Published:Updated:

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

Published:Updated:
”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

''இந்த ஊரில் வெகு காலத்துக்கு முன்பு முருகன் என்ற சலவைத் தொழிலாளி இருந்தார். அவருக்குத் திராவிடர் கழகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு. அதனால் நெடுஞ்செழியன், க.அன்பழகன், மா.நன்னன் ஆகியோரை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார். ஒரு முறை, இந்த ஊரில் இருந்த பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, அவரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். இதைக் கேள்விப்பட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், 'ஏம்பா... முருகா உன் பெயரை மாத்திவெச்சுக்கப்பா’ என்று சொன்னது மட்டும் அல்லாமல், அவர்களே அவருக்கு 'வணக்கம்’ என்ற பெயரையும் சூட்டினார்கள். அதற்குப் பிறகு ஏதேனும் வேலைக்கு இவரைக் கூப்பிடுவதாக இருந்தால், 'வணக்கம் இங்கே வா...’ 'வணக்கம் அங்கே போ...’ என்று ஏவல்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். யார் யாரை வெறுத்து ஒதுக்கினார்களோ, அவர்களே அவரை 'வணக்கம்’ சொல்லி கூப்பிட்டார்கள். இப்படிப் பல வித்தியாசமான கலகங்கள் எல்லாம் இந்தக் குறிஞ்சிப்பாடியில் நடந்து இருக்கின்றன!'' என்று எடுத்தவுடன் தன் ஊர் பற்றிய கலகச் செய்தியுடன் ஆரம்பிக்கிறார் திராவிடர் கழக - மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்.

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''கடலூர் மாவட்டத்தில் மிகப் பழமையான ஊர் இது. குறிஞ்சி நில மன்னன் இங்கே பயிற்சிப் பாசறைகளை, அதாவது 'பாடி’களைவைத்து நடத்தியதால், இந்த ஊர் குறிஞ்சிப்பாடி என்று பெயர் பெற்றதாகச் சொல்வார்கள். கடலூர் மாவட் டத்தில் முதல் கருஞ்சட்டைப் படை மாநாட்டை பெரியார் இந்த ஊரில்தான் நடத்தினார். வெகு காலம் காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக இந்த ஊர் இருந்திருக்கிறது. அதனால் பெருந்தலைவர் காமராஜர் முதற்கொண்டு கலைஞர் வரை பலரும் இந்த ஊருக்கு வருகை தந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, அவர் களின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் நான்.

சிறு வயதில் எனக்குப் பெயர் பெரிய மண்ணாங் கட்டி. எனக்குப் பின் என் தம்பிக்குச் சின்ன மண்ணாங்கட்டி என்று பெயர். பள்ளியிலும் இதே பெயரைக் கொடுத்தபோது, அங்கே இருந்த சீனிவாசன் என்ற ஆசிரியர் எனக்கு சந்திரசேகரன் என்றும், என் தம்பிக்கு ஞான சேகரன் என்றும் பெயர்வைத்தார். அப்போது 'பராசக்தி’ படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டு இருந்த நேரம். அதில் சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்று மூன்று பேர் வருவார்கள். அவர்களை நினைத்து வைத்தாரோ என்னவோ, என் அப்பாவின் பெயர் துரையுடன் சேர்ந்து சந்திரசேகரன் என்பது நிலைத்து விட்டது.

'பராசக்தி’ பட கதாபாத்திரங்களின் பெயர் களைச் சூட்டிக்கொண்ட காரணமோ என்னமோ ஒரு வருடத்துக்கு 400 படங்கள் பார்த்த அனுப வங்கள் எல்லாம் உண்டு. அன்று பல சினிமாக் களை புரொஜெக்ட் செய்து காட்டிய ராஜா தியேட்டர், வருங்காலத்தில் பலரைத் திருமணம் எனும் சினிமாவில் புரொஜெக்ட் செய்ய மண்டபமாக மாறிவிட்டது.

மாணவப் பருவத்தில் எங்கள் ஊரில் இருந்த அணைக்கட்டு என்னும் இடம்தான் என்னைஒரு பேச்சாளனாக வளர்த்தெடுத்தது. அணைக் கட்டில் நின்றுகொள்வேன். கீழே நீர் ஓடிக் கொண்டு இருக்கும். அதை மக்கள் கூட்டமாக நினைத்துக்கொண்டு, உரக்கக் கத்திப் பேசுவேன். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, நெய் வேலியில் நடைபெற்ற கூட்டமொன்றில்தான் தந்தை பெரியாரை முதன்முதலாகச் சந்தித்தேன். அந்தத் தொண்டுப் பழத்தின் அறிவுச் சுடரில் என்னை இழந்தேன்.

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

திராவிட இயக்கத்தின் மீதான என் ஆர்வம் அதிகரித்தது. அந்த ஆர்வம் கடலூரில் நான் படித்த அரசுக் கல்லூரியின் பெயரை, பெரியார் அரசு கலைக் கல்லூரியாக மாற்ற என்னைப்போராடத் தூண்டியது. வெற்றியும் கிட்டியது.

இப்படி எங்கள் ஊர் என்னைப் போன்று பல கறுப்புச் சட்டைக்காரர்களையும்கலகக்காரர் களையும் பார்த்திருந்தாலும், அதனுடைய இயல்பை அது எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. மாரியம்மன் கோயிலுக்கு உடலில் அலகு குத்திக்கொள்ளும் 'செடல்’ உற்சவமும் சுப்பராயன் கோயிலில் நடக்கும் 'பங்குனி உத்தி ரமும்’ எங்கள் ஊரில் கொண்டாடப்படும் இரு பெரும் விழாக்கள். மாரியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, கோயிலுக்கு வெளியே தனியே அம்மன் சிலை ஒன்றைவைத்து இருப்பார்கள். இத்தகைய தீண்டாமையை எதிர்த்தும் நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம். இன்று,கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் செல்லலாம். எங்கள் ஊரில் பலரும் எளிமையான நெசவா ளர்கள் என்பதால் அவர்களைப் போலவேஅவர் களின் உணவுப் பழக்கமும் மிக எளிமையானது. எள், வெல்லம், தேங்காய்ப் பூ ஆகியவற்றைச் சேர்த்துச் செய்த கேழ்வரகுப் புட்டு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்தப் பகுதி மக்கள் மீன் அதிகம் சாப்பிடும் வழக்கம் உடையவர்கள். பொடி மீனைக் குழம்புவைப்பார்கள். மறுநாள் அந்தக் குழம்பில் போட்ட பச்சை மிளகாயை மட்டும் தனியாக எடுத்து பழைய சோறுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். எங்கள் பகுதியில் 'சொயமா உருண்டை’ என்றுஒன்றைச் செய்வார்கள். அரிசி, மைதா, தேங்காய், கட லைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் செய்த அந்த உருண்டைதான், எங்கள் ஊரின் அவசரப் பலகாரம். இந்த ஊரில் இன்னமும் ஐம்பது பைசாவுக்கு இட்லி கிடைக்கிறது. 14 ரூபாய்க்குச் சாப்பாடு கிடைக்கிறது!''

”வணக்கம் இங்கே வா... வணக்கம் அங்கே போ!”

கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism