன்பு டிரஸ்ட்’னு  ஒரு அமைப்பை ஏற்படுத்தி திருநங்கைகள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்புறமா என்னை ஏத்துக்கிட்டாங்க. தென் மாவட்டங்களில் உள்ள திருநங்கைகள் பெற்றோர் புறக்கணிப்பால் மும்பை, புனே போன்ற நகரங்களில் வாழ்றாங்க. அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்து, அவங்க பெற்றோரோடு சேர்த்துவைக்கும் வேலையைச் செய்யறேன்!''

''மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினர் ஆகும் வாய்ப்பு எப்படி வந்தது?''

''கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த மகளிர் ஆணையம், திருநங்கை நல வாரியத்தில் திருநங்கைகளுக்காக வேலை செய்ய தமிழ்நாடு முழுக்க ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தாங்க. தென் பகுதியில் ஆறு மாவட்டத்துக்கு வேலை செய்ய நான் தேர்வு செய்யப்பட்டேன். அப்புறம் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டத்துக்கு எய்ட்ஸ் விழிப்பு உணர்வுப்  பயிற்சி யாளரா இருக்கேன். தூத்துக்குடி மாவட்ட ரெட் ரிப்பன் கிளப்பில் உறுப்பினரா இருந்து விடலைப் பருவத்தினருக்கு ஏற்படும் பிரச்னை கள், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பாலியல் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் கொடுக் கிறேன். கவுன்சிலிங் வர்றவங்களுக்கு ஏற்படுற பிரச்னைகளுக்கு மக்கள் நீதிமன்றம் மூலமா தீர்வு காண்பேன். இந்த மாதிரி நான் நிறைய சோஷியல் சர்வீஸ் செய்யறதைப் பார்த்துட்டு, மக்கள் நீதிமன்ற நீதிபதி குருவையா என்னை உறுப்பினர் ஆக்கியிருக்கார்!''

''திருநங்கைகள் ஏன் பாலியல் தொழிலில் ஈடுபடுறாங்க?''

''திருநங்கைகளை யாரும் வேலைக்குச் சேர்த்துக்கிறது இல்லை. நிறைய கிண்டல், அவமானங்களைச் சந்திக்க வேண்டி இருக்கு. ஒருவேளை யாராவது திருநங்கைகளுக்கு வேலை கொடுத்தாலும் கூட வேலை பார்க்குற ஆண்களோட பாலியல் தொந்தரவைச் சந் திக்க வேண்டி இருக்கு. இவைதான் திருநங் கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடக் கார ணம். நல்ல வேலை, அமைதியான வாழ்க்கை கிடைச்சா யாரும் பாலியல் தொழிலைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. திருநங்கை களுக்குப் பாலியல் தொழில் ஒரு வயித்துப் பொழைப்புதான்!''

''திருநங்கைகளை மற்றவர்கள் எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க?''

''திருநங்கைகளைத் தப்பான கண்ணோட் டத்தில் பார்க்காதீங்க. நாங்க உங்களில் ஒருத்தவங்கதான். எங்களுக்கும் மானம், மரியாதை இருக்கு. பஸ்ஸில் பக்கத்துல தயக்கம் இல்லாம உட்காருங்க. எங்களைப் பிரிச்சுப் பார்க்காதீங்க. நீங்க எங்களை வெறுத்தாலும், நாங்க உங்களை நேசிக்கிறோம்!'' நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார் விஜி.

”நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் நேசிக்கிறோம்!”

-ஆ.கோமதி நாயகம்
படம்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism